சினிமா செய்திகள்

 

சினிமா செய்திகள்

இந்தியாவில் நம்பர் 1 தற்போது சூர்யா தான்

நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களாகவே கொஞ்சம் சறுக்கலில் உள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்க, சமீபத்தில் வந்த” தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Screen-Shot-2017-04-11-at-3.38.58-PM
இதில் சூர்யா வெளியிட்ட போஸ்டர் டுவிட்டரில் 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் RT செய்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகம் பேர் RT  செய்த போஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மேலும், இதற்கு முன் விஜய்யின் மெர்சல் பர்ஸ்ட் லுக் அந்த பெருமையை பெற்றது, இதை இரண்டே நாட்களில் “தானா சேர்ந்த கூட்டம்”தகர்த்துள்ளது.

புதிய விளம்பரத்தில் நடிக்க  நயன்தாராவுக்கு
இத்தனை கோடி சம்பளமா?

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதல் இடத்தில் இருப்பவர், நயன்தாரா. இவர் படங்களை தாண்டி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

actress-nayanthara-facebook-profile-pictures-3
இதுநாள் வரை நகை கடை விளம்பரங்களில் நடித்த நயன்தாரா தற்போது புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாரா நடிப்பில் அறம், இமைக்கா நொடிகள், வேலைக்காரன் என்று அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.

அப்துல்கலாமுக்காக வைரமுத்து எழுதிய பாடல்!

இளைஞர்கள், மாணவ மாணவிகள் என இளம் சமுதாயத்தின் மீது அதிக நம்பிக்கையும், பாசமும் கொண்டவர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். இவர் மண்ணுலகை விட்டு சென்று 2 ஆண்டுகள் ஆகப்போகிறது. மத்திய அரசு சார்பில் அவருடைய சமாதியில் மணி மண்டபம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

3333065281_c6f32a5801_o
இதன் திறப்பு விழா வரும் 27ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமரும் கலந்து கொள்கிறார். அப்துல்கலாமின் சிறப்பை போற்றி கவிஞர் வைரமுத்து ஒரு பாடல் எழுதியுள்ளார். இதை இயக்குனர் வசந்த் ஆல்பமாக தயாரிக்க அதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடல் திறப்பு விழா அன்று வெளியிடப்படுகிறது.
இதன் சில வரிகள்…..

கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும்

நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால்

தூங்க விடாததே கனவு என்றாயே…..

கமலுக்கு ஆதரவு தெரிவித்த கௌதமி…!

நடிகை கௌதமி ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு சமூக பார்வையாளராக தன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

Gautam-Cover

கடந்த வருடம் கமலை விட்டு பிரிந்த இவர், தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசனின் அரசியல் கருத்துக்கள் பற்றி அவர் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அனைத்து துறைகளிலும் ஊழல் என்று கமல் கூறுவது, அவருடைய கருத்து. அவருடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு அவருக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டில் உள்ள எல்லோருக்கும், நாட்டின் குடிமகனாக இருக்கும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் நல்ல விஷயங்களையும், மக்கள் முன் எடுத்து வைக்க வேண்டும் என கொள்கையளவில் மீண்டும் கௌதமி கமலுடன் இணைந்துள்ளார்.

சாய் பல்லவியின் மார்க்கெட் வேற லெவல் – முதன் முதலாக தொட்ட மைல் கல்

“ப்ரேமம்” படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர், சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கு படமான Fidaa  ரிலிஸாகியது.

sai pallavi copy
இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது, இதில், வருன் தேஜ் ஹீரோவாக நடித்துள்ளார். சாய் பல்லவி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது. இதன் மூலம் சாய் பல்லவியின் மார்க்கெட் ஒரு படி மேலே சென்றுள்ளது என்றே கூறலாம்.

 
 
 
 

This post has been viewed 265 times