அ.தி.மு.க. இணைப்பு பேச்சில் முட்டுக்கட்டை

 

அ.தி.மு.க. இணைப்பு பேச்சில் முட்டுக்கட்டை

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியும் இணையும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான சமரச பேச்சுக்கள், தலைவர்கள் மட்டத்தில் டெல்லியில் நடந்தன. என்றாலும் இரு அணிகளும் இணைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3B1351C300000578-4003394-image-a-1_1480977388263

ஓ.பி.எஸ். அணியினர் சில நிபந்தனைகளை விதித்ததால், இரு அணிகளும் இணையும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி இருப்பதாக தகவல் வெளிப்பட்டு இருக்கிறது. இதனால் விரைவில் இரு அணிகளும் இணைந்து விடுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் பட்டது. என்றாலும்,இந்த இணைப்பு பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

201706032309259545_Once-the-license-is-issued-Amal-Edappadi-Palanisamy-talks_SECVPF

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பார் என்பதும், கட்சி தலைமையை பன்னீர்ஏற்பார் என்றும், பன்னீர்அணியைசேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில், தினகரன் அணியில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், இவர்களைக்கொண்டு அவரும் தமிழக அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

I1fTwtaa

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 22-ம் தேதி சென்னை வருகிறார். பாஜக வளர்ச்சி குறித்து ஆலோசிக்க அவர் வருகிறார் என்று கூறப்பட்டாலும், அவரது வருகையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது என்பது மறைமுக நோக்கமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை நடத்தி, மிகப்பெரியகூட்டத்தை கூட்டிய தினகரன் தனதுபலத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிமுக-வை கைப்பற்றப் போவது தினகரனா? எடப்பாடியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது…!!!

“சசிகலா, தினகரன்
நியமனங்கள் செல்லாது”

“அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக தினகரனும் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது” என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sasikala-addresses-media_940d241c-ee97-11e6-90af-e8d3e91f500c

 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி, தினகரன் அணி என அ.தி.மு.க. கட்சி மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின் படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவரது ஆலோசனைப்படி, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், கட்சியை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தினகரன் தனது ஆதரவாளர்கள் 61 பேருக்கு கட்சி பதவிகளை அளித்தார். இதில் சிலர், தினகரன் அறிவித்த பதவிகளை ஏற்க மாட்டோம் என்று கூறிய நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தினகரன் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆக. 10–ம் தேதி காலை சென்றார். அங்கு அவர் அமைச்சகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ”தினகரன், அதிமுக-வின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட நியமனம் செல்லாது. தினகரன், கட்சியின் உறுப்பினராக 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்க வில்லை. தினகரனை கட்சியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா, மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க வில்லை. தினகரனின் அறிவிப்புகள், கட்சியை கட்டுப்படுத்தாது. தினகரன் அறிவித்துள்ள கட்சி பதவிகள் எதுவும் செல்லாது. அவரது அறிவிப்புகளை, கட்சியினர் பொருட்படுத்த தேவை இல்லை.

பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட விவகாரமும், தேர்தல் கமிஷனின் ஆலோசனையில் உள்ளது. தற்போதைய சூழலில் அவரால் செயல்பட முடிய வில்லை. அவர் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் பதவி ஏற்றார். ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளே, தற்போது கட்சியை நிர்வகித்து வருகின்றனர்.ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியில், வேறு யாரையும் அமர்த்தி அழகு பார்க்க தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். கட்சியையும், ஆட்சியையும், பொதுக்குழு உறுப்பினர்கள் வழி நடத்திச் செல்வார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தில், முதல்வர் பழனிச்சாமி, அமைப்பு செயலாளர் வைத்தி லிங்கம் உள்ளிட்ட 27 நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர். திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகிய மூவரும் கையெழுத்து போட வில்லை. இவர்கள் சசிகலாவால் நிர்வாக பொறுப்புகளை ஏற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களை சமாளிக்க, புதிய வியூகங்களை எடப்பாடி பழனிச்சாமி வகுத்துள்ளதாகவும், இது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் யார் என்று, புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஆஸ்பயர் சுவாமிநாதன் என்பவர், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, அந்தக் கேள்விக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று மீண்டும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையில், “ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பது புரியாத புதிராக உள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி அரசு மீது சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சையில், சசிகலாவின் அண்ணன் மனைவி படத்திறப்பு நிகழ்ச்சியில்பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சக்கர வியூகத்தில் சிக்கி உள்ள அதிமுக என்ற அபிமன்யூ இன்னும் மீளவில்லை என்றும், விரைவில் மீட்டெடுக்க ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். “நான் என்றைக்கும் கட்சி பதவிக்கு வரமாட்டேன்.

தொண்டர்களுடன் தான் இருப்பேன். ஆட்சி நடவடிக்கை நன்றாக சென்றாலும், ஜெயலலிதா மறுத்த திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது தான் புரியாத புதிராக உள்ளது.ஜெயலலிதா அரசியலில் நிலைநிறுத்தப்பட்ட போது நானும் துணையாக இருந்துள்ளதால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் எனக்கு இடம் உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பத்திற்கு 3 மாதத்திற்கு பிறகுதான் முடிவு தெரியம்” என்று திவாகரன் கூறினார்.

இந்த நிலையில், தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பேட்டி அளிக்கையில், ”எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியதில், சசிகலாவுக்கு பெரும் பங்கு உண்டு. சசிகலா, தினகரன் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை. துரோகிகள் பட்டியலில் முதல் இடத்தை எடப்பாடி பழனிச்சாமி பெற்று விட்டார்” என பாய்ந்தார்…!!!

சசிகலா, தினகரனை   கட்சியை விட்டு  நீக்கினால் தான், இணைப்பு
ஒ.பி.எஸ். அணியினர் திட்டவட்டம்

“சசிகலா, தினகரனை கட்சியை விட்டு நீக்கினால்தான், இணைப்பு பற்றிய பேச்சு நடக்கும். பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவையும், தினகரனையும் நீக்க வேண்டும்” என்று, ஒ.பி.எஸ். அணியினர் கூறியுள்ளனர்.

ஓ.பி.எஸ் அணியினர் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இந்தகூட்டத்தில் மாபா பாண்டியன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டம் பற்றியும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றியும் ஆலோசித்தோம். சசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை, இரு அணிகளும் இணைவது சாத்தியம் இல்லை. ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்தான், தினகரன். அவரையும், சசிகலாவையும் நாங்கள் ஏற்க முடியாது. இ.பி.எஸ். அணியினர் இப்போதுதான் விழித்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

“சசிகலா, மற்றும் எனக்கும்
எதிராக எடப்பாடி நிறைவேற்றிய
தீர்மானம் செல்லாது”

“சசிகலாவால், முதல்வராக அறிவிக்கப்பட்டவர், எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவுக்கும், எனக்கும் எதிராகவும் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றிய தீர்மானம் செல்லாது” என்று டி.டி.வி. தினகரன் ஆவேசமாக கூறினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதன் பின், தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,. “சசிகலாவால் முதல்வராக அறிவிக்கப்பட்டவர், எடப்பாடி பழனிச்சாமி.

தங்களுக்கு பதவி கொடுத்தவரை மறந்து விட்டு, பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்து விட வேண்டும் என்று நினைப்பவர்களின் திட்டம் நிறைவேறாது. அதிமுக என்ற பெயரை யாரும் பயன் படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறி இருப்பதை நினைவு படுத்துகிறேன்.தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தால், எடப்பாடி பதவி இழக்க நேரிடும். கட்சி வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுப்பேன். அறுவை சிகிச்சை தேவை என்றாலும் அதனையும் செய்வேன்.” என்றார்.

“கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முளைத்த காளான்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. மடியில் கனம் இருப்பதால், சில அமைச்சர்கள் எனக்கு எதிராக பேசி வருகின்றனர்” என்றும் தினகரன் கூறினார்.

“சசிகலாவின் பெயரில்பிரமாண பத்திரம் தாக்கல் செய்து விட்டு, இப்போது 420 (ஏமாற்றுக்காரன்)போல் பேசிவருவோருக்கு நான் பதில் சொல்ல தயாராக இல்லை” என்றும் தினகரன் குறிப்பிட்டார்.

இதனையெடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், துணை பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்பதால் டி.டிவி தினகரரை தொண்டர்கள் நிராகரிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி அணியினர் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது., அவ்வாறு அவர் பேச அவருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்…!!!.

 
 
 
 

This post has been viewed 199 times