சினிமா செய்திகள்

 

சத்தமில்லாமல் தனுஷ் இப்படி செய்துவிட்டாரே!

தனுஷ் இன்று சினிமாவில் மிகவும் பிசியான ஒரு நடிகர். பாலிவுட், ஹாலிவுட் வரை சென்றவர் தற்போது மீண்டும் தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

Danush

பாலாஜி மோகன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான மாரி படத்தின் 2 ம் பாகம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர் “மாரி 2 “படம் குறித்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதில் படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்ததாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். முதல் பாகத்தில் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் இந்த படத்திலும் நடிக்கவுள்ளாராம்.

மற்ற நடிகர்கள், நடிகைகளுக்கான செலக்‌ஷன் நடைபெற்று வருகிறது. விரைவில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைலன்ட்டாக இந்த வேலைகள் நடந்து வந்தாலும் ரசிகர்களில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

10 வயதில் விஜய் பட்ட கஷ்டம் – நடிகர் விவேக் கூறிய அரிய தகவல்

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே நெருங்கிய நண்பர் தான். ஒரு சில வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது.

IMG_9669

இதில் பேசிய விவேக், “இன்று நீங்கள் இளைய தளபதி என்று கொண்டாடுகிறீர்கள். நான் சந்திரசேகர் சார் இயக்கத்தில் நண்பர்கள் என்ற படத்தில் நடித்தேன். அந்த படத்தில் காமெடி ட்ராக் நான் எழுதினேன், அதை தொடர்ந்து மற்றொரு படம் ஒன்றில் அவர் இயக்கத்தில் நடித்தேன். அந்த படப்பிடிப்பில் 10 வயதில் ஒரு சிறுவன் எல்லோரிடமும் “சார் டீ சாப்டீங்களா, ரொம்ப குளிராக இருக்கும், இந்தாங்க கம்பளி” என ஓடி ஆடி வேலைப்பார்த்துக்கொண்டே இருப்பார். அவர் வேறு யாருமில்லை உங்கள் இளைய தளபதி தான்” என்று விவேக் பேசினார்.

“என் வாழ்க்கையில் நடந்த சில நிஜங்கள் தான், இந்த மீசையை முறுக்கு ” — ஹிப்ஹாப் ஆதி

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள படம் “மீசையை முறுக்கு”. இந்த படத்தை பற்றி ஆதி கூறுகையில் ” இப்படம் ஒரு இளைஞர்களுக்கான படமாக இருக்கும், நம்முடைய காலேஜ் காலங்களை நினைவுபடுத்தும், ஒவ்வொரு இளைஞர்கள் தங்களுடைய கல்லூரி முடிந்தவுடன் அவர்களின் கனவுக்கான தேடுதல் எப்படி இருக்கும் என்பதை காட்டும், என் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளேன். இப்படத்தில் நடிகர் விவேக் எனக்கு அப்பாவாக நடித்துள்ளார்.

hiphop-tamizhalarge

அதுமட்டுமில்லாமல் யூடியூப் ஸ்டார்களாக இருக்கும் ஷா ரா , விக்னேஷ் காந்த் , மெட்ராஸ் சென்ட்ரல் கோபி பேஷ்£ன்றவர்களின் பங்களிப்பு ,ரசிகர்களை ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் கண்டிப்பாக இந்த மீசையை முறுக்கு இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்க கூடிய படமாக இருக்கும் என்கிறார் ஹிப் ஹாப் ஆதி.

“எனக்கு வாழ்வதே பிடிக்கவில்லை” – ரகுமான் உருக்கம்

ரகுமான், உலகமே அறிந்த ஒரு இசையமைப்பாளர். சமீபத்தில் இவர் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது, ஆனால், அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்வதே இல்லை.

r-rahman-with-oscars

அடுத்து என்ன என்று சென்றுவிட்டார், இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரகுமான் ‘என் தந்தை 43 வயதில் இறந்தார், அதனால் என்னமோ எனக்கு 40 வயதிற்கு மேல் வாழ்வதே பிடிக்கவில்லை. ஆனால், தற்போது நிறைய செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை உள்ளது, இசைக்கல்லூரி, படங்கள் தயாரிப்பு போன்ற வேலைகளில் ஈடுபடவுள்ளேன், என்னுள் 40 வயதிற்கு பிறகு நிறைய மாற்றங்கள் வந்துள்ளதை உணர்ந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

அது இல்லாம என்னால இருக்க முடியாது! அந்தரங்கத்தை ஓப்பனாக பேசிய சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி சினிமா நடிகையான சமந்தா தற்போது படங்களில் பிசியாக இருக்கிறார். விரைவில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

Samantha-Ruth-Prabhu-Age-Weight-Height-Boyfreinds-Body-Measurements

ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிக்கைக்கு பதிலளித்துள்ளார். இதில் அவரிடம் அன்யோன்ய வாழ்க்கை பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சமந்தா,” சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருப்பேன். ஆனால் செக்ஸ் இல்லாமல் இருக்கமுடியாது” என ஓப்பனாக பேசியுள்ளார். அவர் திருமணதிற்கு முன் இப்படி பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
 

This post has been viewed 163 times