மாடலிங்கில் சாதிக்கும் கறுப்பு ராணி

 

மாடலிங்கில் சாதிக்கும் கறுப்பு ராணி

தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்தவர் நியாகிம் கேட்விச். 24 வயது பெண்ணான இவர் முதலில் எத்தியோப்பியாவிலும், பின்னர் கென்யாவிலும் அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தவர். அதன் பின் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த இவர், அமெரிக்கா வருவதற்குள்ளான இடைப்பட்ட காலங்களில், தனது இரண்டு தங்கைகளை இழந்துள்ளார்.

03-1496487284-1

இவர் எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் இருந்த போது எந்த ஒரு பாகுபாடும் உணரவில்லை. ஆனால் கல்வி பயில அமெரிக்கா சென்ற போது தான் நிறப் பாகுபாடு பார்ப்பது தெரிய வந்திருக்கிறது. அங்கு பயின்ற பலர் இவரை கேலி, கிண்டல் செய்து வித்தியாசமாகப் பார்த்துள்ளனர்.

hqdefault

தற்போதோ, அந்த கறுப்பு நிறத்தைக் கொண்டு அனைத்து மாடல்களுக்கும் சவாலான போட்டியாளராக இருக்கிறார், நியாகிம் கேட்விச். அவரை, மளிகைக் கடையில் பார்த்த ஒருவர், “ நீங்கள் ஏன் மாடலிங் துறையைத் தேர்வு செய்யக் கூடாது?” என்று கேட்டுள்ளார். அதன் பின்னரே அவர் இது தொடர்பாக சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.

இது குறித்து நியாகிம் கேட்விச். கூறுகையில், “என்னுடைய புகைப்படங்களைப் பார்த்து யார் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை, நான் என்னை விரும்புகிறேன், என் கறுப்பு நிறத் தோலை விரும்புகிறேன், பெரும்பான்மையான மக்களிடமிருந்து விலகி நான் வித்தியாசமாக காட்சியளிக்கிறேன்” என்று தன் கருத்தைப் பதிவு செய்து பலரின் புருவங்களை வியப்பில் உயர்த்தச் செய்துள்ளார், அவர்.
இவரின் புகைப்படங்களுக்கும் நேர்மையான பதிவிற்கும் இவரின் ரசிகர்கள் குயின் ஆப் தி டார்க் என்கிற பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள்.

இவர் தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு மொடலிங் துறையைத் தேர்வு செய்த போதிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை, தற்போது ழிஹ்ணீளீவீனீ நிணீtஷ்மீநீலீ-ஐ இன்ஸ்டிராகிராமில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை இரண்டுலட்சத்தையும் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது..!!!.

 
 
 
 

This post has been viewed 190 times