காண்டாமிருகம்

 

காண்டாமிருகம்

( சென்ற இதழில் வெளியான காண்டா மிருகம் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சியை இனி படிக்கலாம்.)

“வெள்ளை” மூக்குக்கொம்பன் என்ற காண்டாமிருகம், உண்மையில் சாம்பல் நிறமுடையது. ஆப்பிரிக்கான மொழியில் பரந்த அல்லது விரிந்த என்னும் பொருள் படும் ஷ்ஹ்பீ ன்னும் சொல்லைத் தவறுதலாக ஷ்லீவீtமீ (வெள்ளை) என்று உணர்ந்ததால், ஏற்பட்ட குழப்பத்தால் “வெள்ளை மூக்குக்கொம்பன்” என்று அழைக்க நேர்ந்தது. கறுப்பு மூக்குக்கொம்பனின் வாயின் உதடுகள் சற்று குவிந்து இருக்கும். “வெள்ளை” மூக்குக்கொம்பனின் வாயின் உதடுகள் அகலமாக இருக்கும். இரண்டாவது மூக்குக்கொம்பு குட்டையாக இருக்கும்.
யானைக்கு அடுத்தபடியாக, வெள்ளை மூக்குக்கொம்பனும், இந்திய காண்டாமிருகமும், நீர்யானையும் உலகிலேயே எடை மிகுந்த தரை விலங்குகள். வெள்ளை மூக்குக்கொம்பனில் இரண்டு உள் இனங்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் பெருமளவு உள்ள தென் வெள்ளை காண்டாமிருகம் (சிமீக்ஷீணீtஷீtலீமீக்ஷீவீuனீ sவீனீuனீ sவீனீuனீ) வகையில் ஏறத்தாழ 14,500 விலங்குகள் உள்ளன. மிக இக்கட்டான அளவு அருகிவிட்ட வட வெள்ளை காண்டாமிருகம் (சிமீக்ஷீணீtஷீtலீமீக்ஷீவீuனீ sவீனீuனீ நீஷீttஷீஸீவீ) மொத்தம் நான்குதான் உலகில் உள்ளன.
வெள்ளை காண்டாமிருகம் பெரிய உடலும் சிறிய கழுத்தும், பெரிய முகமும் பரந்த நெஞ்சுப்பகுதியும் கொண்ட பெரும் விலங்கு. இதன் எடை 3000 கி.கி. (6000 பவுண்டு). 4,500 கி.கி.(10,000 பவுண்டு) எடையுடைய விலங்கும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.. முன்னுள்ள கொம்பின் நீளம் ஏறத்தாழ 90 செ.மீ. இருக்கும், ஆனால் 150 செ.மீ. கூட இருக்கக் கூடும். இரண்டாவது கொம்பு பெரும்பாலும் சிறியதாக இருக்கும். இம் மூக்குக்கொம்பனின் உடல் சாம்பல் நிறம் முதல் வெளிறிய பழுப்பு/மஞ்சள் நிறம் வரை வேறுபாடு கொண்டது. உடலில் மயிர் ஏதும் இருப்பதில்லை. வாலிலும், காது மடலின் ஓரத்திலும் முடியிருக்கும். இதன் வாய் அகலமாக இருக்கும். முதுகில் சற்றே திமில் போன்ற உயர்ச்சி இருக்கும்.
கறுப்பு மூக்குக்கொம்பனில் (ஞிவீநீமீக்ஷீஷீs தீவீநீஷீக்ஷீஸீவீs) நான்கு உள்ளினங்கள் உள்ளன: தெற்கு நடுப்பகுதி உள்ளினம்(ஞிவீநீமீக்ஷீஷீs தீவீநீஷீக்ஷீஸீவீs னீவீஸீஷீக்ஷீ):- இவ்வகை அதிக எண்ணிக்கையில் நடு தான்சானியாவில் இருந்து தெற்கே ஜாம்பியா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் முதல் தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் காணப்பட்டன, தெற்கு-மேற்கு உள்ளினினம் (ஞிவீநீமீக்ஷீஷீs தீவீநீஷீக்ஷீஸீவீs தீவீநீஷீக்ஷீஸீவீs): -இவை நமீபியா, தென் அங்கோலா, மேற்கு போட்சுவானா, தென் ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி ஆகிய இடங்களில் உள்ள வறண்ட அல்லது சிறிது வறண்ட சவான்னா பகுதிகளில் காணப்படுகின்றன; கிழக்கு ஆப்பிரிக்க உள்ளினம் (ஞிவீநீமீக்ஷீஷீs தீவீநீஷீக்ஷீஸீவீs னீவீநீலீணீமீறீவீ): இவை பெரும்பாலும் தான்சானியாவில் காணப்படுகின்றன; மேற்கு ஆப்பிரிக்க உள்ளினம் (ஞிவீநீமீக்ஷீஷீs தீவீநீஷீக்ஷீஸீவீs றீஷீஸீரீவீஜீமீs):- இவ்வகை ஏறத்தாழ அற்றுவிட்டதாக அறிவிக்கபட்டுள்ளது.
வளர்ந்த கறுப்பு மூக்குக்கொம்பன் அதன் தோள்பட்டைவரை 147- முதல் 160 செமீ (57.9-63 அங்குலம்) உயரம் இருக்கும். இதன் நீளம் 3.3-3.6 மீ வரை இருக்கும்….

 
 
 
 

This post has been viewed 253 times