காண்டாமிருகம்

 

காண்டா மிருகம் என்ற மூக்குக்கொம்பன் என்னும் விலங்கு நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று. தடித்த தோலும் (1.5 – 5.0 செமீ), பருத்த உடலும், 1 முதல் 1.8 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இப்பெரிய விலங்கு விரைவாகவும் ஓட வல்லது – மணிக்கு 40 கிமீ தூரத்தை வேகமாக ஓடவல்லது. இது இலைதழைகளை உண்ணும் தாவர உண்ணி. ஏறத்தாழ 60 ஆண்டுகள் வாழ வல்லது. காண்டா மிருகத்துக்கு, மூக்குக்கொம்பன், காண்டாமிருகம், உச்சிக்கொம்பன், கொந்தளம் என்னும் பெயர்களும் உண்டு. ”காண்டா” என்னும் சொல் ”மிகப்பெரிய” என்னும் பொருள் கொண்டது. எனவே இதனை காண்டாமிருகம் என்று பலரும் அழைக்கின்றனர். எளிதில் சினமுற்று, கொந்தளிப்புடன் கடுமையாக எதிரிகளைத் தாக்கவல்லது. ஆகவே இதற்கு ”கொந்தளம்” என்றும் பெயர்.

மூக்குக் கொம்பன், இயற்கையில் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், ஜாவா, சுமத்ரா தீவுகளில் வாழ்கின்றன. ஆப்பிரிக்க மூக்குக்கொம்பன்களுக்கு இரண்டு கொம்புகள் உண்டு, ஆசிய முக்குக்கொம்பன்களில் இந்திய, ஜாவா வகைகளுக்கு ஒரே ஒரு கொம்புதான் உண்டு. ஆனால் ஆசியாவில் உள்ள சுமத்ரா மூக்குக்கொம்பன்களும் இரட்டைக் கொம்புகள் கொண்டவை. ஆப்பிரிக்க மூக்குக் கொம்பனை சுவாகிலி மொழியில் கிஃவாரு  என்று அழைக்கின்றனர். “கறுப்பு ரைனோ”  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இரட்டை மூக்குக்கொம்பன், ஆப்பிரிக்க விலங்கைக் குறிக்கும்.
மூக்குக்கொம்பன்கள் ஒற்றைப்படை கால் விரல்கள் கொண்ட விலங்குகள் வகையை சேர்ந்தவை. இன்றும் உயிர்வாழும் மொத்தம் ஐந்து வகையான மூக்குக்கொம்பன்களை மூன்று முக்கிய பிரிவாக பிரிக்கலாம். முதல் பிரிவு, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த “வெள்ளை”, கறுப்பு மூக்குக்கொம்பன்கள் ஆகிய இரண்டும் அடங்கும். இவை 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிளியோசீன் என்னும் ஊழிக்காலத்தில் வெவ்வேறு இனமாகப் பிரிந்தன. இவை இரண்டுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு, இவற்றின் வாயின் அமைப்பே ஆகும். “வெள்ளை” மூக்குக்கொம்பனுக்கு வாயின் உதடுகள் பரந்து விரிந்து புல் மேய ஏதுவாக உள்ளன. ஆனால் கறுப்பு மூக்குக்கொம்பனின் வாய் சற்று குவிந்து கூராக இருக்கும். “வெள்ளை” என்னும் முன்னொட்டு ஆப்பிரிக்கான மொழியில் பரந்து/விரிந்த  என்னும் பொருள் கொண்ட ஷ்ஹ்பீ என்னும் சொல் மருவி ஷ்லீவீtமீ (வெள்ளை) என்று ஏற்பட்டதாகும். இது சாம்பல்/வெளிர் பழுப்பு நிறமுடையதே (வெள்ளை அல்ல). மூக்கின் மீது இரட்டைக் கொம்புகள் கொண்ட இரண்டு வகைகளும் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவை. மீதி உள்ள மூன்றில், இந்திய மூக்குக்கொம்பனும், ஜாவாத் தீவு மூக்குக்கொம்பனும் ஒற்றை கொம்புள்ள ஆசிய வகை மூக்குக்கொம்பன்கள். இவை இரண்டாவது பிரிவு ஆகும். இந்திய மூக்குக்கொம்பனும், ஜாவா மூக்குக்கொம்பனும் ஏறத்தாழ 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனி இனங்களாகப் பிரிந்தன…

rhino-gray-clip-art-at-clker-com-vector-clip-art-online-royalty-YWyry6-clipart

 
 
 
 

This post has been viewed 273 times