பம்பரம் விடுதல்

 

பம்பரம் விடுதல்

பம்பரம் விடுதல் என்ற விளையாட்டு, கிராமங்களில் இன்றும் சிறுவர்களால் விளையாடப்படும் விளையாட்டாகும். பம்பரம் ஒரு சமமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச் சுற்றிய அச்சில் சுழலும் ஒரு விளையாட்டுச் சாதனம் ஆகும்.

அதனை வைத்து விளையாடப்படும் விளையாட்டு மிகவும் விறுவிறுப்பானதாகும். பம்பரத்தை அதன் தண்டைச் சுற்றி கைவிரல்கள் அல்லது கயிறு அல்லது சாட்டை கொண்டு சுழற்றி விடும்போது, வளைவுந்து விசையினால் நிலைத்திருந்து சுழல முடிகிறது.

trompo__57504.1368189882.1280.1280

சுழலும்போது காற்றுமண்டலத்துடன் ஏற்படும் உராய்வினால் இந்த விசையின் தாக்கம் குறையும்போது, முதலில் அச்சு திசைமாறி கடைசியாக நிலைதடுமாறி விழுகிறது. பம்பரம் விடுதல் விளையாட்டு, உலகின் பல பகுதிகளிலும் விளையாடப்படுகிறது.

பம்பரம் தயாரித்தல் என்பது ஒரு குடிசைத் தொழிலாக உள்ளது. பம்பரம் பொதுவாக கொய்யா மரக்கட்டை அல்லது கருவேல மரக்கட்டையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. பம்பரத்தின் மீது, கயிறை சுற்றி விளையாட்டைத் துவங்க வேண்டும். இதனை சிலராகவோ அல்லது பலருடன் சேர்ந்தோ விளையாடலாம்.

பம்பரத்தைக் கொண்டு பல வித விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. முதலில் தரையில் ஒரு வட்டமிட்டுக் கொள்ள வேண்டும், பின்பு 1, 2, 3 சொல்லி எல்லோரும் பம்பரத்தை ஒரே நேரத்தில் சுழற்ற வேண்டும். பின்பு சாட்டையை பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும்.

வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தை சுழல விட்டு, அதனை பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை பிடித்துவிட்டால் அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும்.

சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். இது ஒரு கைத்திறன் விளையாட்டு. இதில் ஓயாக்கட்டை, உடைத்த-கட்டை, பம்பரக்குத்து என 3 வகை உண்டு.

பம்பர குத்து என்பது, தோற்றவரின் பம்பரம், வட்டத்துக்குள் இருக்கும் போது, அதனை வென்றவர் தனது பம்பரத்தால் தாக்கி , வட்டத்துக்குள் இருக்கும் பம்பரத்தை சேதப்படுத்துவதாகும். இப்படி செய்யும் போது, கைகலப்பும் ஏற்பட்டு விட வாய்ப்பு உண்டு..

 
 
 
 

This post has been viewed 758 times