சில்லு விளையாட்டு

 

சில்லு விளையாட்டு

சில்லு விளையாட்டு, தமிழக நாட்டுப்புறங்களில் அண்மைக்காலம் வரையில் விளையாடப்பட்ட சிறுமியர் விளையாட்டுகளில் ஒன்று. இதற்கு வழங்கப்படும் வட்டாரப் பெயர்கள் — சில்லாங்கு, தெல்லாங்கு, எத்து-மாங்கொட்டை மற்றும் ஒன்னான்-ரெண்டான் வட்டு.

தட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, கோட்டுக்கு வெளியே காலால் எற்றித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு. உடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு அல்லது சில்லி என்பர். மாங்கொட்டையையும், ஆடு சில்லாகப் பயன்படுத்தப் படுவது உண்டு. தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும். செவ்வக-அடுக்கு, வட்ட-ஆரை-அரங்கு என்னும் பாங்கில் இதனை விளையாடும் கோடுகள் அமைந்திருக்கும்.

E_1430211043

தரையில் நொண்டி அடித்துக்கொண்டு சென்று, அரங்கின் முதல் கட்டத்தில் இருகால்களையும் ஊன்றிக் கொண்டு நிற்பர். ஆடிய சில்லைத் தலையில் வைத்துக்கொண்டு தன் கண்களை தானே இரு கைகளாலும் பொத்திக்கொண்டு ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி நடந்து செல்வர். ஆடுபவர், இரண்டு தப்படி வைத்ததும் “சரியா” என்று கேட்பார். கோட்டை மிதித்திருந்தால் தப்பு. “சரி” என்று பிறர் சொன்னால் அடுத்த காலடிகளை வைக்க வேண்டும்.

கடைசி கட்டம் சரி என்றதும், தலையிலுள்ள சில்லைக் குனிந்து தரையில் போடவேண்டும். பின் கண்ணைத் திறந்துகொண்டு, அந்தச் சில்லை மிதிக்கவேண்டும். மிதித்துவிட்டால் அரங்கின் ஓரத்தில் ஒரு கட்டம் போட்டு அதனைத் தன் மச்சு என்று வைத்துக்கொள்ளலாம்.

அடுத்த ஆட்டத்தில் நொண்டி அடித்துக் கொண்டு செல்லும் போது தன் மச்சில், இரண்டு கால்களையும் ஊன்றிக் கொள்ளலாம். அதிக மச்சு கட்டியவர் வென்றவர் ஆவார். இது சிறுவர்-சிறுமிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு. அத்துடன் இந்த விளையாட்டில், சிறந்த உடல் பயிற்சியும் இருக்கிறது…!!!.

 
 
 
 

This post has been viewed 707 times