கன்சியாம் தாசு பிர்லா

 

கன்சியாம் தாசு பிர்லா

220px-GDBIRLAUCOBANK

ஜி. டி. பிர்லா என்று அறியப்படும் கன்சியாம் தாசு பிர்லா, இந்தியத் தொழில்துறையின் முக்கியத் தூண்களில் ஒருவரும், பிர்லா சாம்ராஜ்ஜியத்துக்கு அஸ்திவாரம் இட்டவருமாகவும், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருதான பத்ம விபூஷணை 1957-ல் பெற்றவராகவும் அறியப்படுகிறார்.
ஜி. டி. பிர்லா, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் சூன்சூனு மாவட்டத்திலுள்ள பிலானி என்னும் சிறுநகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் 1894 ஏப்ரல் 10–ம் நாள் பிறந்தார். உள்ளூரிலேயே ஒரு ஆசிரியரிடம் எண் கணிதம் மற்றும் இந்தியில் ஆரம்பக் கல்வியை கற்றார். தந்தையும் வியாபாரி என்பதால் அவரது உதவியுடன் கொல்கத்தா சென்று வியாபார உலகில் அடியெடுத்து வைத்த ஜி.டி. பிர்லா, அவரது குடும்ப தொழிலான தரகு வியாபாரம் செய்தார். பின்னர் பிர்லா சணல் தொழிற்சாலையைத் தொடங்கினார். இவர் வர்த்தகத்தில் ஈடுபட்டது, ஐரோப்பிய வியாபாரிகளுக்குப் பிடிக்கவில்லை. இவரது வளர்ச்சியைத் தடுக்கும் முனைப்பில் ஈடுபட்டனர். ஆனால் எல்லாத் தடைகளுக்கும் தாக்குப்பிடித்தார்.
முதல் உலகப் போரின் தாக்கத்தால், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் வியாபாரத்தில் திணறிக்கொண்டிருந்தது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்; இவரது வியாபாரம் அசுர வளர்ச்சி கண்டது. 1919–ல் உலகப் போர் முடிந்தவுடன், பிர்லா அண்டு பிரதர்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில் குவாலியரில் ஜவுளி ஆலை தொடங்கினார். இது ரயான் என்கிற சிந்தடிக் ஆடைகள் பிரபலமடைய காரணமாக இருந்தது.

06emami5
18–ம் நூற்றாண்டில், பிற்காலத்தில் பிர்லா குழுமம் என்கிற தொழில் சாம்ராஜ்ஜியத்துக்கு அடித்தளம் போட்டவர், ஷிவ் நாராயண பிர்லா என்பவராவார். இவர், மார்வாடிகளின் பாரம்பரியமான வட்டிக்கடை வியாபாரத்தில் இருந்து பருத்தி வியாபாரத்துக்கு மாறினார். புதிய தொழிலைச் செம்மையாகச் செய்வதற்காக, சொந்த மாநிலமான ராஜஸ்தானிலுள்ள பிலானியிலிருந்து, மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குப் போய்த் தங்கி வியாபாரத்தில் நல்ல லாபம் கண்ட பிறகு, பிலானிக்குத் திரும்பிச் சென்று அங்கு ஒரு பெரிய வீடு கட்டினார். அந்தக் கட்டிடம் இன்றும் “பிர்லா பங்களா’ என்ற பெயரில் விளங்குகிறது.
நாராயண பிர்லா குடும்பத்தினரால் தத்து எடுக்கப்பட்ட பல்தேவ் தாஸ் பிர்லா என்பவரும் பூல் சந்த் சொடானி என்பவரும் கூட்டுச் சேர்ந்து அபின் என்னும் போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் அல்லது போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதில் இவ்விருவரும் கோடிக்கணக்கில் கொழுத்த லாபம் சம்பாதித்தனர் இருந்தபோதிலும், 1916–ல் பல்தேவ் தாசு பிர்லாவின் மூத்த சகோதரர் சூகல் கிசோர் பிர்லா ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டதால், மூன்று மாத காலம் தலைமறைவானார். மற்றொரு புறம், பல்தேவ் தாசு பிர்லாவின் மகனாகிய ஜி.டி.பிர்லா என்கிற கன்சியம் தாசு பிர்லா தலையெடுத்து, வியாபாரத்தைப் பல புதிய தொழில்களை ஏற்படுத்தி விரிவுபடுத்தினார்.

ghanshyam-das-birla-2
19–ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஜி.டி.பிர்லாவால் தொடங்கப்பட்ட நவீன தொழில்கள்தான் இன்றும் பிர்லா குழுமங்களின் “பெருநிறுவன’ கழகங்களாக வளர்ந்துள்ளன. அவர்தான் வட்டிக் கடையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு முழுமையாக மாற்றம் பெற்று, கொல்கத்தாவிலேயே நிரந்தரமாகத் தங்கி வங்காளத்தில் பெரிய அளவில் நடைபெற்றுவந்த சணல் தொழிலில் ஈடுபட்டார். அத்தொழில் ஜி.டி. பிர்லாவுக்குக் கை கொடுத்தது. பின்பு, முதல் உலகப் போர் மூண்டதன் தாக்கத்தால் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதை தனக்குச் சாதகமாக்கிகொண்ட ஜி.டி.பிர்லா, சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி, அவரது தொழிலை அசுர வேகத்தில் வளர்த்தெடுத்தார்.
முதல் உலகப் போர் முடிந்த பிறகு, 1919–ல் ரூ.50 லட்சம் மூலதனத்துடன் பிர்லா சகோதரர்கள் லிமிடெட் என்கிற நிறுவனம் தொடங்கினார். அதே ஆண்டில் குவாலியரில் ஜவுளி ஆலையைத் தொடங்கினார். மேலும், இந்தியாவில் நீண்டகாலம் பிரபலமாக இருந்த “அம்பாசிடர்’ கார்களை உற்பத்தி செய்த “இந்துஸ்தான் மோட்டர்ஸ்’ தொழிற்சாலையை 1952–ல் நிறுவினார், ஜி.டி.பிர்லா. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த பிர்லா குழுமம், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய கம்பெனிகளுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களையும், ஜவுளி ஆலைகளையும் வாங்கியது. அது மட்டும் அல்லாமல் சிமெண்ட், ரசாயனம், ரயான், உருக்குக் குழாய்கள் என நவீன துறைகளில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியது, பிர்லா குழுமம்.

ghanshyam-das-birla-3

 
 
 
 

This post has been viewed 274 times