திருமணம் – வாழ்வின் ஆரம்பம்

 

Tanishq-14

திருமண வாழ்வின் ஆரம்பமும், அதன் முடிவும் இனிமையானவைகள். அந்த ஆரம்பத்திற்க்கும், முடிவிற்க்கும் இடையில் உள்ள காலத்தை கடந்து செல்வதென்பது கடினமானது. ஒரு திராட்சை ரசத்தின் மதிப்பு அதன் பழமையை பொருத்து மதிப்பிடப்படுகிறது. அதுபோல் திருமண உறவும், அது பழமையடையும் போதுதான் வெகுவாக உயர ஆரம்பிக்கிறது.

பல தம்பதிகள் தங்கள் உறவு பழமையடைவதை விரும்புவதும் இல்லை, அதை விடுவதும் இல்லை. எப்போதும் புத்தம் புதிதாய் இருக்க வேண்டும் என்பதே இதன் காரணம். எப்போதும் புதுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பும் போது, அது புளிப்படைய வாய்ப்பில்லையே.

ஒரு வீட்டில் வசிக்கும் கணவனும், மனைவியும் பார்த்துக்கொள்வது என்பது அன்றாட நிகழ்வு தான் என்றாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தருணங்களில் முதன் முதலாக பார்ப்பது போன்ற பரவசத்தை உணர ஆரம்பிக்கின்றனர். பரவசப்படுத்தும் தன்மை உடைய காரியங்கள் மீது நமக்கு சலிப்பு உண்டாக வாய்ப்பில்லை. இது தம்பதிகள் மனதில் நல்லதொரு புரிதலையும், நல்ல அனுபவத்தையும் கொடுக்கிறது.

தனக்கு மனைவியாக போகிறவளை நேசிப்பது ஒரு காதலனுக்கு மதுரமான அனுபவமாக இருக்கிறது. ஆனால் தனக்கு மனைவியாகி விட்டவளை திருமணமான புதிதில் நேசித்தது போல பின் வரும காலங்களில் நேசிப்பது கசப்பானதாகி விடுகிறது. இந்த சூழ்நிலை மிக பெரிய ஏமாற்றத்தை பெண்களிடத்தில் ஏற்படுத்துகிறது. திருமணமான புதிதில், பெண்ணின் காலில் குத்தும் முள், கணவனின் இதயத்தில் குத்தியது போல உணர்கிறான். ஆனால், ஆண்டுகள் பல கடந்த பின், அதே பெண்ணின் காலில் முள் குத்தும் போது ‘பார்த்து வரக் கூடாதோ’ என்று பெண்ணிடன் ஆண் கோப்படுகிறான். இதனால், பெண்ணானவள் உள்ளம் நொந்து போகிறாள்.

ஆண், அழகை காண்கையில் மயங்குகிறான். பெண், அன்பான பேச்சை கேட்கையில் மயங்கி விடுகிறாள். இதனால் தான் ஒரு பெண் தான் வருணிக்கப்படுவதை அதிகம் விரும்புகிறாள். இதற்கு மாறாக, ஒரு ஆண், தான் வர்ணிக்க தேவையான வடிவத்தை அதிகம் விரும்புகிறான். இதற்கு மாறாக நடக்கும் பொழுது குடும்பத்தில் சமாதானக் குறைவு ஏற்பட்டுவிடுகிறது.

கணவன் – மனைவி உறவு என்பது, டீ தூள் போன்றது. சுடுதண்ணீரில் ஊற்றப்படும் பொழுது தேயிலை தூளுக்குள் மறைந்து இருக்கிற தன்மை வெளிப்படுகிறது. இதே போன்று தான் தம்பதிகள் இருவருக்குள்ளும் மறைந்துள்ள தனித்தன்மையே வெளிக்கொணரும் போது அவர்களின் வாழ்க்கை  வலிமையுள்ளதாக, சிறப்பானதாக மாறும்.

திருமண வாழ்வின் முற்பகுதியில் தம்பதிகளுக்கிடையே உண்டாகும் பரவசத்தை விட திருமணத்தின் பிற்பகுதியில் அனுபவித்தினால் வரும் பரவசம் ஆழமானது, ஆனந்தமானது.

வாழ்க்கை என்பது சிந்திப்பவர்களுக்கு இன்பமாக இருக்கிறது, உணர்ச்சி கொள்பவர்களுக்கு துன்பமாக இருக்கிறது. ஆகையால் சிந்தித்து வாழ்க்கையை இன்பமாக மாற்றிடு பெண்ணே!

– லீனா லிவி

 
 
 
 

This post has been viewed 1,441 times