வில்வித்தை

 

வில்வித்தை

வில்லின் நாணில் அம்பை ஏற்றி எய்வதே, அம்பெய்தல் என்னும் வில்வித்தை ஆகும். தொடக்க காலத்தில் அம்பை எய்து விலங்குகளை மக்கள் வேட்டையாடினர். போரிலும் வில்-அம்பு முக்கிய ஆயுதமாக விளங்கியது. வில்லை, ”தனுசு” என்னும் வடசொல்லால் வழங்குவர்.

தற்காலத்தில் அம்பெய்தல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கிவருகிறது.

archery_web

உலக வில்வித்தை இணையம், சுவிட்சர்லாந்து நாட்டு லவ்சேனி நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அதில் 140 உறுப்பு நாடுகள் உள்ளன. பன்னாட்டு ஒலிம்பிக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துத் தன் குழுவில் இணைத்துக்கொண்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டில், 1900–ம் ஆண்டு முதல் வில்வித்தை விளையாட்டு இடம் பெற்று வருகிறது. கொரிய ஆண், பெண் போட்டியாளர்கள் இதில் முன்னணியில் திகழ்கின்றனர். 2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் இந்த முன்னிலை தொடர்ந்தது.

சங்ககாலத்தில் வில்லம்பு சிறுவர்களின் விளையாட்டுகளில் ஒன்றாகவும், வேட்டையாடும் கருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்பட்டது.

archery-1

வேட்டுவரின் சிறுவர்கள் வலார் என்னும் சிம்புகளை வளைத்து வில் செய்துகொண்டனர். ஊகம் என்னும் நாணாத்தட்டையால் அம்பு செய்துகொண்டனர். கூர்மைக்காக அந்த அம்பின் நுனியில் சப்பாத்தி முள்ளைச் செருகிக்கொண்டனர்.

இந்த வில்லைக்கொண்டு வேட்டையாட அவர்கள் வேலிப்பருத்தி படர்ந்திருக்கும் வேலிக்குள் மேயும் காட்டெலிக்குக் குறி வைத்துத் தேடிக்கொன்றனர்.

“வல்வில் வேட்டம்”என்பது வில்லாண்மையைக் காட்டும் தொடர். சங்கப்பாடல்களில் வல்வில் தொடரால் பல்வேறு அரசர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்…!!!.

 
 
 
 

This post has been viewed 282 times