விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன்?

 

விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன்?

நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் ,விஞ்ஞானரீதியான காரணங்கள் இருக்கின்றன. அக்காலத்தில் மின்சாரம் இல்லை. சிறு அகல்விளக்கு, வெளிச்சம்தான் பயன் படுத்தப்பட்டது. அச்சமயம் நாம் பயன்படுத்தும் சிறுபொருட்கள், விலையுயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள் ஏதேனும் தவறுதலாக கீழே விழுந்து கிடந்து, கூட்டிப் பெருக்கி குப்பையாக எடுக்கும்பொழுது, அவற்றுடன் சேர்த்து வெளியே கொட்டப் படலாம்.

இதனையே பகல் நேரத்தில் செய்தால் ஒருவேளை நம் கண்களுக்குப் புலப்படலாம். எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என சொல்லி சென்றனர்.
இதனை விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டினால் “மகாலட்சுமி” வீட்டை விட்டு போய்விடும் என்று கூறி வைத்துள்ளனர். இப்போ புரிஞ்சுதா மகாலட்சுமியை எப்படி நம் முன்னோர்கள் பயன் படுத்தி இருக்கிறார்கள் என்பது. என்னே நம் முன்னோர்களின் அறிவு…!!!

 
 
 
 

This post has been viewed 259 times