தாயம்

 

தாயம்

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து, இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இரண்டு முதல் நான்கு பேர் வரை தரையிலோ, மேடை மீது வைத்தோ விளையாடலாம். தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால், இதனை முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்ற முழு விவரம் தெரியாது. இருப்பினும் இந்திய வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு போன்றவை, தமிழ் குறிப்பெயர்களாகும்.

மகா பாரதத்தில், பாண்டவ மன்னர்கள் நாட்டையும், பாஞ்சலியையும் பணயமாக்கிய சகுனியின் வஞ்சக விளையாட்டகவும், நளவெண்பாவில் நளன் கலியின் மூலம் புட்கரனால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
நாம் இந்த விளையாட்டை மாரி காலங்களில், பொழுது போக்கிற்காக விளையாடுவார்கள். ஐந்துக்கு ஐந்து சதுரங்களால் அமைந்த ஒரு கோட்டுத் தளத்தில் நான்கு பக்கமும் நாலு பேர் அமர்ந்து விளையாடலாம். எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாகவோ தனியாகவோ விளையாடலாம். கூட்டுச் சேர்ந்து விளையாடுவதைக் “கன்னை கட்டுதல்” என்றும் சொல்லப்படும்.

pongal art2
ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். இவற்றைத் தளத்தின் சதுரங்களினூடே பயணித்து மையத்தில் இருக்கும் பழத்தை அடைந்து மீண்டு வருதலே, இந்த விளயாட்டாகும். முதலில் நான்கு காய்களையும் மீண்டு கொண்டு வருபவர், வெற்றி பெறுவார். ஒவ்வொருவரும் நான்கு காய்களை வைத்திருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொள்ள, வெவ்வேறு நிறங்களில், அல்லது வடிவங்களில் அல்லது உருவங்களில் இவை இருக்க வேண்டும். ஊரி, சிறு கற்கள், உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகள், புளியங் கொட்டைகள், பெரிய தானிய விதைகள் என்பவை சில உதாரணங்கள்.

எண்ணிக்கை அளவுக்குக் காய்கள் நகர்த்தப்படலாம். ஒரு எண்ணிக்கை ஒரு காய்க்கு ஒரு முறை மட்டும் நகர்த்தப்படும். விளையாட்டு ஆரம்பத்தில், இரு பகுதியும் தமது காய்களைத் தமது இல்லத்தில் வைத்திருப்பார்கள். கோட்டிற்குள் செல்வதற்குத் தாயம் அவசியம். இது முழுக்கு என்று சொல்லப்படும். முழுகிய பின்னர் எல்லா எறிவுகளுக்கும், காயை நகர்த்த முடியும். உங்கள் காயைத் தந்திரமாக நகர்த்துவதற்கு உங்கள் எறிதல்களைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். இந்த விளையாட்டு தமிழக கிராமங்களில் இன்றும் விளையாடப்பட்டு வருகிறது….!!.

 
 
 
 

This post has been viewed 427 times