ஸ்கூபா டைவிங்

 

ஸ்கூபா  டைவிங்

scuba

விளையாட்டு என்பது பொழுது போக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயல்பாடு ஆகும். உள்ளக விளையாட்டு, வெளியக விளையாட்டு, கோட்டு விளையாட்டு, கோடில்லா விளையாட்டு, குழு விளையாட்டு, தனி விளையாட்டு என்று விளையாட்டில் பல வகைகள் உள்ளன. சில விளையாட்டுகளுக்கு உடல் உழைப்பு தேவைப்படும். பல  விளையாட்டுக்களுக்கு அப்படி உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாது. ஆனால் எல்லா விளையாட்டும், மிக கவனமாக மனதை ஒருங்கிணைத்து விளையாடப்பட வேண்டும்.

“ஸ்கூபா டைவிங்” என்பது ஒரு அருமையான விளையாட்டு ஆகும்.  உறையவைக்கும் பனியில் யார் தைரியமாக “ஐஸ்” தண்ணீரில் குதிக்கிறார்கள் என்பதே இந்த விளையாட்டின் முக்கிய நோக்கம். இந்த “ஸ்கூபா டைவிங்”, சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஏறிச்செல்ல ஏறிச்செல்ல, அந்த பகுதி முழுவதும் “அண்டார்டிகா” பனிப்பிரதேசத்தை போன்றே அதிகமான பனிபடர்ந்து காணப்படுகிறது. இந்த விளையாட்டு நியாயமற்றதாககூட இருந்தாலும், இதில் பங்கேற்பது மிகவும் சிரமமானது.  இந்த விளையாட்டில் பங்குபெறவும், இந்த பயணத்தை மேற்கொள்ளவும், 100 டாலரிலிருந்து 1000 டாலர்கள் வரை வசூலிக்கப்படுகிறது.

பனிக்காலம் என்பதால் இங்கு சில தாவரங்களும், சில விலங்குகளும் மட்டுமே உயிர் வாழ்கின்றன. இந்த நேரத்தில் கடல் ஏரி, மிகவும் அமைதியாக எந்தவித சலனமுமில்லாமல் இருக்கிறது. மேலும் இங்கு வெப்பநிலை டிசம்பரிலிருந்து மார்ச் வரை  மைனஸ் 24தி ஆக உள்ளது. “ஸ்கூபா டைவிங்” பிரியர்களுக்கு இந்த குறைந்த வெப்பநிலையானது பெரிதாக தெரிவதில்லை.
பாதுகாப்பற்ற “ஸ்கூபா டைவிங்” விளையாட்டில் நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. பனிக்கட்டிகளின் ஊடாக சிறிய துளையின் வழியேதான் மேலே வரமுடியும், இதையும் மீறி உள்ளே மாட்டிக்கொண்டால், இதிலிருந்து தப்பிக்கமுடியும் என்பது கற்பனையே. மற்ற இடர்பாடுகள் என்று எடுத்துக்கொண்டால், இதில் ஆழமற்ற ஏரியில் சுமார் 30 நிமிடங்கள் வரை மட்டுமே நாம் இருக்க முடியும்.
இதுவும் முறையான பயிற்சியும், அனுபவமும் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்கிறார், “ஐஸ் டைவிங்” பாதுகாப்பு நிபுணர் மற்றும் செஞ்சிலுவை பயிற்றுவிப்பாளர் ஆண்ட்ரியா ஜாபர்ஸ்.  இந்த சிகப்பு நிறக்கடலில் சில வண்ணமயமான மீன்களை பார்ப்பதற்காகவே, இந்த “ஐஸ் டைவிங்”-கை மேற்கொள்வதாகவும், அமைதியான ஆற்றின் அழகை ரசிக்கும்போது, இதில் குளிர் ஒரு பொருட்டாக தெரிவதில்லை எனவும், இந்த விளையாட்டில் பங்கேற்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். ஸ்கூபா டைவிங் ஆபத்து நிறைந்த ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்பதில் ஐயமில்லை.!!!.

 
 
 
 

This post has been viewed 327 times