தினசரி அசைவம் ஆபத்தா?

 

தினசரி அசைவம் ஆபத்தா?

அதிகம் அசைவ உணவு உண்பதால் உடல் பருமன் அதிகமாகும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும், சர்க்கரை நோய், இதய நோய்களை உண்டாக்கும்.

dc-Cover-ro5laha4iudcuiqodd85rau0o1-20160611005126.Medi

அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இது இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பைக் கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து, ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதயத்துடிப்பு முடக்கம், பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளுக்குக் காரணமாகிறது.

அசைவமான மாமிசத்தை, மனித உடலுக்கு உகந்த உணவாக மாற்றுவதற்காகவே, சமையலில் அதீத மசாலா சேர்க்கைகளைச் சேர்த்து, நன்கு வதக்குகிறார்கள் அல்லது பொறிக்கிறார்கள் அல்லது வேகவைக்கிறார்கள். என்ற போதிலும் அசைவ உணவை ஜீரணிக்க நமது ஜீரண உறுப்புகள் அதிக உழைப்பை கொடுக்க வேண்டியுள்ளது.

சில மாமிசங்களிலுள்ள கொழுப்புகள், நம் ரத்தத்தில் கரைவதில்லை. அவை ஆங்காங்கே உடலில் தங்கிவிடுகின்றன. இதனால் ரத்த நாளங்கள் தடிமனாகும். ரத்த ஓட்டத்தின் இயல்பான வேகம் தடைபடும்.

தினசரி அசைவ உணவுகள் சாப்பிடும்போது, நம் உடலில் அளவுக்கு அதிகமாகப் புரதம் சேர்கிறது. இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் அதனுடைய முழுமையான செயல்பாட்டை இழக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
நாம் சாப்பிடும் கோழிகளின் வளர்ச்சி மற்றும் அதிக எடைக்காக “ஈஸ்ட்ரோஜென் “என்னும் ஊசி போடப்படுகிறது.

எனவே அதைச் சாப்பிடும் பெண்கள், இளம் வயதிலேயே பூப்பெய்துவது, சீரற்ற மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்சினைகள், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பல பாதிப்புகளைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.!!!.

 
 
 
 

This post has been viewed 207 times