கபடி

 

கபடி

கபடி அல்லது “சடுகுடு” அல்லது “பலிஞ் சடுகுடு” என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ் குடிகளான ஆயர்களால் பல காலமாக, விளையாடுப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று.

ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் முன் ஆயர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால், பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. அதாவது கை+பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.

இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 நிமிடங்கள். இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான இடம் இருந்தால் போதும்.

indiavsthailand2

இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.

ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் “கபடிக் கபடி…” அல்லது “சடுகுடு…” என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று, எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு, எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு.

இதில், எதிர் அணி வீரரால் தொடப் பட்டவர் ஆட்டம் இழப்பார். அப்போது கபடி கபடி…. என்று பாடி வருபவரை, எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடி…” என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடி…..’ என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர்.

PCTV-2001800836-hcdl

 

தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும், ஆட்டம் இழப்பர்.
சடுகுடு உலகக்கோப்பை முதன்முதலாக 2004–ம் ஆண்டில் ஆடப்பட்டது. பின்னர் 2007–ம் ஆண்டிலும் 2010–ம் ஆண்டிலும் ஆடப்பட்டன. இதுவரை இந்திய அணியே வெல்லப்படாத உலகக்கோப்பை வெற்றியாளராக இருந்து வருகிறது.

 
 
 
 

This post has been viewed 313 times