கோலிக்குண்டு

 

கோலிக்குண்டு

கோலிக்குண்டு விளையாட்டு, தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இதனைச் சிறுவர்கள் மட்டுமே விளையாடுவர். குழி போட்டும், கோடு போட்டும் இருவேறு வகைகளில் அரங்கு அமைக்கப்படும். குழி, குதிக்காலால் திருகிக் குண்டு தங்கும் ஆழத்துக்கு அமைக்கப்படும்.

உருண்டையான கூழாங்கற்களையும், செங்கலை உடைத்து, உரைத்துச் செய்த கூழாங்கற்களையும் கோலிக்குண்டாகப் பயன்படுத்துவர். வண்ண வண்ணக் கண்ணாடிக் குண்டுகள் விற்பனைக்கு வந்த பிறகு அதனையும் பயன்படுத்தலாயினர்.

WestAfricanMarbles

 

கட்டை-விரலை நிலத்தில் ஊன்றி, நடுவிரல் விசையால், மற்றொரு கை பிடித்திருக்கும் கோலிக்குண்டை அடிக்கும் முறை பழக்கத்திலுள்ளது.

கோலி அல்லது போளை எனப்படுவது ஒருவகை கண்ணாடியால் ஆக்கப்பட்ட சிறிய வர்ணம் பூசப்பட்ட பந்து. பொதுவாக இவை 1.25 அல்லது 0.635 விட்டத்தைக் கொண்டிருக்கும். இவை சிறுவர்களால் பல்வேறு கோலி விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படுகின்றன.

கோல் என்னும் சொல்லுக்குத் தமிழில் வளைவு என்னும் பொருள் உண்டு. வளைந்த உருப்பொருளைக் கோலி என்று அழைப்பர். “அரங்கின்றி வட்டு ஆடியற்றே” என வரும் திருக்குறள் (401) பகுதியில் “குண்டு உருட்டுதல்” எனப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை இந்த விளையாட்டு கிறிஸ்துவுக்கு முன்னரே விளையாடப்பட்டதைக் காட்டுகிறது.

9625137021_65a729cf35_b

பொதுவாக விளையாட்டில் வெற்றி பெற்றவரைப் பழம் பெற்றவர் என்பது வழக்கம். இந்த விளையாட்டில் 10 புள்ளி பெற்றவர் பழம் பெற்றவராக அழைக்கப்படுகிறார். பழம் பெற்றவர் விளையாட்டிலிருந்து விலகிக்கொள்வார். அல்லது மேலும் புள்ளி ஈட்டாமல் தன் குண்டுகளை அடித்துத் தனக்கு வேண்டியவர், பழம் ஆக உதவலாம்.

பழம் ஆனவர்களுக்குப் பரிசு ஒன்றும் இல்லை. ஆனால் தோற்றவருக்குத் தண்டனை உண்டு. தோற்றவர் குண்டை, பழம் பெற்றவர் அனைவரும் ஒவ்வொரு முறையும் அடித்துத் தொலைதூரம் தள்ளுவர்.

அங்கிருந்து தோற்றவர் தன் குண்டைத் தன் புறங்கை முட்டியால் உத்திக்குழி வரையில் தள்ளிக்கொண்டு வரவேண்டும். பல வண்ணங்களை கொண்ட கோலி குண்டு, தமிழரின் பாரம்பரிய விளையாட்டின் அடையாளமாக இன்றும் இருந்து வருகிறது…!!!.

 
 
 
 

This post has been viewed 350 times