இங்கிலாந்தில் முதல் முறை: ஆணாக மாறியவர் குழந்தை பெற்றெடுத்தார்

 

இங்கிலாந்தில் முதல் முறை:
ஆணாக மாறியவர் குழந்தை பெற்றெடுத்தார்

இங்கிலாந்தில் பெண்ணாக பிறந்து, ஆணாக மாறியவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.இங்கிலாந்து நாட்டின் குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே.

625.0.560.350.160.300.053.800.668.160.90

இவர் இயற்கையில் பெண்ணாக பிறந்தவர். தன்னுடைய உடலில் ஏற்பட்ட குரோமோசோம்களின் மாற்றத்தை உணர்ந்ததால், இளம் வயதிலே ஆணாக மாறுவதற்கு முடிவெடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்காக சுமார் 30 ஆயிரம் பவுண்டுகளை இங்கிலாந்து அரசு சுகாதார காப்புறுதி திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொண்டது.

haydencrossgavebirth-00-09-1499610298

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், அவர் ஆணாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அது தொடர்பான சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இப்படி சிகிச்சை மேற்கொண்டு வந்தவர், தன் கருப்பையை மட்டும் அகற்றிக் கொள்ளவில்லை.

ஏனெனில் கருப்பையில் வளரும் கருமுட்டைகளை வங்கிகளில் சேமித்து வைத்து விட்டு, தேவைப்படும் போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் இங்கிலாந்து அரசோ, கருமுட்டைகளை சேமித்து வைப்பதற்கான நிதியை வழங்க முடியாது என அறிவித்தது.

இதனால் அவர் இனி தாம் முழு ஆணாக மாறி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அது சிக்கலாக மாறிவிடும் என்பதால், தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்ணாகவே இருந்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் விந்து தானம் செய்பவர் ஒருவரை தேடிப்பிடித்து, அவரின் விந்தணுவை தனது கருப்பையில் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் இவர் 16.6.2017 அன்று அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன்பின் அவர் கூறுகையில், “தொடர்ந்து ஆணாகவே இருக்கப் போகிறேன். குழந்தைக்கு ஒரு வயது எட்டியவுடன் வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்”என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
 

This post has been viewed 236 times