பாதாம் திராட்சை உருண்டை

 

பாதாம் திராட்சை உருண்டை

தேவையான பொருட்கள்:

வறுத்த பாதாம் 100 கிராம்,

பாகு வெல்லம் – 75 கிராம்,

நெய் – அரை டீஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை,

உலர் திராட்சை 10 முதல் 15.

செய்முறை:

அடி கனமான வாணலி (அ) நான்ஸ்டிக் கடாயில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். அதனு டன் நெய், ஏலக்காய்த்தூள், திராட்சை, வறுத்த பாதாம் சேர்த்து… கை பொறுக்கும் சூட்டில் உருண்டை கள் பிடிக்கவும்.

19987211_768121846703126_798519367_n

குறிப்பு: சிறிதளவு வெல்லப் பாகை எடுத்து தண்ணீரில் போட்டு… கட்டைவிரல் மற் றும் ஆட்காட்டி விரலை பயன்படுத்தி எடுக்கும்போது, கையில் ஒட்டாமல் நன்கு உருட்ட வந்தால்… அதுதான் சரியான உருண்டை பாகு பதம்.

 
 
 
 

This post has been viewed 173 times