காலையில் காபியை எந்த நேரத்திற்கு மேல் குடித்தால் ஆபத்து?

 

காலையில் காபியை  எந்த நேரத்திற்கு மேல் குடித்தால் ஆபத்து?

எந்தவொரு உணவாக இருந்தாலும், அதை அளவோடு எடுத்துக் கொண்டால் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். அந்த வகையில் அனைவரும் விரும்பி பருகும் ஒரு பானம் தான் காபி. இதை எந்த நேரத்தில் குடிப்பது சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

காபி குடிப்பதற்கு காலை 9 மணி மற்றும் மதியம் 1 மணி மற்றும் மாலை 5.30 மணி நேரங்களே மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் இந்த நேரத்தில் காப்பியில் காணப்படும் காபைன் (Caffeine) என்னும் பொருள் உடல் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தும் கோட்டிசோல் ஓமோனுடன் சிறந்த முறையில் செயல்படுகிறது என்று ஆய்வு கூறுகிறது.

காலையில் தூக்கத்தை விட்டு எழும் போது கார்டிசோலின் அளவு 50% அதிகரிக்கும். எனவே எழுந்த ஒரு மணிநேரம் கழித்து காபி குடிப்பது என்பது சிறந்தது. எனவே காபி குடிப்பதற்கான சிறந்த நேரத்தை பின்பற்றினால் உடலின் ஆரோக்கியம் பாதிப்படைவதை தடுக்கலாம்.

 
 
 
 

This post has been viewed 207 times