வாழ்வின் அந்தரங்கம்

 

வாழ்வின் அந்தரங்கம்

* நான் அதிகமாக சாப்பிடுவதும் இல்லை. ஆனால், உடல் எடை கூடிக்கொண்டே செல்கிறது. குண்டாக இருக்கிறேன். இதனால் எனது நண்பர்கள் கேலி -கிண்டல் செய்கிறார்கள். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இதற்கு தீர்வு என்ன?

* ENDOCRINOLOGIST- யை அணுகவும்.!!!.

* எனக்கு வயது 27. நான் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறேன். எனக்கு ஒரு தோழி இருந்தாள். நான் அவளை மிகவும் நேசித்தேன். குறிப்பிட்ட சிலர் “ அவள் உன்னிடம் உண்மையாக நட்பு கொள்ள வில்லை” என்றார்கள். அதையெல்லாம் நான் நம்ப வில்லை .ஆனால், திடீரென்று ஒரு நாள் அவளது சுயரூபம் எனக்கு தெரிய வந்தது. அவள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாள். இதனால் நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். அதில் இருந்து என்னால் வெளியே வரவும் முடிய வில்லை. இதனால் தூக்கமும் கெடுகிறது. மன அமைதியும் இல்லை. இதற்கு உங்கள் ஆலோசனை என்ன?

* “காலம்”, எத்தனயோ பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் நாட்கள் கடந்து செல்லச் செல்ல இந்த வேதனை உங்களை விட்டு அகன்று விடும்.!!!.

* டாக்டரம்மா ! சர்க்கரை நோய்க்கும், பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்கும் தொடர்பு உண்டா? இது போல சர்க்கரை நோய்க்கும் கண் பார்வைக்கும் தொடர்பு உண்டா?

* சர்க்கரை நோய்க்கும், பெண்கள் கருத்தரிப்பதற்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. ஆனால், சர்க்கரை நோய்க்கும் கண் பார்வைக்கும் நேரடியாக தொடர்பு உண்டு.!!!.

* இப்போதுள்ள பெண்கள், திருமணம் முடிந்ததும், பிள்ளை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை. ஜாலியாக சில ஆண்டுகள் கருத்தரித்தலை தள்ளிப்போடுகிறார்கள். சில ஆண்டுகள் கழித்து கருத்தரிக்காத நிலை ஏற்படும் போது வேதனைப்படுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

* தற்போதைய காலத்தில் இதுபோன்ற மன நிலையில்தான் புதுமணத் தம்பதிகள் இருக்கிறார்கள். குழந்தை பேற்றை பல ஆண்டுகள் தள்ளிப்போடுவது, குடும்பத்தில் வயதானவர்களிடம் குழப்பத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தி விடும். எனவே காலாகாலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதே நல்லது. அதுவே வரவேற்க தக்கது. ஏனென்றால், கணவன்–மனைவிக்கு அடுத்து வரும் குழந்தை என்பது பாசத்தின் பிணைப்பை அதிகரிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.!!!.

 
 
 
 

This post has been viewed 204 times