ஜார்ஜ் சொரெஸ் – போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம்

 

ஜார்ஜ் சொரெஸ்

4.போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம்

ஹங்கேரிய அமெரிக்கராகப் பிறந்த ஸ்க்வார்ட்ஸ் ஜார்ஜ் சோரெஸ், ஒரு சிறந்த தொழில் அதிபர். செலாவணி சாதனையாளர், பங்கு முதலீட்டாளர். அவரைப்பற்றி கடந்த இதழ்களில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி பகுதியை பார்ப்போம்…

2009–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் மாநிலத்திற்கு 35 மில்லியன் டாலர் நன்கொடையினை சொரெஸ் அளித்தார். இது மூன்று முதல் 17 வயது வரை உள்ள வசதியற்ற குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. நலன் அட்டை கொண்டிருந்த பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு 200 டாலர் வீதம், தகுதி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையில் எந்த வரம்புமின்றி, இது வழங்கப்பட்டது. 2009–ம் ஆண்டின் கூட்டரசு வசூல் சட்டம் வழியாக பெறப்பட்ட நிதியிலிருந்து கூடுதலாக 140 மில்லியன் இந்த நிதியில் சேர்க்கப்பட்டது.

george-soros-the-world-is-running-into-something-it-doesnt-know-how-to-handle

அமெரிக்காவிற்கான ஊடக விஷயங்கள் (Media Matters for America) என்னும் சுய-விவரிப்பு முற்போக்கு காவற்குழுவினுடனும் தொடர்புற்றிருப்பதாக சோரெஸ் கருதப்பட்டார். சொரெஸிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதியுதவி பெறவில்லை என ஊடக விஷயங்கள் குழு மறுத்துரைப்பினும், 2008–ம் ஆண்டு சொரெஸ் தனது இல்லத்தில் அளித்த விருந்து நிழ்ச்சி ஒன்றில் ஊடக விஷயங்கள் குழுவின் நிறுவனரான டேவிட் பிராக் மற்றும் லிபரல் கட்சி விமர்சகர் பால் பெகலா ஆகியோர் பங்கேற்றனர்.

2008 யூ.எஸ். அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக அப்போது நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் மெக்கெயினை அரசியல் ரீதியாகத் தாக்கி விளம்பரங்கள் வெளியிட 40 மில்லியன் டாலர்கள் திரட்டுவதான திட்டத்தை பிராக் விவரித்தார். இது அமெரிக்கா மற்றும் முற்போக்கு ஊடகத்திற்கான நிதி என்னும் குழுவின் வழியாகச் செய்யப்படும் என்று அவர் கூறினார். பொலிடிகோ.காம் என்னும் வலைத்தளத்தின்படி, இக்குழுவின் பிரதான ஆதரவாளர் சொரெஸ் ஆவார்.

“நியூ ஸ்டேட்ஸ்மேன்” பத்திரிகையைச் சார்ந்த நெயில் க்ளார்க்கின் கூற்றுப்படி, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமைக் கருத்தாக்கம் சிதைந்ததில் சொரெஸின் பங்கு பிரதானமானது. 1979–ம் ஆண்டு முதல், போலந்து நாட்டின் சொலிடாரிடி இயக்கம், செக்கோஸ்லாவாக்கியாவின் சார்ட்டர் 77, சோவியத் ஒன்றியம் ஆண்டிராய் சகாரோவ் ஆகியவற்றை உள்ளிட்ட பல எதிரியவாதிகளுக்கு சொரெஸ் வருடத்திற்கு 3 மில்லியன் டாலர் அளித்து வந்தார் என்று கிளார்க் கூறுகிறார். 1984–ம் வருடம் அவர் ஹங்கேரியில் தனது முதல் திறந்த சமுதாய நிறுவனம் (Open Society Institute) ஒன்றை நிறுவி, எதிர்த்தரப்பு இயக்கங்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கு பல மில்லியன் டாலர்களை அளித்தார்.

சோவியத் கூட்டரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, சொரெஸின் நிதியுதவி முந்தைய சோவியத் கோளத்தில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. ஜார்ஜியா வின் “ரோஸ் புரட்சி”யின் வெற்றிக்கு அவரது நிதியுதவியும் உருவாக்கமும், முக்கியமானதாக மேற்கத்திய மற்றும் ரஷியப் பார்வையாளர்களால் கருதப்பட்டன. இருப்பினும், தமது பங்களிப்பு “மிகவும் மிகைப்படுத்தப்பட்டது” என்றே சொரெஸ் கூறினார். ஜார்ஜியாவின் பாதுகாப்புக் குழுச் செயலாளரும் முன்னாள் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சருமான அலெக்சாண்டர் லோமியா, சோரெஸ் அறக்கட்டளையின் திறந்த சமுதாய ஜார்ஜியா அறக்கட்டளையில் 50 பணியாட்களையும், 2,500,000 டாலர் மதிப்புள்ள வரவு-செலவுத் திட்டத்தையும் மேற்பார்வையிட்டு வந்த அதன் முன்னாள் செயல் இயக்குநர் ஆவார்.

முன்னாள் ஜார்ஜிய வெளியுறவு அமைச்சரான சலோமே ஜௌராபிசிவிலி, (Salomé Zourabichvili) சொரெஸ் அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள், ”குடியரசாக்கத்தின் தொட்டில்” என்றும், சொரெஸ் அறக்கட்டளையை நோக்கி ஈர்க்கப்பட்ட அனைத்து அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் புரட்சியை மேற்கொண்டு எடுத்துச் சென்றன என்பதை மறுக்க இயலாதெனவும் எழுதினார். புரட்சிக்குப் பிறகு சொரெஸ் அறக்கட்டளையும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் அதிகாரத்தில் ஒருங்கிணைந்து விட்டதாக அவர் கருதினார்.

ஓரளவேனும் ஆதிக்க அதிகாரமுடைய பல நாடுகளிலும், குடியரசு மற்றும் ஒளிவு-மறைவற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான சொரெஸின் ஆதரவு இகழ்ந்துரைக்கப்பட்டது. கஜகஸ்தான் மற்றும் துருக்கிமெனிஸ்தான் ஆகியவற்றில் சோரெஸ் ஆதரவு பெற்ற குடியரசு-ஆதரவு முன்னேற்பாட்டுப் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. துருக்கியிலுள்ள ஒளிவு-மறைவற்ற சமூக இயக்கக் கழகம் (சோஷியல் டிரான்ஸ்பேரன்ஸி மூவ்மெண்ட் அசோசியேஷன் டிஎஸ்ஹெச்டி) என்பதன் தலைவரான எர்சிஸ் குர்த்துலஸ் ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறினார்:- –”இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி உக்ரைனிலும் ஜார்ஜியாவிலும் சொரெஸ் தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்…

கடந்த வருடம், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அந்நியர்களிடம் நிதியுதவி பெறுவதைத் தடை செய்து சிறப்புச் சட்டம் ஒன்றை ரஷியா இயற்றியது. துருக்கியிலும் இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.” 1997–ம் ஆண்டு, பெலாரஸ் அரசால் “வரி மற்றும் செலாவணி விதி மீறல்”களுக்காக 3 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், சோரெஸ் அங்கு தமது அறக்கட்டளையை மூட நேர்ந்தது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, பெல்லாரஸியன் அதிபரான அலெக்சாந்தர் லகாஷெங்கோ, பெல்லாரஸ் சொரெஸ் அற

க்கட்டளை மற்றும் பிற சுதந்திரமான அரசு சாரா தொண்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பொதுமக்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை அடக்கவும் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்காக, மேற்கத்திய நாடுகளிலும், ரஷியாவிலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இத்தகைய அபராதங்களை “சுதந்திரமான சமுதாயத்தை அழிக்கும்” பிரசாரத்தின் ஒரு பகுதியே என்று சொரெஸ் அறிவித்தார்.

2009–ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய ஐரோப்பா மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றிற்கு, ஏழ்மையான தன்னார்வலக் குழுக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக சொரெ நன்கொடை அளித்துள்ளார்.
தெற்கத்திய ஆப்பிரிக்காவிற்கான திறந்த சமுதாய முன் நடவடிக்கை (The Open Society Initiative for Southern Africa) என்னும் அமைப்பு சொரெஸ்- இணை நிறுவனமாகும்.

அதன் ஜிம்பாப்வே இயக்குனரான காட்ஃப்ரே கன்யெஞ்ஜ் (Godfrey Kanyenze), ஜிம்பாப்வே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (ஜிம்பாப்வே காங்கிரஸ் ஆஃப் டிரேட் யூனியன்ஸ்- (இஜட்சிடியு)) என்பதனையும் இயக்குகிறார். இதுவே ஜிம்பாப்வேயில் ஆட்சி மாற்றம் உருவாவதற்கு முதன்மையாகப் பாடுபட்ட உள்நாட்டு அமைப்பான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் என்பதன் பின்னால் உந்து சக்தியாக இருந்தது.

Annual Fall Meetings Of The IMF and World Bank

போதை மருந்துக் கோட்பாடு சீர்திருத்த முன்னேற்றம் தொடர்பான உலகார்ந்த முயற்சிகளுக்காக சொரெஸ் நிதியுதவி அளித்துள்ளார். 2008–ம் வருடம் மஸாசுசெட்ஸ் மாநிலத்தில், ஒரு அவுன்ஸிற்கும் (28 கிராம்) குறைவான அளவில் மரிஜுவானா வைத்திருத்தலை குற்ற நடவடிக்கை என்பதலிருந்து விலக்கம் செய்வதற்கான, மஸாசுசெட்ஸின் அறிவார்ந்த மரிஜுவானா கோட்பாடு முன்முயற்சி Massachusetts Sensible Marijuana Policy Initiative) என்றறியப்பட்ட ஒரு வாக்களிப்பு முறைமையை வெற்றிகரமாக நிறைவேற்ற 400,000 டாலர் நன்கொடை அளித்தார்.

கலிஃபோர்னியா, அலாஸ்கா, ஒரேகான், வாஷிங்டன், கொலரோடா, நெவாடா மற்றூம் மைனே ஆகிய மாநிலங்களிலும் இதையொத்த முயற்சிகளுக்கு சொரெஸ் நிதியுதவி அளித்துள்ளார். சொரெஸிடமிருந்து நிதியுதவி பெற்ற போதை மருந்து குற்றவிலக்குக் குழுக்களில் லின்டெஸ்மித் மையம் மற்றும் போதை மருந்துக் கோட்பாடு அறக்கட்டளை ஆகியவை அடங்கும்.

2001–2003–ம் ஆண்டுகள் தொடங்கி செயல்பாட்டில் இருந்து வரும் அமெரிக்காவில் மரணம் என்பதன் மீதான செயற்திட்டம், (The Project on Death in America) திறந்த சமுதாய நிறுவனத்தின் செயற்திட்டங்களில் ஒன்றாகும். இது, “இறத்தல் மற்றும் கையறு நிலை ஆகியவற்றின் கலாச்சாரம் மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு உருமாற்றம் செய்வதற்கான” முயற்சியாகும்.

1994–ம் வருடம், தாம் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில் ஹெம்லாக் சமூகம் என்பதன் உறுப்பினரான தமது தாய் தற்கொலை செய்து கொள்ளத் தாம் உதவி புரிந்ததாக சொரெஸ் குறிப்பிட்டார். அதே சொற்பொழிவில், தாம் நிதியாதரவு அளித்த பிரசாரமான ஒரேகான் சுயமரியாதையுடன் இறத்தல் சட்டம் என்பதற்கும் அவர் தமது ஏற்பிசைவைத் தெரிவித்து இருந்தார்.

 
 
 
 

This post has been viewed 334 times