“சுடோகு” விளையாட்டு

 

“சுடோகு” விளையாட்டு

நண்பர் ஓருவர் ஆங்கில தினசரியையும் கையில் பென்சிலையும் வைத்துக்கொண்டு இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டு இருப்பார்.
அப்படி என்ன தான் விளையாடுகின்றார் என்று பார்த்தால் இந்த “சுடோகு” (sudoku) விளையாட்டைதான் விளையாடுவார்.ஒரு முறை விளையாடி வெற்றிபெற்றுவிட்டால் அடிக்கடி விளையாடி பார்க்க மனம் விரும்பும்.

screen_1

இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது? என்பதை பார்போம் ஒரு பாக்ஸில் 9 கட்டங்கள் இருக்கும். அதுபோல 9 பாக்ஸ் சேர்ந்து ஒரு பெரிய பாக்ஸாக இருக்கும். 9×9 (அதாவது மொத்தம் 81 கட்டங்கள் இருக்கும்) கட்டங்கள் இருக்கும். இதில் ஒவ்வொரு பாக்ஸிலும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை 1-லிருந்து 9 வரை எண்களை நிரப்பவேண்டும்.

Sudoku_10_bij_10

ஒரு முறை வந்த எண் மறுமுறை வரக்கூடாது.அதைப்போலவே மொத்த கட்டங்களிலும் எல்லா எண்களும் வரவேண்டும்.இதிலேயே பென்சிலும் கொடுத்துள்ளார்கள். வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம். இது, மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்கும் விளையாட்டு.

sudoku_43

எப்போது பார்த்தாலும் வேலை -டென்ஷன் என்று அல்லாடும் நாம் கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் செய்ய இந்த விளையாட்டினை விளையாடிப் பார்க்கலாம். நீங்களும் ஒரு முறை விளையாடிப்பாருங்கள்.!!!.

 
 
 
 

This post has been viewed 404 times