26.எம்.ஜி.ஆரின் தந்தை மறைவு

 

26.எம்.ஜி.ஆரின் தந்தை மறைவு

தீபாவளி பண்டிகையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கொண்டாட மாட்டார். காரணம், இந்த பண்டிகையை யாருக்காக? எதற்காக? இவ்வளவு பணம் செலவு செய்து கொண்டாடுகிறார்கள்? என்ற கேள்விக்கு பதில் ஒரு பெரியவர் சொன்னார். வடநாட்டில் நரகாசூரன் என்ற ஒரு பெரிய அரக்கன் இருந்தான். அவனை கொன்று விட்டார்கள். அதற்காகத்தான் தீபாவளி என்று சுருக்கமாக சொன்னார். எது எப்படியோ நான் தீபாவளி கொண்டாடுவதில்லை என்று “நருக்” கென்று பதில் சொன்னார், மக்கள் திலகம். இதில் ஒரு முக்கிய விஷயம். ராமாபுரம் தோட்டத்தில் வேலை செய்பவர்கள். திருமணம் செய்து கொண்டவராக இருந்தால், அவர்களுடைய குடும்பத்திற்கு தகுந்தாற்போல ஜானகி அம்மையாரிடம் சொல்லி, இரண்டு நாள்களுக்கு முன்பாகவே பணம் கொடுத்து விடுவார்கள். தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள், – உதவியாளர்கள், – ஓட்டுநர்கள் – சமையல்காரர்கள், வாட்சுமேன் – தோட்டத்தில் விவசாயம் பார்ப்பவர்கள், ஆடு-மாடு மேய்ப்பவர்கள், சலவைத் தொழிலாளி இப்படி 25-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்தார்கள். இவர்கள் அத்தனை பேர்களும், தீபாவளி அன்று புத்தாடை உடுத்தமாட்டார்கள். வீட்டிற்கும் போகமாட்டார்கள். மக்கள் திலகம் எவ்வழியோ அவ்வழியே இவர்களும்.
அதாவது ஒன்று 1967 ஜனவரி 12-ம் தேதி எம்.ஆரை , எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்ட நாள். அன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 வரை அவர் யாருடனும் பேசமாட்டார். சாப்பிடவும் மாட்டார். வெளியே எங்கும் செல்லவும் மாட்டார். அடுத்து 1969 மார்ச் மாதம் அறிஞர் அண்ணா இறந்தார். அன்று காலை சக தோழர்களுடன் அவருடைய சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவார். அன்றும் உண்ணாவிரதம்., மவுன விரதம் .தனக்கு அரசியல் ஆசானாக இருந்த அண்ணா நினைவு நாளன்று மக்கள் திலகம் மட்டும் தான் மவுனமாக சாப்பிடாமல் இருப்பார். இப்போது,. அப்படிப்பட்ட மகான் மறைந்த நாளன்று எவ்வளவோ பேர்கள் அன்று சாப்பிடாமல் மவுனமாக இருக்கிறார்கள். டிசம்பர் 24–ந் தேதி அவருடைய நினைவுநாள.
எம்.ஜி.ஆரின் இயற்பெயர் மருதூர் கோபாலன் தான். இது ரெக்கார்டுபடி உள்ள பெயர். அவர் பாலக்காட்டுக்கு அடுத்து உள் வடவனூர் என்ற ஊரில் பிறந்தவர். நடுத்தர குடும்பம். இவரது தந்தை தமிழ், ஆங்கிலம் மலையாளம் படித்தவர். சாதுவானவர். தர்மம், சத்தியம், நியாயம், அன்பு, பண்பு உள்ளவர். அவர் பாலக்காட்டில் துணைநீதிபதியாக வேலைபார்த்தவர். பிறகு, இலங்கை கண்டியில் ஆங்கில புரபசராகவும் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதியாகவும் வேலை பார்த்தவர்.
எம்.ஜி. சக்கரபாணி, தான் எம்.ஜி.ஆரின் அண்ணன். எம்.ஜி. ராமச்சந்திரன் 5–வது குழந்தையாக பிறந்தார். குழந்தை பருவத்தில் மிக சுறுசுறுப்பாகவும் இருந்தார். 5 குழந்தைகள் இருந்தாலும், 5–வது பிறந்த எம்.ஜி.ராமச்சந்திரனைத்தான் அவரது அப்பா, சிறுவயதில் தூக்கி கொஞ்ச ஆசைப்படுவார். அவர்தான் ராமச்சந்திரன் என்று பெயர் வைத்தார். ஆனால், அவரை, அவரது சகோதரர்கள் எல்லோரும் “சந்திரா” என்று கூப்பிட்டனர். நல்ல செழிப்போடு இருந்த குடும்பத்தில் சனீஸ்வரன் நுழைந்து விட்டான். 1919–ல் திடீரென்று எம்.ஜி.ஆரின் அப்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அப்பாவை இழந்த பிள்ளைகளுக்கு ரொம்பவும் துயரமாகிவிட்டது. அம்மாவுக்கு ,அப்பாவுடைய இறப்பு ரொம்பவும் துயரமாகிவிட்டது. அவரையே நினைத்து கொண்டு எங்களை சரிவர கவனிக்கவில்லை. இந்த காலகட்டத்தில் என்னுடன் பிறந்த இரு சகோதர சகோதரியும் விஷக் காய்ச்சல் ஏற்பட்டு இறந்து போய் விட்டார்கள். இந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் தாயுடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும்?
இந்த தகவல்களை, 1976–ல் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவருடைய ஒரு உற்ற நண்பரிடம் சொன்ன விஷயம்…..
“நாங்கள் கஷ்டப்படுகிற காலத்தில் என்னிடம் தம்பி அடிக்கடி சொல்வான்……. கவலைபடாதீங்க அண்ணா, முன்னை போல் வாழ்ந்து காட்டுவோம். பெரிய பணக்காரங்க போல் நாமும் பணக்காரர்களாகி விடுவோம். நாங்கள் நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும்போது மற்ற நடிகர்களிடம் தமாசுக்கு அடிக்கடி சொல்வான். நான் சொந்தத்தில் நாடகங்கள் நடத்தும் போது வாங்க நல்லவேஷம் தருகிறேன். இப்படி எதையாவது தமாஷாக பேசுவான்”.__
மக்கள் செல்வாக்கு, மக்கள்திலகத்திற்கு மட்டும்தான் என்ற பெருமையைப் பெற்றவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய உருவம் தான் மறைந்தது. அவருடைய புகழ் மறையவில்லை; குறையவில்லை மலைபோல் உயர்ந்து வளர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த வள்ளலின் புகழை நாடெங்கிலும் மண்ணிலே விதைத்து வைத்து இருக்கிறார்கள். மக்கள் அவரை மறைக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. மக்கள் திலகம் மக்களுக்கு தொண்டு செய்து மக்களின் அன்பை பெற்றவர். பொது மக்களே என் சொத்து என்று சொன்னவர். மக்களால் உயர்ந்தது தான் என் புகழ். நான் மக்கள் சொத்து என்று அடிக்கடி சொன்னவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
தமிழ்நாடு, கேரளம் ஆந்திரம், கர்நாடகம் இவைகளை சேர்ந்தது தான் திராவிட நாடு. சேரநாடு – கேரளம், ஒரு காலத்தில் இங்கே எல்லாம் தமிழர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து “நாடோடி மன்னன்’ படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நம்பியார் – கேரளம், பானுமதி – ஆந்திரம், சரோஜாதேவி – கர்நாடகம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு. “நாடோடி மன்னன்” படத்திலேயே திராவிட நாடு என்பதை காண்பித்து உள்ளார்.
இவைகளுக்கெல்லாம் மீறி, அறியாதது போல் ஒரு சமயம் திமுகவினர், எம்.ஜி.ஆரை மலையாளி….. கேரளத்துக்காரன் என்று பேசினார்கள். அவர்களுடைய தந்தையை கோபாலன் மேனன் என்று எழுதினார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கொங்கு வெள்ளாளர் என்பதை 1978–ல் அவரிடமே சிலர் சொன்னார்கள். ஒரு சினிமா நடிகர், அரசாங்கம் நடத்துவதா? என்று பேசப்பட்டது. ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வள்ளலுக்கு வள்ளல், நல்லவர்களுக்கு நல்லவர், வல்லவனுக்கு வல்லவன். தர்மத்திற்கு தலைவணங்குபவர். அநியாயத்தை கண்டிக்க அஞ்சாதவர்.!!!.

 
 
 
 

This post has been viewed 230 times