22.அனுபவப்படிப்பு

 

22.அனுபவப்படிப்பு

காமராஜரின் பள்ளி குழந்தைகளுகான மதிய உணவு திட்டத்தை, மிகச்சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஏழை குழந்தைகளுக்கும், சத்துணவு போட வேண்டும் என்ற உத்தரவை எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார்
சில மாதங்களில் இந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கூட நாட்கள் மட்டும் தான் உணவு கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். ஒருநாள் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து,” எல்லா நாட்களிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு ஏன் மதிய சாப்பாடு கொடுக்கக்கூடாது?“ என்ற கேள்வியை எழுப்பிய போது அன்றைக்கு கல்வி உயர் அதிகாரியாக இருந்த வெங்கட சுப்பிர மணியனும், வருவாய் துறை அமைச்சரும், நீதி துறை அமைச்சரும் ,இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து முதல் அமைச்சர் அவர்களிடம் பேசும் போது,” வாரம் 7 நாட்களும் மதிய சத்துணவு போட்டால் நிதி பற்றாக்குறை ஏற்படும்” என்ற விளக்கத்தை கூறினார்கள். இதற்கு முதல்வர் எம்.ஜி.ஆர்.“, இந்த லீவு நாட்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் உள்ளதுதான். அந்த லீவு நாட்களில் நாம் சாப்பிடாமல் இருப்பது இல்லை. எந்த செலவுகளையும் குறைத்து கொள்வதும் இல்லை. அரசாங்கத்தின் சார்பில் சில விழாக்களைக் கூட இந்த லீவு நாட்களில்தான் நாம் நடத்தி வருகிறோம். ஆனால் வயிற்றுக்கு பசிக்கு உணவு என்பது எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் தேவைபடக் கூடிய ஒரு விஷயம். அதனால், தமிழ் நாடு முழுவதும் ஏழை குழந்தைகளுக்கு மதியத்தில் சத்துணவு சாப்பாடு கொடுக்க வேண்டும். அரசாங்கத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு, இந்த சத்துணவு திட்டத்தை நல்ல முறையில் தமிழ்நாடெங்கும் செயல்படுத்த வேண்டும். நான் இன்றைக்கு முதல் அமைச்சராக இருந்து கொண்டு ஏழை மக்களின் குறைகளை அறியாமல் நடந்து கொள்பவன் அல்ல. உங்களை போன்ற மற்ற அதிகாரிகளும் அமைச்சர்களும் எனக்கு உறுதுணையாக இருந்து செயல்படவேண்டும்” என்றார்.
மேலும் எம்.ஜி.ஆர். ஒரு பேட்டியின் போது,”நான் நான்காவது வரை படித்து உள்ளேன். அதற்கு மேல் படிக்க வசதி வாய்ப்பு இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. அதனால் நாடக கம்பெனிக்கு நடிக்க சென்றோம். கல்வி அறிவு என்பது பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து கிட்டு புத்தகங்களை மட்டும் படித்தால், அந்த அறிவு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஒரு மனிதன் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், எப்படியும், எங்கு இருந்தாலும் கற்றுக்கொள்ளலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன்… பன்னிரண்டாவது வரை படித்த ஒரு மாணவன் ஒரு குற்றத்திற்காக 7 வருடம் ஜெயிலில் அடைக்கப்படுகிறான். அவன் ஜெயிலுக்குள் இருந்து கொண்டே என்ன படிக்கணுமோ அதை ஜெயில் அதிகாரிகளிடம் சொல்லி அனுமதி பெற்றுபடித்து, ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிவரும்போது, அவர் ஒரு வழக்கறிஞராக ஙி.கி. ஙி.லி., படிப்பில் தேர்ச்சி பெற்று விடுதலை ஆகி வெளியே வருகிறார். இது போல் என்னை போன்றவர்கள் அறையும், குறையுமாக படித்தவர்கள் நல்லா படிப்பு அறிவை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்கு கிடைக்கும் நேரங்களில் இரவு நேரத்தில் வாத்தியார்களை வரவழைத்து கற்று கொண்டேன். 14-வது படிக்கும் ஒரு மாணவன் படிக்க எழுத திறமை கொண்டவன் போல் நான் இப்போ இருக்கிறேன்” என்றார்.
“மற்றும் ஒரு உதாரணம்… தமிழ்நாட்டின் ஒரு பெரிய இந்திய அரசியல் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்அமைச்சராகவும் 10 ஆண்டுகாலம் இருந்தவர் பதவி வகித்தவர், கர்மவீரர் காமராசர் . அவர் எத்தனாவது வரை கல்வி பயின்று உள்ளார்? என்பது நாடு அறிந்த விஷயம். அதே போல் நானும் ஒருவன் என்று பெருமையாக சொல்லி கொள்கிறேன். இதைவிட வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் கேளுங்கள்” என்றார், எம்.ஜி.ஆர். உடனே, பத்திரிகையாளர், “சார் நீங்கள் ஒரு தத்துவ மேதை .எல்லாம் அறிந்த ஒரு மாமனிதர் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் தங்களிடம் இந்த கேள்வியை கேட்டேன். அதாவது நான் தங்களை மெதுவாக உங்களுடைய கல்வி அறிவை பற்றி தொட்டு பார்த்தேன். இதில் தாங்கள் பள்ளிக்கூடம் சென்று பயின்ற கல்வியை விட ,மிக அதிகமாக அனுபவத்தில் கற்று உள்ளீர்கள். அதாவது ஒரு உதாரணம் இப்போ நீங்க தமிழ் ஆங்கிலத்தை தடை இன்றி படிக்கிறீங்க. தமிழ் கொள்கைபடி தமிழை இலக்கியத்தோடு எழுதுகிறீர்கள்.,பேசுகிறீர்கள். இதை வைத்து பார்க்கும் போது சுமார் ஒரு பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் இலக்கியத்தோடு படித்தவராக உங்களை நாங்கள் நினைக்கிறோம். நீங்களே பலமுறை சொல்வீர்கள் “கற்றது கை மண் அளவு., கற்காதது கடல் அளவு” என்று. இதே போல் நீங்கள் கற்றது கை அளவு அல்ல, கடல் அளவு ஆகும்.” என்றார் பத்திரிகையாளர்.
உடனே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மறுத்து குறுக்கிட்டு, “நீங்கள் என்னுடைய கல்வியை பற்றி இவ்வளவு ஆர்வத்தோடு பேசுவதால், நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். நானும் என் அண்ணனும் பள்ளிக்கூடம் சென்று படிக்கின்ற காலத்தில், பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லும் பாடங்களை மனதில் பதிந்து கொள்வோம். படிப்பறிவு எங்களுக்கு நல்லாவே இருந்தது. ஆனால், தொடர்ந்து எங்களால் படிக்க வசதி இல்லை. அந்த சூழ்நிலையில் தான் நானும் என் அண்ணனும் படித்தது போதும்., ஏதாவது வேலை செய்வோம் என்ற எண்ணத்தோடுதான் நாங்கள் நாடக கம்பெனிகளில் நுழைந்ததோம். அப்படி நாடக கம்பெனிகளில் வேலை செய்யும் காலத்தில்,நேரம் கிடைக்கும் போது ஏதாவது எங்களுக்குக் கிடைக்கின்ற புத்தகங்களை நாங்கள் படிக்க தவறுவது இல்லை. எனது அண்ணன் சக்கரபாணி, இலங்கை கண்டியிலே ஆங்கில பள்ளியில் எனது தந்தையால் சேர்க்கப்பட்டு மூன்றாவது வகுப்பு வரை படித்தவர். எங்கள் தந்தையார் பட்டபடிப்பு படித்தவர். அவர் கல்லூரியில் லக்சரராகவும் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாகவும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியவர். இதை கருத்தில் கொண்டு தந்தையை போல் நாமும் எப்படியாவது கல்வியிலும் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டோம். அதன்படி நாங்கள் இருவரும் நாடக கம்பெனி சினிமா துறையிலும் பணி செய்து கொண்டு இருக்கும்காலத்தில் எங்களுக்கு நேரம் கிடைக்கின்ற போது இரவு வாத்தியார் வழியாக கல்வி பயின்றோம். அந்த விடா முயற்சிதான் இன்று எங்களுக்கு உறுதுணையாக உள்ளது” என்று சொல்லி முடித்தார்.
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பேசும்போது, மனிதனுடைய தலை எழுத்தை பற்றி அது எப்படி எந்த எந்த காலகட்டத்தில், எந்த அளவுக்கு என்ன என்ன நடக்கும்? கணக்கு போட்டு சொல்லுபவர்களுக்கு தான் ஜோசியர் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதிரி ஜோசியங்களை தன்னுடைய மகன்கள் பலன் எப்படி இருக்கின்றது? வரும் காலம், அவன்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதை எனது தாய் தெரிந்து கொள்வதில் மிக ஆர்வம் உள்ளவர். இந்த மாதிரியான காலகட்டத்தில், தன்னுடைய இளைய மகன் ராமச்சந்திரனுக்கு ஒரு பிரகாசான வாழ்க்கை ஏற்படும் என்று, மக்கள் திலகத்தின் ஜாதக பலன் எழுதப்பட்டு இருந்தது. ஜாதகம், ஜோசியம், சாமி கும்பிடுவது அந்த சாமிக்கு சிறப்பு பூஜை செய்து விரதம் இருப்பது. இப்படி இந்த விசயத்தில் ஒரு காலத்தில் எனக்கும் தாயைப்போல பற்று உண்டு” என்றார்.!!.

 
 
 
 

This post has been viewed 255 times