டி.எம்.சௌந்தரராஜன்

 

டி.எம்.சௌந்தரராஜன்

சாதனையின் சிகரம்

(கடந்த வாரம், பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர ராஜன் பற்றிய விவரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியை படியுங்கள்)

11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2500 பக்திப் பாடல்களையும் பாடி, பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து, பல பாடல்களுக்கு இசையமைத்து, ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’, ‘கல்லும் கனியாகும்’ & ‘கவிராஜ காலமேகம்’ போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்த டி.எம். சௌந்தரராஜன் பெற்ற விருதுகளும், அங்கீகாரங்களும் எண்ணிலடங்காதவை.

 

அவருக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களை பார்ப்போம்:-

§ 2012 – ‘கைராலி ஸ்வராலயா யேசுதாஸ் விருது’

§ 2003 -இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.

§ தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி விருது’ பெற்றார்.

§ “பாரத் கலாச்சார் ” விருது

§ “சவுராஷ்டிரா சமூக அங்கீகாரம்” விருது

§ வாழ்நாள் சாதனையாளர் எம்.ஜி. ஆர் நினைவு விருது

§ வாழ்நாள் சாதனையாளர் சிவாஜி நினைவு விருது

‘பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, ‘டாக்டர்’ பட்டம் போன்ற பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார்.

§ 1964 – “அறிஞர் அண்ணாத்வாரியா அங்கீகாரம்” பெற்றார்.

§ மலேசிய, சிங்கப்பூர், பிரஞ்சு, ஐக்கிய ராஜ்யம், கனடா, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், மற்றும் பெர்த்தில் வாழும் தமிழ் ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பல முறைப் பெற்றுள்ளார்.

§மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தி மற்றும் மொரார்ஜி தேசாய் அவர்களிடமிருந்து தனிப்பட்ட பாராட்டுப் பெற்றார்.
§இந்திய ஜனாதிபதிகளான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, ஆர் வெங்கட்ராமன், மற்றும் ஜெயில் சிங் போன்றோரிடமிருந்தும் தனிப்பட்ட பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தனது 24–வது வயதிலேயே, அதாவது மார்ச் 28-ம் தேதி, 1946–ம் ஆண்டில், சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். அவர் தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள மந்தவெளிப்பாக்கத்தில் வாழ்ந்தார்.

அவர் பாடியவற்றில் பிரசித்த பெற்ற பாடல்கள்:

‘வசந்த முல்லை’ -சாரங்கதாரா, ‘யாரடி நீ மோகினி’ உத்தம புத்திரன், ‘முத்தைத்தரு’ – அருணகிரிநாதர், ‘பாட்டும் நானே’ – திருவிளையாடல், ‘வாழ நினைத்தால்’ -பலே பாண்டியா, ‘கொடி அசைந்ததும்’ – பார்த்தால் பசி தீரும், ‘ஒளிமயமான எதிர்காலம்’ - பச்சை விளக்கு, ‘மலர்களைப் போல் தங்கை’ - பாசமலர், ‘எத்தனை காலம்தான்’ -மலைக்கள்ளன், ‘திருடாதே பாப்பா’ -திருடாதே, ‘காசேதான் கடவுளப்பா’- சக்கரம், ‘தூங்கதே தம்பி’ -நாடோடிமன்னன், ‘பூ மாலையில்’ – ஊட்டி வரை உறவு, ‘பொன்மகள் வந்தாள்’ -சொர்கம், ‘நிலவைப்பார்த்து வானம்’ -சவாளே சமாளி, ‘எங்கே நிம்மதி’ -புதிய பறவை, ‘அங்கே சிரிப்பவர்கள்’ - ரிக்சாகாரன், ‘ஏன் பிறந்தாய் மகனே’ -பாகப்பிரிவினை, ‘உலகம் பிறந்தது எனக்காக’ -பாசம், ‘அதோ அந்த பறவை போல’ -ஆயிரத்தில் ஒருவன், ‘அன்று வந்ததும் அதே நிலா’ - பெரிய இடத்துப் பெண், ‘ஒரு ராஜா ராணியிடம்’ சிவந்த மண், ‘மலர் கொடுத்தேன்’ -திரிசூலம், ‘தெய்வமே’ தெய்வ மகன், ‘யாருக்காக’ – வசந்த மாளிகை, ‘நான் ஆணையிட்டால்’ எங்க வீட்டுப் பிள்ளை

இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25—ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர் காலமானார்.

காலவரிசை

§ 1922: மதுரையில், மார்ச் 24-ம் தேதி ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.

§ 1946: தனது 24-வது வயதிலேயே, அதாவது மார்ச் 28-ம் தேதி, சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

§ 1946: ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தமானார்.

§ 1952: ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார்.

§ 1955: 1955-ல், வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து இரண்டு டூயட் பாடல்களைப் பாடினார்.

§ 1977: 1977-ம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடினார்.

§ 1995: 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடி வந்தார்.

§ 2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.!!.

 
 
 
 

This post has been viewed 313 times