ஈலியோஸ் கடவுள் சிலை

 

பாபிலோனின் அரசர் நெபுகட்நேசர், மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை திருமணம் செய்கிறார். தங்கள் நாட்டை போல பாபிலோனில் தோட்டங்கள் இல்லையே என்று வருத்தப்படுகிறாள், ராணி. அதன்படி அடுக்கடுக்கான பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல் நீளத்தில், 80 அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. அதில் அழகான தோட்டம் அமைக்கபப்ட்டு பாபிலோனிய தொங்கும் தோட்டம் என சிறந்து விளங்கியது. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
மூன்றாவதாக, ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய கிரீஸில், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் இந்த அற்புத சிலை செதுக்கப்பட்டது. பின்னர் இது கி.பி. 394 ஆம் ஆண்டில், பிரித்தெடுக்கபப் பட்டு கான்ஸ்டான்டினோபில் நகருக்கு அதாவது தற்கால இஸ்தான்புல் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்று சொல்லப் படுகிறது. அங்கு உருவான மோதலில் இந்த சிலை தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சிலை 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி, விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அந்த சிலை அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது. காண்பவரை வியக்க செய்த அந்த அற்புத சிலை பண்டைய உலக அதிசயத்தில் மூன்றாவதாக இருந்தது.
பண்டைய உலக அதிசயத்தில் நான்காவதாக இருந்தது, ஆர்ட்டெமிஸ் கோயில், இது கி.மு 350–ல், இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில், இப்பொழுது அதன் அஸ்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. கி.மு ஏழாம் நூற்றாண்டில் இதன் பழைய கோயில், பெரு வெள்ளத்தினால் அழிந்து போயிற்று. உலக அதிசயமாக கருதப்பட்ட இந்த புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு. 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத்திட்டம் முதலில் கிரேக்க கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகன் மெத்தாசெனஸ் என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது.
பண்டைய உலக அதிசயத்தில் ஐந்தாவது மௌசோல்லொஸின் மௌசோலியம். இது இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. மௌசோல்லொஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும், அவரது மனைவி மற்றும் சகோதரிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும் இது. இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் என்பவர்கள் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. அது ஏறத்தாழ 45 மீட்டர் உயரம் கொண்டு நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளை தாங்கி யிருந்தது. இதன் அழகைக் கண்டே இதனை பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தனர். மௌசோலியம் என்ற சொல் மௌசோல்லொஸிற்கு காணிக்கையாக்கப் பட்ட கட்டிடம் என்ற பொருளில் சொல்லபப்ட்டது.
பண்டைய உலக அதிசயத்தில் ஆறாவதாக கருதப்பட்டது, ரோடொஸின் கொலோசஸ் சிலை. இது தற்கால கிரீசில், கி.மு 280–ல் உருவாக்கப்பட்டது. இது கிரேக்கத் தீவான ரோடொஸில் ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக இதன் பிரமாண்டத்துக்காக சேர்க்கபப்ட்டது. சிலீணீக்ஷீமீs ஷீயீ லிவீஸீபீஷீs என்பவரால் கி. மு. 292 தொடங்கி கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி.மு. 224 -ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிலையின் கால்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது. சில ஆண்டுகளே இருந்த இந்த சிலை பல நூற்றாண்டுகளாக அதிசயமாக இருந்தது, அதிசயமான விஷயமே.
பண்டைய உலக அதிசயத்தில் ஏழாவதும், இறுதியானதும் அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம் எனப்படுகிறது. இது இன்றைய எகிப்தில் இருந்து வந்தது. கி.மு 3–ம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் இது கட்டப்பட்டது. அழகிலும் பிரமாண்டத்திலும் சிறந்து விளங்கிய இந்த பண்டைய உலக அதிசயங்கள் பாதுகாக்கப்படாமல் காலப்போக்கில் அழிய தொடங்கின. எகிப்து பிரமிட்டை தவிர மற்ற ஆறு வரலாற்று அதிசயங்களும் மறைந்து போயின. பின்னர் தான் புதிய அதிசய இடங்கள் ஏழு எழுதப்பட்டன…!!!.

">Colossus_of_Rhodes ">Hanging_Gardens_of_Babylon Statue_of_Zeus

 
 
 
 

This post has been viewed 469 times