நிலை மேல் கால் வைக்காதே… !!!

 

நிலை மேல் கால் வைக்காதே… !!!

வீட்டில், பெரியவர்கள் எதுக்கெடுத்தாலும், அதை செய்யாதே., இதை பண்ணாதே., என்று சொல்வாங்க…. ஆனால், அதில் உண்மையிலேயே அறிவியல் ரீதியாக ஏதாவது காரணம் இருக்கும். நம்ம மக்கள் அதை கேட்க மாட்டார்கள். அதுக்கு ஒரு கதை கட்டி விட்டிருப்பாங்க…. அதைப்பற்றித்தான் இப்போது பேசப் போகிறோம்….

நான் பொதுவாக வீட்டுக்குள் போகும்போது, வீட்டு வாசலில் இருக்கும் நிலை மீது கால் வைத்துதான் செல்வேன். ஆனால், எனது அம்மா, அடிக்கடி சொல்வாங்க….”நிலை மேலே கால் வைக்காதே”என்று.

அந்த காலத்து வீடுகளை பார்த்தீர்களென்றால், நுழைவு வாசல் சிறியதாக இருக்கும். அப்படி, சிறிய வாசலுக்குள் சென்றால்,” நிலை மீது நம் தலை டமால் என்று இடிக்கும். “ இதனைத்தான் மறைமுகமாக அவர்கள் சொல்வார்கள்….”நிலை மீது கால் வைத்து உள்ளே செல்லாதே” என்று.

அந்த காலத்தில் நிலையை நிறுத்தும் போது, நிலையின் கீழ் கொஞ்சம் காசு போட்டு கட்டி, அதனை “லட்சுமி” ஆக்கி விடுகிறார்கள். இதனால், அந்த நிலை சாமியாகி விடுகிறது. இதனை ச்சொல்லித்தான், “நிலை மீது கால் வைத்துச்செல்லாதே., அது சாமி…” என்று பிள்ளைகளிடம் பெற்றோர் கூறும் பழக்கம் தோன்றி விட்டது.

இதனால், இப்போது நானெல்லாம் நிலை மீது கால் வைத்து வீட்டுக்குள் செல்வதில்லை., என் தலையும் நிலையில் இடி படுவதும் இல்லை.அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம் அந்த பழைய காலத்து தாய்மார் சொன்ன படியே, நிலை மீது கால் வைக்காமல், அதனை தாண்டித்தான் செல்கிறோம் என்பதை சிந்தியுங்கள் !!!!

இனி நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லலாமே …..!!!!

 
 
 
 

This post has been viewed 203 times