கன்சியாம் தாசு பிர்லா – 2. காந்தியுடன் பிர்லாவின் நட்பு

 

கன்சியாம் தாசு பிர்லா

2. காந்தியுடன் பிர்லாவின் நட்பு

ஜி. டி. பிர்லா என்று அறியப்படும் கன்சியாம் தாசு பிர்லா பற்றி இந்த பகுதியில் பார்த்து வருகிறோம். கடந்த இதழின் தொடர்ச்சியை பார்ப்போம்…..
பிர்லா, இந்திய விடுதலை இயக்கத்தின் பெரும் ஆதரவாளராக விளங்கி, அதற்கான நிதி உதவியை வழங்கி பொருளாதார விஷயங்களில், காந்தியடிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவந்தார்.

1924-ல் கேசோரம் காட்டன் மில்லை, ஜி.டி. பிர்லா விலைகொடுத்து வாங்கினார். மேலும், 1926–ம் ஆண்டு ஜி.டி.பிர்லா, பிரிட்டிஷ் இந்தியாவில் நடுவம் சட்டசபையில் அங்கத்தினராகத் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் சில தொழிலதிபர்களுடன் இணைந்து 1927–ல் மத்திய வர்த்தக மற்றும் தொழில் கழகத்தைத் தொடங்கி, அதன் தலைவராகவும் பதவியேற்றார்.

ghanshyam-das-birla

1932–ல் காந்தியடிகள் தொடங்கிய “அரிசன் சேவக் சங்” என்ற அமைப்பின் தலைவரானார்.‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘இந்துஸ்தான் மோட்டார்ஸ்’ போன்ற தொழிற் சாலைகளை நிறுவினார். தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்த பிர்லா குழுமம், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஆங்கிலேய நிறுவனங்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களையும், ஜவுளி ஆலைகளையும் வாங்கியது.

அது மட்டுமல்லாமல் சிமென்ட், ரசாயனம், ரயான், உருக்குக் குழாய்கள், தகவல் தொழில்நுட்பத் துறை என அனைத்து நவீன துறைகளிலும் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியது.
1942–ல் இந்திய மூலதனம், இந்திய மேலாண்மையைக் கொண்டு ஒரு புதிய வங்கியைத் தொடங்கும் எண்ணம் கொண்டார்.

history

 

அடுத்த ஆண்டே யுனைடெட் கமர்சியல் வங்கியை (தற்போதைய யு.கோ. வங்கி) தொடங்கினார். இது 1943–ம் ஆண்டில் யுனைடெட் கமர்சியல் வங்கி என்னும் பெயரில் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட வங்கியாகும், 1969–ல் மற்ற பெரிய வங்கிகளைப் போல் இதுவும் தேசியமயமாக்கப் பட்டது.
ஜி.டி.பிர்லா 1916-லேயே காந்தியை நேரில் சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பு காலப்போக்கில் மெல்ல, மெல்ல நட்பாகவும் தோழமையாகவும் மலர்ந்தது.

பிற்காலத்தில், காந்தி எப்போது டெல்லிக்கு வருகை புரிந்தாலும், பிர்லா மாளிகையில் தங்குவதும், பஜனைகள் உள்ளிட்ட தனது காரியங்களை அங்கேயே மேற்கொள்வதும் வாடிக்கை ஆயிற்று. மகாத்மா காந்தி கோட்சேயின் குண்டுக்கு இரையாகி, தனதுயிர் பிரிந்தது, பிர்லா மாளிகையில்தான். காந்தி தனது கடைசி 144 நாள்களை இந்த இல்லத்தில்தான் கழித்தார். 1948–ம் ஆண்டு ஜனவரி 30–ம் நாள் காந்தி நம்மைவிட்டுப் பிரிந்தார்.

index_clip_image006

 

அந்தக் கட்டிடம் அமைந்துள்ள சாலை, “தீஸ் ஜனவரி 30 மார்க்” என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு சாலை. ஒரு தேதியின் பெயரில் அழைக்கப்படுவது இதுவாகத்தான் இருக்கும். மத்திய அரசு, இந்தக் கட்டிடத்தை 1971–ல் கையகப்படுத்தி, அதை காந்தியின் நினைவு இல்லமாக மாற்றியுள்ளது; பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த நினைவாலயம், டெல்லிக்கு வருகை புரியும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளிடையேயும், டெல்லி வாசிகளிடையேயும் மிகவும் பிரசித்தமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1964–ல் பிலானியில் பிர்லா தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் என்னும் கல்வி நிறுவனம் தொடங்கபட்டு, இந்நிறுவனம் மூலம் பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடங்கி இலவசமாகக் கல்வி வழங்கியது. புதுதில்லி, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோயில்களை பிர்லா குடும்பத்தினர் அமைத்துள்ளனர்.

aakar--621x414

 

ஏராளமான அறிவியல், ஆன்மிக, கல்வி மற்றும் தொழில்துறை நிறுவனங்களையும் நிறுவினார். இவருக்கு 1957–ல் பத்ம விபூஷண் விருது கிடைத்தது. தன் சுய முயற்சியால் மகத்தான சாதனைகளை செய்து இந்தியாவின் தொழில் துறையை முன்னேறச் செய்த ஜி.டி.பிர்லா என்று அறியப்படும் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா 1983–ம் ஆண்டு ஜூன் மாதம் 89–வது வயதில் காலமானார்…

 
 
 
 

This post has been viewed 330 times