ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று சொல்றாங்க, தெரியுமா?

 

ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று சொல்றாங்க, தெரியுமா?

செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள். இந்நாளில் முடி வெட்டுவது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆனால் பலரும் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல், முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ வருவோம்.
இருப்பினும், பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்திற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஓர் காரணம் இருக்கும். நம் முன்னோர்கள் எந்த ஒரு காரணம் இல்லாமலும், எதையும் பின்பற்றமாட்டார்கள். எனவே நம் முன்னோர்கள் சொல்வதை தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு அதைப் பின்பற்றுங்கள்.
எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.

 
 
 
 

This post has been viewed 126 times