எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்

 

ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது, “நாம் இந்த மாதிரி சொந்தத்தில் நாடகங்கள் நடத்தனும்” என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பிறகு, சினிமாவில் நடித்து கொண்டு இருக்கும் போது, “நாம் சொந்தத்தில் படம் எடுக்கனும். சொந்தத்தில் வீடு கட்டணும், சொந்தமாக ஒரு ஸ்டுடியோ வாங்கனும் “என்றெல்லாம் நினைத்தார். அவர் நினைத்தது எல்லாம் நடந்தது. இதில் முதலில் 1953-ல் சொந்த நாடக கம்பெனி “எம்.ஜி.ஆர் நாடக மன்றம்”, ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அதே 1953–ல் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு ஸ்தாபனத்திற்கும். ஆர்.எம். வீரப்பனை நிர்வாக பொருப்பாளராக நியமித்தார். ஆர்.எம்.வீ., இந்த ஸ்தாபனத்தில் 1953–ல் இருந்து முழுப்பொறுப்புடன் நிர்வாகித்து கவனித்து வந்தார். ஆர்.எம்.வீ-யிடம் சிலமுக்கியமான விஷயங்களை கலந்து பேசுவதில் எம்.ஜி.ஆர். தவறுவதில்லை. ஆர்.எம்.வீ., கம்பெனி வரவு செலவுகளை மிக திறமையுடன் கவனித்து மக்கள் திலகம் மனதில் இடம்பிடித்தார். ஆர்.எம்.வீ., சுமார் 10 ஆண்டுகாலம், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்” நிறுவனத்தில் பொறுப்பாளராக இருந்தார். இவருக்கு சம்பளம் 500 ரூபாய். சில சமயங்களில் மக்கள் திலகத்திடமும், அவரது அண்ணன் சக்கரபாணியிடமும் கணக்கு கேட்பார். இந்த கணக்கு விஷயத்தில் ஆர்.எம்.வீ.யாராக இருந்தாலும் விடமாட்டார். இவர் நாடகம், சினிமா, அரசியலில் மிகவும் அனுபவமுள்ளவர். இவர் ஒரு சமயம் மக்கள் திலகம் அவர்களிடம் 1963–ல் “நான் சொந்தத்தில் ஒரு படம் எடுக்கனும்.,அதில் நீங்களே நடிக்கனும். அந்த படத்திற்கு எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். இதைகேட்ட மக்கள் திலகம் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.

பயந்து பயந்து கேட்ட ஆர்.எம்.வீ., உடனே சம்மதம் கிடைத்ததை நினைத்து அளவற்ற ஆனந்தப்பட்டு அவருக்கு வேண்டியர்களிடமெல்லாம் இந்த விஷயத்தை சொல்லி ஒரு மாதத்தில் “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் சினிமா பட கம்பெனி தயாராகிவிட்டது. இந்த அலுவலகத்தை திறந்து வைக்க மக்கள் திலகத்தை அழைத்தார். அதன்படி அலுவலகத்தில் 1963–ல் விளக்கு ஏற்றி வைத்து முதல் படத்திற்கு பூஜையும் நடந்தது. படத்தின் பெயர் “தெய்வத்தாய்”, நியாயம், சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை “சத்யா மூவிஸ்” தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தொடர்ந்து மேலும் ஐந்து வெற்றி படங்களை தயாரித்தார். ஆனாலும் தொடர்ந்து மக்கள் திலகத்திடமே ஆர்.எம்.வீ. பொறுப்பில் இருந்தார்.
1950–க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு. சின்னப்பாவும் சினிமாத்துறையை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்களுக்கு பிறகு, மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இந்த இரு திலகமும் சேர்ந்து 1954–ல் “கூண்டுகிளி” என்ற படத்தில் நடித்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்களுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவில்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர்கள் 1954–க்கு பிறகு, மக்கள் திலகம், அண்ணாவுடைய அன்பையும், நடிகர் திலகம் காமராஜர் அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவில் மதிப்பு இருந்தது. ரசிகர்களும் மிக அதிக அளவில் உருவானார்கள். தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.
இதே போல் அரசியலில் உயர்ந்து நின்றார்கள். இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவருக்கும் ராசியில் சற்று வேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தார்கள். சினிமாவில் இந்த ஒரு திலகங்களுக்கும் திரைக்கதைபடி முடிவில் இறக்கும்படி எம்.ஜி.ஆர். “மதுரை வீரன்” படத்தில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்டது. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு தூக்குமேடை அமைந்து இருந்தது. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்களுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களுக்கு முக்கியம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படியோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலை கொடுத்தது. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் இடை இடையே சிறு சிறு சறுக்ககல்கள் ஏற்பட்டாலும், புகழ்கள் உயர்ந்து கொண்டே வந்தது. உலகம் அறிந்த இவர்கள் அண்ணன் முந்தியும், தம்பி பிந்தியும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களின் புகழ்கள் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரைஉலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.
1971 மேடையில் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சில், என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே…
இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும். என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து.
இது 1971–ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கும் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது…!!!.

41G-4mcKb+L

 
 
 
 

This post has been viewed 243 times