29+7

 

29+7

1. தமிழ்நாடு:
* தமிழக விவசாயிகள், டெல்லியில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் பற்றி மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் கேள்விகள் கேட்டபோது, அமளி ஏற்பட்டது.
2. ஆந்திரா
*பள்ளிக்கூடத்துக்கு செல்ல மறுத்த சிறுவன், குடிநீர் தொட்டியின் மீது ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினான்.
3. தெலுங்கானா
* தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுனர், அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், சொந்த ஊருக்கு கொண்டு வந்து எரியூட்டப்பட்டது.
4. அசாம்:
* அசாம் மாநிலத்திலுள்ள நீதிமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகாததால், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5. பீகார்
*” சாம்பரன் சத்தியாகிரகா”வின் 100-வது ஆண்டு விழா, இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்று, பீகார் அரசு அறிவித்துள்ளது.
6. சத்தீஸ்கர்
* 3 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேலுள்ள கிராமங்களில் மது விலக்கு அமல் படுத்தப்படும் என்று முதல்வர் ராமன் சிங் அறிவித்துள்ளார்.
7. குஜராத்
* இந்திய அதிகாரி குல்குஷனை தூக்கில் போடுவதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கடலில் தவித்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களை, இந்திய மீனவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்.
8. அரியானா:
* அரியானாவில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
9. இமாச்சல பிரதேசம்
* சிம்லாவிலுள்ள ஜூக்கு கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
10. ஜம்மு காஷ்மீர்

* காஷ்மீர் மாநில அமைதிக்கு பிரிவினைவாதிகள் தொடர்ந்து பங்கம் விளைவித்து வருகிறார்கள்.
11. ஜார்கண்ட் :
* லிட்டிபாரா சட்டசபை இடைத்தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
12. கர்நாடகம்:
* வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பெங்களூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
13. கேரளா:
* கேரளாவில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், மலையாள மொழி பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று, முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.
14. மத்திய பிரதேசம்:
* தன் வீட்டின் அருகே செயல்பட்ட செல்போன் டவர் காரணமாக தனக்கு புற்று நோய் ஏற்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், குறிப்பிட்ட செல்போன் டவரை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15. மகாராஷ்டிரா:
*சாய்பாபா ஆலயம் இருக்கும் சிர்சி நகர விமான நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16. ஒடிசா:
* பத்ராக் நகரில் நடந்த மோதலை தொடர்ந்து, அங்கு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 60 பேர் வரை கைதாகி இருக்கிறார்கள்.
17. பஞ்சாப்:
* பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர்.
18. ராஜஸ்தான்:
*ராஜஸ்தானிலுள்ள ஒரு கிராமத்தில், மணமகன் வீட்டாருக்கு ரூ. 1 கோடியே 51 ஆயிரத்தை வரதட்சணையாக, மணப்பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.
19. உத்தர பிரதேசம்:

* உத்தர பிரதேசத்தில் கிராம மக்களுக்கு 18 மணி நேர மின்சாரம் சப்ளை செய்யப்படும் என்று , மாநில அரசு அறிவித்துள்ளது.
20. உத்தர்காண்ட்:
*உத்தர்காண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று உத்தர்காண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, உத்தரபிரதேச முதல்வரை, உத்தர்காண்ட் முதல்வர் சந்தித்து பேசினார்.
21. கோவா :
*கோவாவில் இரவு நேர கேளிக்கை விருந்துகள் மற்றும் மது விருந்துகளுக்கு தடை விதிக்க முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்னும் இரண்டு வாரத்தில் இதற்கான உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22. அருணாச்சல் பிரதேசம் :
*தனியாருக்கு, அரசாங்க அதிகாரிகளுக்கான பாஸ்போர்ட்டுகளை, அருணாச்சல பிரதேச அரசு வழங்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.
23. மணிப்பூர்
*மணிப்பூர் மாநிலத்தில் கங்போக்பி என்ற இடத்தில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அந்த வாகனங்களுக்கு மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு அளித்து வந்தனர். அப்போது திடீர் என்று அந்த வாகனங்கள் மீது தீவிரவாதிகள் அதிகாலை நேரத்தில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பெட்ரோல் டாங்கர் லாரிகள் பலத்த சேதம் அடைந்தன.
24. மேகாலயா:
*மேகாலயா மாநிலத்தில் ரிபோயி மாவட்டத்திலுள்ள ,அரசு செக்போஸ்ட் மற்றும் எடை போடும் இயந்திரம் இருக்கும் இடத்தில் நிலக்கரி ஏற்றிவரும் லாரிகளுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை ஒரு லாரிக்கு அதிகாரப்பூர்வ மற்ற முறையில் வசூலிக்கிறார்கள். இதனை அரசு தடுக்கா விட்டால், அந்த செக் போஸ்ட் பகுதியை அடித்து நொறுக்குவோம் என்று, மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.
25. மிஜோரம்:
*மிஜோரம் மேற்கு ஐஸ்வால் நகர பகுதியிலுள்ள சாலமோன் கிறிஸ்தவ ஆலயத்தில் திருவிழா நடந்து வருகிறது. 1984–ம் ஆண்டு, இந்த ஆலயம் முழுவதும் வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்டது. இதனால் அங்கு பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு குவிந்து வருகிறார்கள். இந்த கோவிலை யொட்டி இயற்கையாக உள்ள மிருககாட்சி சாலையும் இருக்கிறது. இதனை பார்க்கவும் மக்கள்திரளாக கூடுகிறார்கள்.
26. சிக்கிம்:
*சிக்கிம் மாநிலத்திலுள்ள புருடெக் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. பிரேம் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கிம் ஜனநாயக கட்சியின் தில்லி ராம் தாபா 8.406 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நோட்டாவுக்கு 100 பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்டு கட்சியால் நாட்டுக்கு நன்மை கிடைக்காது. அதன் கொள்கைகள்,. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்”என்ரு குறிப்பிட்டார்.
28. மேற்கு வங்காளம்:
மேற்கு வங்காள மாநிலத்தில் நாரதா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி, எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. இது பற்றி மேற்கு வங்க அமைச்ர் சுப்ரதா முகர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “ இது பற்றி நிறைய சொல்ல விரும்புகிறேன். ஆனால்,கட்சியின் உத்தரவுக்கு கீழ்ப்பட்டு, எதையும் கூற மாட்டேன்”என்றார்.
29. நாகலாந்து :
நாகலாந்து வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார்.அபர்போது அவர், “ நாக லாந்து மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற, தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்றார்.
—-
யூனியன் பிரதேசங்கள்:

1. டெல்லி
*பிரபல திரைமறைவு கொள்ளைக்காரன் சோட்டாராஜன் மீதான போலி பாஸ்போர்ட் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
* டெல்லியிலுள்ள குடிசைப்பகுதிகளை மேம்படுத்த, டெல்லி அரசு எந்த நிதியையும் ஒதுக்க வில்லை என்று, பாரதீய ஜனதா குற்றம் சாட்டி இருக்கிறது.
*டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடக்க இருக்கும் தேர்தலில் சுயேச்சைகளுக்கு பாரதீய ஜனதா ஆதரவு கொடுக்கிறது.
*டெல்லியை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியை, ரூ. 340 கோடி ஊழல் வழக்கு விசாரணைக்காக டாமன்தீவுக்கு அழைத்துச்செல்ல, டெல்லி நீதிமன்றம் 4 நாட்கள் அனுமதி அளித்துள்ளது.
2.புதுச்சேரி:
*புதுச்சேரியிலுள்ள பல்கலைக்கழகத்தில் , முது நிலை பட்ட படிப்பு படிக்க, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மாலை நேரத்தில் கடற்கரையில் காற்று வாங்க புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
3.அந்தமான் நிகோபர் தீவுகள்:
*அந்தமான் நிகோபர் தீவுகளில் சமீபத்தில் 6.4 புள்ளி அளவில் பூமி அதிர்வு ஏற்பட்டது. இதில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட வில்லை.
4. தத்ரா, நாகர் ஹவேலி
*சுற்றுலா வந்த 25 பேர் படகில் ஏறிச் சென்ற போது சுழலில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் 5 பேர் இறந்தனர்.மற்றவர்கள் மீட்கப்பட்டனர். இந்த சுற்றுலா பயணிகள், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
5.சண்டிகார்:
சண்டிகாரை சுற்றி மலைகள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்குள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்க்க, திரளான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
6. டாமன் டையூ:
டாமன் டையூவில் இருக்கும் இந்திய கடற்படை விமானிகளுக்கான பயிற்சி கல்லூரியில் இந்த ஆண்டு பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சி முடித்த 10 பேரில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7. லட்சத்தீவு:
*லட்சத்தீவில் நிலம், வீடு விற்பனை தொடர்பாக மத்திய அரசு புதிய அறிவிப்புகளை விரைவில் வெளியிட இருக்கிறது.
*லட்சத்தீவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சில நோயாளிகளை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையை சேர்ந்த விமானம் கொச்சி போய் சேர்ந்தது.

 
 
 
 

This post has been viewed 231 times