“எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க தேவை இல்லை”

 

“எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் பற்றி
சி.பி.ஐ. விசாரிக்க தேவை இல்லை”

“கூவாத்தூரில் தங்க வைக்கப்பட்டு இருந்தபோது, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் “குதிரை பேரம்” பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தேவை இல்லை” எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

20-Palanisamy-2

மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணின் “குதிரை பேரம்” தொடர்பான வீடியோ வெளியானது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ்வை சந்தித்து மனு அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகர் மற்றும் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் முதலமைச்சர் பழனிசாமி பதில் அளிக்க ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதன்படி, முதல்வர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”இது, சட்டமன்றம் சார்ந்த விஷயம் என்பதால் சி.பி.ஐ. அல்லது புலனாய்வு துறை விசாரிக்க முடியாது. இந்த மனு விசாரிக்க தகுந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்யவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்…!!!.

 
 
 
 

This post has been viewed 167 times