இறைவனைப் போல் காட்சி அளிக்க இறை பக்தி அவசியம், பெண்ணே!!

 

நம் நாட்டில் அநேக பெண்களுக்கு இறை பக்தி அதிகம்., சிலருக்கு குறைவு. எகிப்திய பெண்கள், இறைவன் இல்லை என்று நம்புகிறார்கள். ஆனால், அதிகமான பெண்கள் தன் குடும்பத்திற்காக தினந்தோறும் இறைவனை தொழுது பயபக்தியோடு குடும்பத்தை நடத்துகிறார்கள். இப்பகுதியில் இறைவனை பற்றி விளக்கமாக பார்ப்போம்..
ஆண்டவர் என்பவர், அன்பின் வடிவம். ஆண்டவர் என்பவர், இந்த உலகிலுள்ள அனைவரையும் சமமாக மதிப்பவர். ஆண்டவரால் மட்டுமே அதிசயம் செய்ய முடியும். ஆண்டவர் என்பவர், அன்பால் மகிழ்பவர்., அமைதியில் வாழ்பவர்.,அமுதமாய் இனிப்பவர்., அறிவால் சிரிப்பவர்., ஏழை–பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்க தெரியாதவர். இப்படி ஆண்டவரை ஒரு பக்கம் சிலர் புகழ்ந்தாலும், சிலர் ஆண்டவரை , “ஆணவச்சின்னம்., அபாயச்சின்னம்., அச்சத்தின் சின்னம்., மனிதனின் கண்டுபிடிப்பு., மூட நம்பிக்கையின் சிறை., பிரிவினை வாதத்தை உருவாக்குபவர்., அன்பின் பகைவர்., அறிவின் எதிரி., சுய நல சொத்து., உயிரற்ற உருவம்., பாவத்தின் போர்க்களம்., பேசமுடியாதவர்., உதவ முடியாதவர், உலாவ முடியாதவர்., உயிர் கொடுக்க முடியாதவர்., படைக்க முடியாதவர்., மனதை கெடுக்க நினைப்பவர்., உண்மைக்கு புறம்பானவர்., நீதிக்கு எதிரானவர்., அதிசயம் செய்ய முடியாதவர்“ என்று சொல்வார்கள்.
ஆனால் பெண்ணே, நான் விளக்கமாக சொல்கிறேன்… ஆண்டவர் என்பது, நிஜம். நம் ஒவ்வொருவருடைய எண்ணங்கள் வேறு பட்டு இருந்தாலும், ஆண்டவர் என்பவர், நமது எண்ணத்திற்கு ஏற்ப வெவ்வேறு விதத்தில் நமக்கு உதவிகள் செய்கிறார். மேலும் அதிசயங்களை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நம் வாழ்வில் செய்து கொண்டிருக்கிறார். இறைவன் ஒருவர் மட்டும்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்கிறார். அந்த ஆட்சி செய்யும் ஆண்டவர் யார் தெரியுமா? அறிஞர்களே, விஞ்ஞானிகளே, கவிஞர்களே, உழவர்களே, ஆசிரியர்களே,. அரசியல்வாதிகளே., தொழில் அதிபர்களே நீங்கள் எல்லோரும் மனிதர்களே. அது போல, உலகை ஆட்சி செய்யும் ஆண்டவரும் மனிதர்தான். மனிதர் என்றால், அவர் மனிதர் அல்ல., அவர் மனிதர் மூலமாக நம் குறைகளை நிறைவு செய்பவர் என்று அர்த்தம். இதனால்தான் நான் இறைவனும் மனிதர் என்று சொல்கின்றேன். இந்த இறைவனை, கல்லில், மரத்தில், சின்னங்களில், கல்லறைகளில் காணிக்கை செலுத்தி, அதற்கு உயிர் கொடுத்து, மண்டியிடுவதை விட, நம் முன்னால் இருக்கும் மனிதர்களுக்கு உதவுவது, மிகவும் சிறந்தது ஆகும்.
அவர் நேரடியாக வந்து மக்களுக்கு உதவி செய்வது இல்லை., அவர் உதவுவது எல்லாம், மற்ற மனிதர்கள் மூலமே. இதை அறியா மனித குலத்தினர்,ஆண்டவனுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். ஆனால்,ஏழைகளுக்கு உதவுவது இல்லை. ஆண்டவனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்., ஆனால் அழும் ஏழை குழந்தைக்கு, ஒரு கிண்ணம் பால் கூட தருவது இல்லை. ஆண்டவன் பெயரை சொல்லிக்கொண்டு, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு, சாகட்டும் என்று அநேகர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான், கயவர்கள், கொலை காரர்கள், அரசியல் வாதிகள்.
இன்னும் சமுதாயத்திலும், நாட்டிலும் இறைவன் இருக்கும் இடங்களிலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் அதிசயம் என்னவென்றால், இத்தனை காரியங்களையும் அவர்கள் இறைவனை வணங்கி விட்டே செய்கிறார்கள். அவர்கள் எண்ணம் என்னவென்றால், தவறுகள் செய்து விட்டு, இறைவனிடம் மன்னிப்பு கேட்டால், இறைவன் மன்னித்து விடுவார் என்று எண்ணி, துணிந்து தொடர்ந்து தவறுகள் செய்கிறார்கள்.
ஆனால், தொடர்ந்து தெரிந்து செய்யும் தவறுகளுக்கு ஒரு போதும் மன்னிப்பு கிடையாது என்பதை முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அன்பு சகோதரிகளாய், குடும்பத்தில் வாழ வேண்டியவர்களை, இன்றைய சமுதாயம் கொலை காரிகளாகவும், கொள்ளைக்காரிகளாகவும், விபச்சாரிகளாகவும்,. இந்த கயவர்கள் மாற்றி விடுகிறார்கள். அநேக குடும்ப பெண்கள், இறைவனை தொழுது வணங்கி, குடும்பத்தை நடத்துவதை விட்டு விட்டு, விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியில், அவர்களது கவனமும் அதில் செலுத்தப்பட்டு, அடுத்த தலைமுறையின் வாழ்க்கையே, ஒரு கேள்விக்குறியாகும் நிலைக்கு இன்று தள்ளி விடப்பட்டு விட்டது. இதற்கு காரணம், அறிவால், அன்பால், அமைதியாய், அமுதமாய் இருக்க வேண்டிய குடும்ப பெண்கள், இன்று கம்ப்யூட்டர் முன், தொலைக்காட்சிகளின் முன், தங்கள் நேரத்தை செலவழித்துக்கொண்டு இருக்கிறார்கள். பெண்ணே!, உனக்கு தெரியாமலேயே, நீ இதற்கு அடிமையாகி விடுகிறாய். மேலும் உன்னுடைய இயற்கையான சுபாவங்கள் மாறி, செயற்கையான சுபாவங்கள் உன்னுள் புகுந்து விடுகிறது. இதனால் குடும்பமே தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறது.
இம்மண்ணுலகில் வாழும் எல்லோரும் அதிசயம் செய்து, உண்மை பேசி, பிறரை நேசித்து, அன்பாய், அமைதியாய் வாழ பிறந்தவர்கள். இதை மறந்து இன்று மனிதர்கள் மிருகங்களாகி விட்டார்கள். இந்நிலை மாற வேண்டுமானால், நம் குடும்பத்தில் யாரொருவர் தவறான காரியங்களை செய்தாலும், குறிப்பாக கணவர், பிள்ளைகள் எல்லோருடைய வாழ்க்கையும் சிறப்பாக, செழிப்பாக, உண்மையுள்ள மனிதர்களாக, இவ்வுலகில் வாழ வேண்டுமானால், தினந்தோரும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டியது, குடும்ப பெண்ணாகிய உன்னுடைய கடமையாகும்.
நீங்கள் மாறுங்கள், மகிழ்ச்சியாய் வாழுங்கள்., எப்படி இம்மண்ணில் அனைத்தையும் படைத்து ஆண்டவர் அதிசயம் செய்கிறாரோ, அது போல நீங்களும் உங்கள் அருகாமையில் உள்ள மனிதர்களுக்கு உதவி செய்து மற்றவர்களுக்கு இறைவனாய் காட்சி அளியுங்கள். அப்போது எல்லா மனிதர்களும், உங்களை வாழ்த்துவார்கள்., வணங்குவார்கள் பெண்ணே!!!.Designer-Silk-Sarees-Online-shopping-at-Pavitraa

 
 
 
 

This post has been viewed 1,046 times