சத்தியம் பதில்கள்

 

சத்தியம் பதில்கள்

( தமிழ்ப் புலவன். மதுரை):
டெலிவிஷன் தொடர் பிக் பாஸை பிரபலப்படுத்தவே, கமல ஹாசன் அதிரடியாக பேசி வருகிறார் என்பது சரியா?
அப்படியெனில் புதிய படம் ரிலீஸின் போது, புதுப்புது அரசியல் அறிவிப்புகளை விடுக்கும் ரஜினியை என்ன சொல்லப்போகிறீர்கள் ?!!!.

( தாணு, சென்னை):
தினகரனுக்கு மிகப்பெரிய தகுதி இருப்பதாக கூறி வருகிறாரே, நாஞ்சில் சம்பத்?
உப்பிட்டவரை மறக்காமல் இருக்கிறார். , நன்றி மறவாமல் பேசி வருகிறார்.

( சுரேஷ், செங்கல்பட்டு):
மனிதர்களுக்கு ஆதார் அட்டை அவசியமானது என்பதை ஏற்கலாம். மாட்டுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்பதை ஏற்க முடியுமா?
இதற்கு மத்திய அரசு சில விளக்கங்களை கொடுத்துள்ளது. மாடுகளுக்கு மருத்துவம் அளிக்கவும், காணாமல் போனால் கண்டுபிடிக்கும் பணி போன்றவைகளுக்கு பயன்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால், மாடுகள் கசாப்பு கடைக்கு சென்றுவிட்டால்… இதனால் என்ன பயன் ஏற்படப் போகிறது?!!!.

( ரமணி, சென்னை):
எனது அரசை யாராலும் அசைக்க முடியாது என்று, முதல்வர் பழனிச்சாமி கூறி வருகிறாரே?
எல்லாமே ஒரு தைரியம்தான். பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்ற நிலை வந்தால், அதிமுக-வின் மற்ற இரு அணிகளும் தனக்கு நிச்சயமாக ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறார், எடப்பாடி.!!!.

( வேலுச்சாமி, சென்னை):
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அமல் படுத்தினால், விலை குறையும் என்று ஆட்சியாளர்கள் கூறினார்களே. இப்போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ 30 வரை ஜி.எஸ்.டி. வரியால் விலை உயர்ந்து இருக்கிறதே.?
இவற்றையெல்லாம், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் போன்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். உண்மையில், ஜி.எஸ்.டி.யால் மக்கள் மீது சுமை அதிகரித்துள்ளதே தவிர, குறைய வில்லை.!!!.

( ரமேஷ்குமார், சென்னை):
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் தகுதி, ரஜினிக்கா? கமலுக்கா?
இரு கை தட்டினால் ஓசை வரும். ஆனால் இரு கைகளும் ஒன்றாக இணைந்து, ஓரணியில் இருந்து கரங்களை தட்டும் வாய்ப்பு மிக குறைவு.!!!.

( டேவிட், சென்னை):
சீன எல்லையிலுள்ள டோக்லம் பகுதியில் சீன படைகளும், இந்திய படைகளும் நேருக்கு நேர் நிற்கும் நிலை ஆபத்தானதாக கருதப்படுகிறதே., இதற்கு தீர்வுதான் என்ன?
இப்போதுதான் இதற்கான நடவடிக்கைகளை தமிபேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. ஆனால், இது பேச்சுவார்த்தையால் தீர்வாகும் பிரச்சினை போல் தெரிய வில்லை. போர் என்று வந்தால், பிரச்சினைதான். ஏனென்றால், நம்மிடம் 10 நாட்கள் போரிட மட்டுமே ஆயுதங்கள் உள்ளன என்பது வேதனையான தகவல்.!!!.

( அருள், ராமேஸ்வரம்):
எங்கள் ஊர் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டதே. இதற்கு விடிவு காலமே கிடையாதா?
கச்சத்தீவை மீட்பதுதான் இதற்கு ஒரே வழி. ஆனால், அதற்குரிய வாய்ப்பே மிக குறைவு. நாமே கொடுத்து விட்டு, நாமே திருப்பி எடுப்பது என்பது மோசமான நடைமுறையாகி விடும் அல்லவா?!!!.

 
 
 
 

This post has been viewed 148 times