காண்டாமிருகம்

 

காண்டாமிருகம்

(வாசகர்களே, இந்த புதிய பகுதியில் வாரம் தோறும் பிராணி மற்றும் விலங்குகள் பற்றி பார்க்க இருக்கிறோம். சென்ற இதழில் வெளியான காண்டா மிருகம் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சியை இனி படிக்கலாம். கடந்த இதழில் இரண்டு வகையான காண்டா மிருகம் பற்றி பார்த்தோம். அடுத்ததாக 3-வது வகை காண்டா மிருகம் பற்றி பார்ப்போம்)

இந்த மூக்குக்கொம்பன்களைக் காட்டிலும் மிகச் சிறியதான சுமத்ரா மூக்குக்கொம்பன் மூன்றாவது வகை ஆகும். இந்த சுமத்ரா வகைக்கு, ஆப்பிரிக்க மூக்குக்கொம்பனைப் போல் இரட்டைக் கொம்புகள் உண்டு. இது உயரமான மலைப்பகுதிகளும் வாழ வல்லதாகையால் இதன் உடலில் முடி அதிகமாக இருக்கும். வேட்டையாடி கொல்லப்படுவதால் இன்று மிகவும் அழியும் தருவாயில் இருக்கும் சுமத்ரா மூக்குக்கொம்பன் மொத்தம் 275 தான் உலகில் உள்ளன என்று கணக்கிட்டுள்ளார்கள். எல்லா மூக்குக்கொம்பன்களும் அழிவுறும் வாய்ப்புடன் உள்ளன. இந்திய காண்டாமிருகங்கள் ஏறத்தாழ 2700 மட்டுமே இன்றுள்ளன. அதே போல ஆப்பிரிக்க “வெள்ளை” காண்டா மிருகமும் 9000 தான் இன்றுள்ளன.
காண்டாமிருகத்தின் உடல் பருமனை ஒப்பிடும் பொழுது, இதன் மூளையின் எடை பாலூட்டிகளில் மிகச்சிறியது என்று கருதுகிறார்கள். இதன் மூளையின் எடை ஏறத்தாழ (400 முதல் -600 கி). இது பெரும்பாலும் இலை தழைகளையே உண்ணுகின்றன. ஆப்பிரிக்க காண்டாமிருகத்துக்கு முன்னம் பற்கள் கிடையாது, ஆகவே முன்கடைவாய்ப் பற்களைக் கொண்டே மெல்லுகின்றன.
மூக்குக்கொம்பனின் கொம்பு சிறு புதர்களை வேரோடு பிடுங்கி எறிய உதவுகின்றது. இந்த கொம்புப் பகுதி நகமியம் (கெரட்டின்) என்னும் பொருளால் ஆனது. நகம், மயிர் போன்ற பகுதிகளும் இதே பொருளால் ஆனதே.
கறுப்பு மூக்குக்கொம்பனைத் தவிர மற்ற எல்லா மூக்குக்கொம்பன்களுக்கும் 82 நிறப்புரிகள் (நிறமிகள், குரோமோசோம்கள்) உள்ளன, ஆனால் கறுப்புக் காண்டாமிருகத்துக்கு மட்டும் 84 நிறமிகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே இதுவே யாவற்றினும் அதிக எண்ணிக்கை உடையதாகும்.
மூக்குக்கொம்பனை ஆங்கிலத்தில் ரைனோசெரசு (“க்ஷீலீவீஸீஷீநீமீக்ஷீஷீs” )என்று அழைக்கின்றனர். இது கிரேக்கச் சொல்லாகிய ரைனோகெரசு என்பதில் இருந்து உருவானது. செவ்வியல் கிரேக்க மொழியில் ரைனோசு என்றால் மூக்கு என்று பொருள். கெராசு என்றால் கொம்பு என்று பொருள். எனவே மூக்குக்கொம்பன் என்று பொருள்படும் ரைனோகெரசு என்பது ரைனோசெரசு என்று வழங்குகின்றது. ஆங்கிலத்தில் பன்மைச்சொல் வடிவம் ரைனோசெர்ட்டி என்பதாகும்…

 
 
 
 

This post has been viewed 339 times