25.மக்கள் திலகம் புரிந்த புரட்சிகள்

 

25.மக்கள் திலகம் புரிந்த புரட்சிகள்

கலைத்துறையில் எம்.ஜி.ஆர். பல புதுமைகளை உண்டாக்கினார். அரசியலில் பல புரட்சிகளை செய்தார் படைத்தார். அரசாங்கத்தில் நேர்மையான நல்லாட்சியை நடத்தினார். மக்கள் குறைகளை அறிந்து மாவட்டம்தோறும் திட்டம் போட்டார். வறுமையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஏழை மக்களுக்கு உடனே, என்ன செய்யவேண்டும்? என்பதை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகள் நடத்தினார். பழஞ்சோறும் கூட பார்த்து அறியா பாலகர்களுக்கெல்லாம் தினம் தோறும் ஒரு வேலை மதிய சத்துணவு கொடுக்க உத்தரவு இட்டார். ஏழை மக்களுக்கு வேண்டிய உணவு பொருட்கள் மீது அக்கறை காட்டினார்.
தான் ஒரு நாட்டின் “முதல்மந்திரி” என்ற தற்பெருமை இல்லாமல் எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்தினார். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பார். அவர்களிடம் நாம் மக்களுடைய சேவகர்கள் என்று அடிக்கடி சொல்வார். மற்ற மந்திரிகளிடமும், 1960-ல் சினிமாவில் பிரபலமான மக்கள் திலகம் அவர்கள் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கைவண்டி இழுத்து செல்லும் தொழிலாளிகளுக்கு செருப்புகள் வாங்கி கொடுத்தார். இது சென்னை நகரம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் உள்ள கைவண்டி தொழிலாளர்களுக்கும் காலில் செருப்பு இல்லாதவர்களுக்கும் செருப்பு வாங்கி கொடுக்க வேண்டும் என்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாக, தன்னுடைய சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார்.
இதே போல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கும் மழை பெய்யும் காலங்களில் அவர்களுக்கு மழை கோட்டு வாங்கி கொடுத்தார். அந்த காலத்தில் மனிதனை வண்டியில் உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்வார்கள். அதற்கு கை ரிக் ஷா என்று பெயர். இப்படி மனிதன் மனிதனை உட்கார வைத்து இழுத்து செல்லக்கூடாது இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் இவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அப்போது, உள்ள அரசாங்கத்தாரிடம் கேட்டு கொண்டார். அதன்பிறகு அந்த கைரிக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்படி இதுமாதிரியான எவ்வளவோ விஷயங்கள் உண்டு. இவைகள் எல்லாம் அரசியல் ரீதியாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் இது அவருடைய வரலாற்றில் வரவேண்டிய விஷயங்கள்.
மக்கள் திலகம் மிக விரும்பி கொண்டாடும் விழாக்களில் ஒன்று தைப்பொங்கல். அன்று காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து 7 மணிக்கு குளித்து புத்தாடை உடுத்தி சூரிய நமஸ்காரம் செய்து, வீட்டு மாடியில் இருந்து கீழே உள்ள ஹாலுக்கு எம்.ஜி.ஆர். வந்து விடுவார். பொங்கல் வாழ்த்து சொல்ல வந்து இருப்பவர்களையும் பார்ப்பார். பிறகு, சாப்பாடு ஹாலில் பந்தி பாய் விரிக்கப்பட்டு தலைவாழை இலைபோட்டு நெய் மணக்கும் சர்க்கரை பொங்கலும், உளுந்து வடையும், மல்லிகைப்பூ இட்லியும், சட்டினியும், சாம்பாரும் இருக்கும். எம்.ஜி.ஆர்., வந்து இருப்பவர்களுடன் சமமாக அமர்ந்து சாப்பிடுவார். ஸ்பெஷலாக ஐயர்கள் சமையலுக்கு வந்து இருப்பார்கள். அன்று ராமாபுரம் தோட்டத்தில் வேலை செய்து இருப்பவர்களுக்கு வேஷ்டி சட்டையும், புடவைகளையும் அதோடு, பணமும் ஜானகி அம்மையார் கொடுப்பார்கள்.
அன்று தோட்டத்தில் திருவிழா போல் இருக்கும் அடுத்து சித்திரை தமிழ் வருடப்பிறப்பு அன்று, மாடியில் அவருடைய ரூமில் பல தட்டுக்களில் நவதானியங்கள், தேங்காய் பழம் வகைகள் புதுவேஷ்டி சட்டை, புடவை நிறைய நகைகள் ஒரு ரூபாய் நாணயங்கள் இவைகள் எல்லாம் தாம்பூலத்தில் வைக்கப்பட்டு இருக்கும். வருடப்பிறப்பு காலை படுக்கையில் இருந்து எழுந்த உடன் தாம்பூலத்தில் வைக்கப்பட்டுள்ள பொருள்களைத் தொட்டு கும்பிட்ட பிறகு, தான் மற்ற வேலைகள். அன்று காலை 8 மணிக்கு எல்லாம் கீழே ஹாலுக்கு வந்து விடுவார் இதற்குள்ளாக தோட்டத்தில் வேலை செய்பவர்கள் “சத்யா ஸ்டுடியோ”, “மாம்பலம் ஆபீஸ்” தலைமைக் கழகம் கட்சி ஆபீஸ் இவர்கள் எல்லாம் முன் கூட்டியே மாடிக்கு சென்று விடுவார்கள். காரணம் நாம் முதல்லே முதல் ஆளாக ஆசிர்வாதம் பெற்று விட வேண்டும் என்ற ஆர்வம். அதேபோல் எம்.ஜி.ஆர். ஆசிர்வதித்து பணம் கொடுப்பார். அன்றைக்கு தன்னைப் பார்க்க வந்து இருப்பவர்கள் எல்லோருக்கும் பணம் கொடுப்பார். அன்று காலை 10 மணி வரை இந்த திருவிழா நடக்கும் அதற்கு பிறகு சூட்டிங்குக்கு போய்விடுவார்.
அங்கு எந்த ஸ்டூடியோவில் எந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்குமோ அந்த இடத்தில் அது சமயம் படப்பிடிப்புக்கு உள்ள சக தொழிலாளர்கள் விபரம் தெரிந்தவர்கள் அன்று அண்ணே, தமிழ் புத்தாண்டு “எங்களை வாழ்த்துங்கள்” என்று வந்து நிற்பவர்களுக்கெல்லாம் வாழ்த்தி பணம் கொடுப்பார். அன்று மதிய சாப்பாடு படப்பிடிப்பு நிலையத்திற்கே ,தோட்டத்தில் இருந்து வந்து விடும். எப்போதும் அசைவ சாப்பாடு வரும். ஆனால், தை பொங்கல் தமிழ் வருடப்பிறப்பு மற்றும் வெள்ளிகிழமை சைவ சாப்பாடு கூட்டு பொறியல், உருளை கிழங்கு மசாலா, அவியல், கீரை ஊறுகாய், அப்பளம், பாயாசம், தயிர், சாம்பார், மோர் குழம்பு, ரசம் இத்தனை வகைகளுடன் 25 பேர்களுக்கு வரும். வாழை இலைபெரியதாக இருக்கும். இந்த விஷயம் எம்.ஜி.ஆரின் வரலாற்றில் முக்கியமானது.
ஆங்கில வருடப் பிறப்பை எம்.ஜி.ஆர். கொண்டாடமாட்டார். இதை அறிந்தவர்கள் யாரும் அன்று “ஹாப்பி நியூ இயர்” என்று அவரிடம் சொல்ல மாட்டார்கள். அவரும் யாருக்கும் போனில் அல்லது நேரில் வாழ்த்து சொல்லமாட்டார். காரணம் ஆங்கிலேயர்கள் தினம் இது. சுதந்திர போராட்டத்தின் போது நம் நாட்டு வீரர்கள் தமிழர்கள் மற்றும் எவ்வளவு பேர்கள் உயிர்தியாகம் செய்தார்கள். 1935-ல் மக்கள் திலகம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் காந்தி பக்தராக இருந்தார். கதர் ஆடைகள் உடுத்துவார். பிற மொழிகளை கற்றுக்கொள்ளதவர் இல்லை. ஆனால், அதற்கு அடிமையாகி விடக்கூடாது. நான் அரசியல்வாதி சிறு வயதில் இருந்தே அதாவது 1954–ல் இருந்து அறிஞர் அண்ணாவுடைய அரசியலைக் கற்றுக்கொண்டவன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் திராவிட பரம்பரை கொள்கையாக கொண்ட நான் ஆங்கில வருடப்பிறப்பை எப்படி கொண்டாடுவேன். அதனால் தயவு செய்து இனிமேல் அடுத்து வரும் “புதுவருடப் பிறப்பு” அன்று மாலை மரியாதை எதுவும் வேண்டாம் என்று இதை மக்கள் திலகம் முதல் அமைச்சர் ஆன பிறகு 1978–ல் ஜனவரி முதல்நாள் சில முக்கிய அரசாங்க அதிகாரிகள் முதல்அமைச்சரை பார்த்து ஆங்கில வருடப் பிறப்பு வாழ்த்துக்களை சொல்ல வந்தவர்களிடம் சொன்ன செய்தி இது.!!!.

 
 
 
 

This post has been viewed 262 times