உண்மை மகிழ்ச்சி சிறப்பான குடும்ப வாழ்க்கையில் இருக்கிறது!

 

திருமண நாளில், ஒவ்வொரு பெண்ணும் ஒரு புதிய ஆரம்பத்துக்குள், ஒரு புதிய வாழ்க்கைக்குள், புதிய சந்தோஷத்துக்குள், புதிய சூழ்நிலைக்குள், புதிய உறவுகளுக்குள்  கொண்டுபோகப்படுகிறாள்…

ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்காகவே இறைவன் குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தினார். இந்த குடும்ப வாழ்க்கை அநேகருக்கு இன்று  நரகமாகி காணப்படுகிறது. இதற்கு காரணம் சந்தேகம், தன் குடும்பத்தை பற்றிய பெருமை, பெண்களிடையே காணப்படும் பண ஆசை, எதற்கெடுத்தாலும் சண்டை போடுதல், வாக்குவாதம் செய்தல், முறுமுறுத்தல் போன்ற குணங்கள் குடும்ப வாழ்க்கையை நரகமாக்கி விடுகின்றன.

iniyavlea 2 copy

குடும்பம் என்பது எல்லாருடைய நடத்தையை பொருத்து இருக்கிறது. கணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மனைவி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மாமியார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?    பிள்ளைகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்று ஆராய்ந்து, ஒருவருக்கு ஒருவர் புரிந்து, வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்துக் கொண்டால்  மட்டுமே, குடும்பம் மகிழ்ச்சியான, அழகான பூந்தோட்டமாய் காணப்படும். 

திருமண வாழ்க்கை என்பது மகிழ்ச்சியை மட்டும் தான் தாங்கியது என நினைத்து குடும்ப வாழ்க்கைக்கு வருபவர்கள். திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தில் உருவாகும் குறைவுகள், வியாதிகள், வருத்தங்கள், வேதனையான சூழ்நிலைகள், பிள்ளைகளினால் வரும் போராட்டங்கள் என்று பல்வேறு பிரச்சனைகள் சந்திக்கும் போது, “ இப்படி தெரிந்து இருந்தால், திருமணமே செய்திருக்க மாட்டேனே” என்று புலம்பும் பெண்கள் அநேகம் உண்டு.  ஆனால், பெண்ணே.. வாழ்க்கை என்பது, இன்பமும், துன்பமும் இணைந்ததுதான்.  அதனால், இன்பம் வரும் போது சந்தோஷமாக இருக்கவும், துன்பம் என்று வரும்போது, பொறுமையாக இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

 குடும்பத்தில் கணவரும், மனைவியும் சரியான அன்பிலும், ஐக்கியத்திலும் நிலைத்திருந்தால் மட்டுமே அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பமாக இருக்க முடியும். அநேக கணவன்-மனைவிகள், வெளியே பார்ப்பதற்கு   அன்பாக. ஐக்கியமாக இருப்பது போன்று காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களது அந்தரங்க வாழ்க்கையோ, ஐக்கியம் இல்லாமல் காணப்படுகிறது, வெளி உலகிற்கு அன்பாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள்., ஆனால் வீட்டிற்குள் வெறுப்போடும், சண்டை போட்டுக்கொண்டும்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு காரணம்,  சில பெண்கள், தங்களுடைய கணவரை ‘முதல் நிலை’ படுத்தாமல் இருப்பதுதான்.

ஒரு வீட்டை கட்டுவதும் பெண் தான்., அதனை குலைப்பதும் பெண்தான்.  “என் கணவரும் படித்திருக்கிறார்., நானும் படித்திருக்கிறேன்., அவரும் சம்பாதிக்கிறார்., நானும் சம்பாதிக்கிறேன்., நான் ஏன் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் ?என்று கேள்வி கேட்கும் பெண்கள், கணவரை மதிக்காமலும், அவர்களது குடும்பத்தினரையும் மதிக்காமல் இருப்பதினால் தான், குடும்பம் குலைக்கப்படுகிறது. எனவே உனக்கு கொடுக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையை கட்டி காக்க வேண்டியது உன் கரத்தில்தான் இருக்கிறது, பெண்ணே…

– லீனா லிவி

 
 
 
 

This post has been viewed 3,395 times