எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட சோதனைகள்

 

22.எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட சோதனைகள்

எம்.ஜி.ஆருக்கு வாழ்க்கையில் தாங்கி கொள்ள முடியாத சில சோதனை ஏற்பட்டது. அது தான்முதல் மனைவி தங்கமணி இறந்தது. அடுத்து இரண்டாவது மனைவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு படுக்கையில் நோயாளியாகியது. ஆனால், மக்கள் திலகத்திற்கு ஒரு பெரிய மனதிடத்தையும் நம்பிக்கையும் அளித்தது. எப்படியும் தான் வெற்றியை எட்டி பிடிக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு செயல்பட்டார்.
1958-ல் அவருடைய சொந்த நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கால் உடைந்தது. இதைவிட ஒரு விஷயம்… மக்கள் திலகம் கூட ஒரு படத்தில் நடித்து கொண்டு இருந்த ஒரு பிரபல கதாநாயகி “நான் உங்களை உண்மையாகவே காதலிக்கிறேன். என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கேட்டது. அப்போதான் தன்னுடைய கிரகத்தைப்பற்றி ராமச்சந்திரன் நினைக்கிறார்.
காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல என் வாழ்க்கையில் எவ்வளவோ சம்பவங்களை சந்தித்து நீந்தி கரை ஏறி சற்று நிம்மதியாக இருக்கிறேன். நான் உண்டு என் தொழில் உண்டு என்று இருக்கிறேன். எனக்கு மீண்டும் சோதனையா? என்று நினைத்தார், மக்கள் திலகம். ஆரம்பத்தில் இருந்து கடவுளிடம்,”எனக்கு புகழை மட்டும் கொடு.,வேறு எதுவும் வேண்டாம்” என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தார்.
தாயையும் தந்தையும் தெய்வமாய் நினைத்தவர், எம்.ஜி.ஆர். அவருடைய தந்தை, எம்.ஜி.ஆரின் மூன்றாவது வயதிலேயே இறந்துவிட்டார். அதன் பிறகு தந்தைக்கு தந்தையாகவும், தாய்க்கு தாயாகவும் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில், எம்.ஜி.ஆரையும், அவரது அண்ணனையும் அவரது தாய் வளர்த்து வந்தார். எனவே, தாய் சொல்லை தட்டாமல் இருவரும் மதித்து வந்தனர். “எங்களுடைய ஒவ்வொரு வளர்ச்சிகளையும் கண்டு எங்கள் தாய் பெருமை படுவார். தந்தைக்கும், தாய்க்கும் செய்யும் கடமைகளை எங்கள் தாய்க்கு தவறாமல் செய்து வந்தோம். இதோடு எங்களுக்கு குருவாக இருந்தவர்களை வணங்காமல் இருப்பதும் இல்லை. அவர்களுக்கு ஏதாவது நன்றி கடன் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது இல்லை.” என்று எம்.ஜி.ஆர். கூறி இருக்கிறார்.
வால்டாக்ஸ் ரோட்டில் இருந்து ராயப்பேட்டை, மைலாப்பூர் அடையார் ஸ்டூடியோ, கோடம்பாக்கம் ஸ்டூடியோ கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோ, மாம்பலம் சினிமா கம்பெனி, மௌவுண்ட் ரோடு ஸ்டூடியோ, (ஜெமினி) தான் எம்.ஜி.ஆரின் வழியிடங்கள். “இந்த பூமியில் மண் உலகில் நான் ஏன் பிறந்தேன் ?தந்தை இறந்த பிறகு படிக்க வசதி இல்லை. பசிதீர சாப்பாடு இல்லை, தாய் படும் துயரத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை பத்து வயதில் பட்டினியாய் இருக்க முடியவில்லை. வேலைக்கு போகலாம் என்றால் எனக்கு வேலை தர ஆள் இல்லை. பதினைந்து வயதில் ஒரு மகனும் 10 வயதில் ஒரு மகனும் இருக்கும் போது எங்களைப் பெற்ற தாய் வேலைக்கு செல்வதா? அய்யோ நான் என்ன செய்வேன், எங்கே போவேன் ?என்று நாங்கள் அழுது புலம்பிக்கொண்டு இருந்தோம். அப்போது எங்கிருந்தோ வந்தார் நாராயணன் என்ற எம்.ஜி.ஆரின் குடும்ப உறவினர். “நீங்கள் இருவரும் தயங்கவேண்டாம் என்னுடன் வாருங்கள். உங்கள் இருவருக்கும் நான் வேலை வாங்கி தருகிறேன்” என்றார். “அதன் பின் அவருடன் இருவரும் சென்றோம்.நாடகத்தில் நடிகனாய் நடித்தோம். மூன்று வேலை உணவு கிடைத்தது மூன்று ரூபாய் சம்பளமும் கிடைத்தது. இந்த உதவியை செய்த நாராயணன் அவர்களை எங்கள் உயிர் உள்ளவரையிலும் என்றென்றும் வணங்குவோம்” என்றார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்., உள்ளத்தால் மக்களை கவர்ந்தவர்.
மாவீரன் மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர்., சினிமாவில் சண்டைக்காட்சி இல்லாமல் நடித்தால், அது உப்பு இல்லாத சாப்பாடு போல. ஆனால், “என் தங்கை” 1952–ல் சண்டைக்காட்சியே இல்லாத ஒரு படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெளி வந்தது.
“கடவுளே எனக்கு புகழை கொடு, நல்ல மனதையும் கொடு., கடவுளே அப்படியே நல்ல உடலையும் கொடு” என்றார். “நாடோடி மன்னன் படம் வெற்றி அடைந்தால் ,மன்னன். இல்லையென்றால் வெறும் நாடோடிதான் இந்த எண்ணத்தோடு இந்த படத்தை 1957–ல் தயாரித்தார். இந்த படம் வெற்றி அடைந்து அவர் நினைத்தது நடந்தது.
1958–ல் அவருடைய சொந்த நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது கால் உடைந்தது. அது சமயம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சினிமா படங்களில் இனிமேல் நடிக்க முடியாது என்று பேசப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் போது, மக்கள் திலகம் “கடவுளே இது என்ன சோதனை “என்று நினைத்துக்கொண்டார். கடவுளின் ஆசீர்வாதத்தால் மேலும், புகழை அடைந்தார்.
1967–ல் எம்.ஆர். ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காலத்தில், “கடவுளே! நான் பிழைப்பேனா., மீண்டும் எனக்கு சோதனையா?’ என்று நினைத்தார். கடவுள்,”முன்னை விட மேலும் நீ புகழ் அடைவாய்” என்று சொன்னது போல் எம்.எல்.ஏ.வாக வெளியே வந்தார். 1984–ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும்போது, மறுபடியும் கடவுளை நினைக்கிறார். “கவலைபடாதே உன் ஆயுள் வரை நீ முதல்அமைச்சராக இருந்து மக்களுக்காக சேவை செய்வாய் “என்று கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கிறது.
மக்கள் திலகத்துக்கு ஏற்பட்ட பெரும் சோதனைகள் முதல் மனைவி தங்கமணி திருமணம் ஆகி ஓரே வருடத்தில் இறந்து போனது. அடுத்து இரண்டாவது திருமணம் சதானந்தவதியை திருமணம் செய்து இரண்டாவது வருடத்தில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு ,மக்கள் திலகத்துடன் சேர்ந்து வாழமுடியாமல் போனது. 1957–ல் மூன்றாவது முறை திருமணம் செய்து கொள்ள ஏற்பட்ட நிபந்தனை. 1959–ல் தன் தாய் இறந்துபோனது. அதேவருடம் தன்னுடைய சொந்த நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கையில் கால் உடைந்தது. 1967–ல் துப்பாக்கியால் சுடப்பட்டது. 1969–ல் தன்னுடைய அரசியல் ஆசான் அறிஞர் அண்ணா இறந்தது. 1972–ல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறியது. 1973–ல் தன்னுடைய சொந்த கட்சி சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்த ஏற்பட்ட சூழ்நிலை, 1977–ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சந்தித்தது. 1980–ல் தமிழ்நாட்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. தன்னுடைய அரசாட்சியை கலைத்தது. அதே 1980–ல் மீண்டும் தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை சந்தித்து தர்மயுத்தத்தில் இறங்கியது. 1984–ல் தனக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியத்திற்காக அமெரிக்கா சென்றது.!!.

 
 
 
 

This post has been viewed 313 times