ஜார்ஜ் சொரெஸ் 2. ஆரம்பகால வாழ்க்கை

 

ஜார்ஜ் சொரெஸ் 2. ஆரம்பகால வாழ்க்கை

ஹங்கேரிய அமெரிக்கராகப் பிறந்த ஸ்க்வார்ட்ஸ் ஜியோர்ஜி, ஒரு செலாவணி சாதனையாளர், பங்கு முதலீட்டாளர், தொழிலதிபர். அவரைப்பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி பகுதியை பார்ப்போம்….

1944-ம் ஆண்டு மார்ச் மாதம் நாஜி ஜெர்மனி ஹங்கேரி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய போது, சொரெஸின் வயது 13. யூதக் கழகம் ஒன்றிற்காக சொரெஸ் பணி புரிந்து வந்தார். இது ஹங்கேரியில் நாஜி குடியிருக்கையில், நாஜி மற்றும் ஹங்கேரிய அரசாங்கம் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டாயமாக மேற்கொண்ட காலத்தில் நிறுவப்பட்டது. பின்னாளில் இந்தக் காலகட்டத்தைப் பற்றி எழுத்தாளர் மைக்கேல் லூயிஸிடம் சொரெஸ் இவ்வாறு விவரித்தார்:..

Soros-cc-cc-565x379

வெளியேற்ற அறிவிப்புகளைக் கொடுக்குமாறு சிறு குழந்தைகளை யூதக் கழகம் கேட்டுக் கொண்டது. யூதக் கழகத்திற்குச் செல்லுமாறு எனக்குப் பணிக்கப்பட்டது. அங்கே என்னிடம் சிறு காகிதத் துண்டுகளைக் கொடுத்தனர்… காலை ஒன்பது மணிக்கு “ரபி செமினரி” என்னும் ஒரு யூத இறைக் கழகத்திற்குச் செல்லுமாறு அது கூறியது… என்னிடம் இந்தப் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டது. இந்தக் காகிதத்துண்டை நான் என் தந்தையிடம் கொண்டு சென்றேன். அவர் உடனே அதைப் புரிந்து கொண்டார். அது ஹங்கேரிய யூத வழக்கறிஞர்களின் பட்டியலாகும்.

அவர் கூறினார்: “இந்தக் காகிதத் துண்டுகளைக் கொடுத்து, அங்கே சென்றால், நாடு கடத்தப்படுவார்கள் என்று அவர்களிடம் சொல்.” தனது மகன் நாஜிக்களிடம் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக, சொரெஸின் தந்தை விவசாய அமைச்சகத்தின் ஊழியர் ஒருவருக்குப் பணம் அளித்து 1994–ம் ஆண்டின் வேனிற் காலத்தை சொரெஸ் அவருடன் அவரது வளர்ப்பு மகனாகக் கழிப்பதற்கு ஏற்பாடு செய்தார். அதிகாரிகள் யூத மக்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளையில், இளம் சொரெஸ் தனது யூத அடையாளத்தை மறைத்துக் கொள்ள நேர்ந்தது.

இதை அடுத்த வருடத்தில், நகரெங்கும் வீட்டுக்கு வீடு சோவியத் மற்றும் ஜெர்மானியப் படைகள் சண்டையிட்ட புடாபெஸ்ட் போரினின்றும் சொரெஸ் தப்பிப் பிழைத்தார். 1945–46 ஆகிய வருடங்களில் ஹங்கேரியின் மிகுபண வீக்கம் நிகழ்ந்த காலத்தில், சொரெஸ் முதன் முதலாக செலாவணிகளிலும் மற்றும் நகைகளிலும் வர்த்தகம் செய்தார்.

1947–ம் வருடம் சொரெஸ் இங்கிலாந்திற்குக் குடியேறி அங்கு லண்டன் பொருளாதாரப் பள்ளியில் 1952–ம் வருடம் பட்டம் பெற்றார். கார்ல் பாப்பர் என்னும் தத்துவவாதியின் மாணாக்கராக இருக்கும்போதே, புகைவண்டி நிலையத்தில் சுமை சுமப்பவராகவும், உணவு பரிமாறுபவராகவும் சொரெஸ் வேலை செய்தார். பல்கலைக் கழக ஆசிரியர் ஒருவர் சொரெஸிற்காக உதவி வேண்டி, குவேக்கர் கொடை ஒன்றிலிருந்து 40 பவுண்டுகள் பெற்றார். இறுதியில், சிங்கர் அண்ட் ஃப்ரைட்லேண்டர் என்னும் லண்டன் வணிக வங்கியில் துவக்க நிலைப் பணியாளராக அவர் நியமனம் பெற்றார்.

1956–ம் வருடம் சொரெஸ் நியூயார்க் நகரத்தில் குடியேறினார். இங்கு அவர் 1956–ம் ஆண்டு முதல் 1959–ம் ஆண்டு வரை எஃப்.எம்.மேயர் என்பவருடன் விலை வேற்றுமை சமரச வணிகராகவும், 1959–ம் ஆண்டு முதல் 1963–ம் வருடம் வரை “வெர்ட்தெய்ம் அண்ட் கம்பெனி” என்னும் நிறுவனத்தில் பகுப்பாய்வாளராகவும் பணியாற்றினார். இக்கால கட்டம் முழுவதும் சொரெஸ் கார்ல் பாப்பரின் சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்த “எதிர்வு” என்னும் தத்துவக் கருத்தாக்கத்தினை மேம்படுத்தலானார். சொரெஸ் பயன்படுத்திய பொருளில் “எதிர்வு” என்பதானது, எந்த ஒரு சந்தையிலும் அதன் பங்கேற்பாளர்களால் கொள்ளப்படும் மதிப்பீட்டு நடவடிக்கைகள், அந்தச் சந்தையின் அவ்வாறான மதிப்பினை சுழற்சிக்கு ஏதுவான ஒரு “பண்புற்ற அல்லது குற்றமுற்ற” வட்டத்தின் வழியே பாதிக்கும் என்னும் ஒரு அனுமானமாகும்.

20150113_soros
இருப்பினும், தாமே முன்வந்து முதலீடு செய்யாதவரை ,இந்த எதிர்வுக் கருத்தாக்கத்தினால் தம்மால் பொருள் ஈட்ட இயலாதென சொரெஸ் உணர்ந்து கொண்டார். முதலீடுகளில் எவ்வாறு ஈடுபடுவது என்று அவர் ஆராயலானார். 1963–ம் வருடம் முதல் 1973–ம் ஆண்டு வரை அர்னால்ட் அண்ட் எஸ்.பிலெசியோடர் என்னும் நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியினை அவர் அடைந்தார்.

இறுதியாக, தாம் ஒரு தத்துவவாதி அல்லது அதிகாரி என்பதை விடவும் ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பதாக சொரெஸ் முடிவு செய்தார். 1967–ம் ஆண்டு அவர் தாம் நிர்வகிப்பதாக,”முதற் கழுகு “என்னும் பெயரில் அயல்நாட்டு முதலீட்டு நிதி ஒன்றினை அமைக்குமாறு தமது நிறுவனத்தை வற்புறுத்தினார். 1969–ம் வருடம் சொரெஸிற்காக, அந்நிறுவனம் “இரட்டைக் கழுகு இழப்புக் காப்பீட்டு நிதி” என்னும் இரண்டாவது நிதியமைப்பு ஒன்றை நிறுவியது.

1973–ம் வருடம், தாம் விரும்பியவாறு அந்நிதியமைப்புகளை கையாள இயலாதவாறு, முதலீட்டு விதிமுறைகள் கட்டுப்படுத்தியபோது, அவர் தமது பதவியைத் துறந்து, “குவாண்டம் நிதி”என்பதாக இறுதி வடிவம் பெற்ற தனிப்பட்ட முதலீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவினார். ஒரு எழுத்தாளராகவும், தத்துவவாதியாகவும் தம்மைக் காத்துக் கொள்ள தேவையான பணத்தை, வால் வீதியில் ஈட்டுவதே தமது நோக்கமாக இருந்தது என்று அவர் உரைத்துள்ளார். இதற்கென ஐந்து வருட காலத்தில் 500,000 டாலர் ஈட்டுவது சாத்தியமென்று அவர் கணக்கிட்டார். 1980–ம் வருடம் இந்த நிதியமைப்பிலிருந்து சொரெஸ் ஓய்வு பெற்றார். இந்நிதியின் பிற பங்காளிகள் விக்டர் நெய்டெர்ஹோஃபெர் மற்றும் ஸ்டான்லி டிரக்கன்மில்லர் ஆகியோரை இணைத்துக் கொண்டுள்ளனர். 2007–ம் ஆண்டு சொரெஸிடம் 2.9 பில்லியன் டாலர்களை அளித்து குவாண்டம் நிதி ஏறத்தாழ 32 சதவிகிதத்தை திருப்பிவிட்டது…

 
 
 
 

This post has been viewed 384 times