12 சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்த குழந்தை

 

12 சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்த குழந்தை

இந்தியாவில் நடுக்காட்டில் 12 சிங்கங்களுக்கு மத்தியில் குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம், லுன்சாபூர், இங்கு வசிக்கும் மங்குபென் மக்வானா என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி நள்ளிரவு அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவளை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்…

நடுக்காட்டில் சென்று கொண்டிருந்த போது, ரோட்டில் சிங்கக் கூட்டம் வந்துள்ளது, 12 சிங்கங்கள் புடைசூழ்ந்து நிற்க, ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை அப்படியே நிறுத்தியுள்ளார்.

மங்குபென்னுக்கும் பிரசவ வலி அதிகமாகவே, என்னசெய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க பிரசவம் நடந்துள்ளது. அழகாக ஆண் குழந்தையும் பிறந்துள்ளது, இருப்பினும் சிங்கங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தபாடில்லை.

உடனே டிரைவர் ஆம்புலன்ஸ் லைட்டை ஆன் செய்து, வண்டியை ஸ்டார்ட் செய்ய சிங்கங்கள் ஒவ்வொன்றாக நகர்ந்துள்ளன. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.!!!

 
 
 
 

This post has been viewed 165 times