10 ஆண்டுகளில் 10 கருச்சிதைவுகள்

 

10 ஆண்டுகளில் 10 கருச்சிதைவுகள்

பத்து ஆண்டுகளில் பத்து கருச்சிதைவுகளை பெண் சந்தித்துள்ள நிலையில், கணவருடன் மனம் தளராமல் வாழ்ந்து வருவது தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

இங்கிலாந்தின் வேல்ஸில் உள்ள கார்டிஃபை சேர்ந்தவர் ஆண்ட்ரு. இவர் மனைவி ஜென் பிக்கெல் (39). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் ஜென் பிக்கெலுக்கு இதுவரை பத்து முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதில், செயற்கை முறை கருத்தரிதல், அறுவை சிகிச்சையில் இடம் மாறிய கர்ப்பம், கருவிலேயே இறந்து போன குழந்தை என்பவை அடக்கமாகும்.

இவ்வளவு சோதனைக்கு பின்னரும் கணவன் மற்றும் மனைவி நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். ஜென் பிக்கெல் கூறுகையில், எனக்கு “ஸ்கேன்” செய்யும் போது ஆண்ட்ரு என் கையை பிடித்து கொண்டு அருகில் இருப்பார். எதாவது அறிகுறி இருக்குமா? என ஆவலாக மருத்துவர்களின் முகத்தை பார்ப்பேன். அது பலமுறை தோல்வியடைந்த போதும் எங்களுக்கு பழகிவிட்டது” என கூறியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

அறுவை சிகிச்சையில் கருமுளையை அகற்றுதல், மருத்துவமனையில் சிகிச்சை, மருந்துகள் என எல்லாம் பார்த்து விட்டதாக கூறும் ஜென், தற்போது இயற்கையாக கர்ப்பம் ஆகும் என காத்திருப்பதாக கூறுகிறார்.

இத்தனையும் நடந்த பின்னரும் ஆண்ட்ரு மற்றும் ஜென் நம்பிக்கையுடன் தங்களது குழந்தையை பார்க்க வேண்டும் என காத்திருக்கின்றனர்.

தற்போது, மூன்று கரு முட்டைகளை சேமித்து பதப்படுத்தி வைத்திருப்பது இவர்களின் கடைசி நம்பிக்கையாக உள்ளது.
குழந்தையை தத்தெடுப்பது குறித்து இன்னும் எண்ணவில்லை எனவும் தம்பதிகள் கூறுகிறார்கள்.

 
 
 
 

This post has been viewed 151 times