சினிமா செய்திகள்

 

 சினிமா செய்திகள்

ரூ150 கோடியில் எடுத்த படத்தின் வசூல் இத்தனை ஆயிரம் கோடியா?

உலக அளவில் எப்போதும் அதிகம் வசூல் செய்வது ஹாலிவுட் படங்கள் தான். ஆனால், சீனாவில் ஹாலிவுட்டையே மிஞ்சும் அளவிற்கு ஒரு மார்க்கெட் உருவாகி வருகின்றது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

இந்தி படமான “தங்கல்” கூட ரூ 1200 கோடி வரை சீனாவில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீனா–ஹாலிவுட் கூட்டு தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் Wolf Warriors  2 ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.

இப்படம் தற்போது வரை ரூ 4000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது, மேலும், இன்னும் சில தினங்களில் இப்படம் உலக அளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்டில் டாப்-50க்குள் வரும் என தெரிகிறது.

எதற்காக சின்மயி இப்படி கூறுகிறார்?

பிரபல பாடகி சின்மயி எப்போதும் சமூக அக்கறை கொண்டவர். அதோடு ஒரு விஷயம் தவறு என்றால் அதை தைரியமாக சொல்லக்கூடியவர், யாரை பற்றியும் பயப்பட மாட்டார்.

chin67-min

தற்போது இவர் இளைஞர்களிடம் வைரலாகி வரும் ஒரு புதிய App பற்றி பேசியுள்ளார். அந்த புதிய கிஜீஜீல் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நலம் விரும்பிகள் உங்களுக்கு கருத்து சொல்ல விரும்பினால் நேரடியாக கூறுவது தான் நல்லது.
இது போன்ற ஒரு விஷயத்தால் இதற்கு முன் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று கூறியுள்ளார்.

மணிரத்னத்துடன்
விஜய் சேதுபதி இணைகிறாரா ?

தமிழில் முன்னணி நடிகர் முதல் எல்லாருக்குமே பிடித்த இயக்குனர் என்றால் அது மணிரத்னம் தான். இந்நிலையில் இவரின் கடைசி படம் “காற்று” வெளியீடு, எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

79277_1500868991

இதனால் அடுத்த படத்துக்காக கதை பணியில் இருக்கிறாராம், மணி. தற்போது வந்த தகவல் படி விஜய் சேதுபதி நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இப்படமும் ஒரு லோக்கல் கேங்ஸ்டர் பற்றிய படம் என்கிறார்கள். அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

படுக்கையறை காட்சியில் நடித்த நடிகருக்கு
மனைவி கொடுத்த தண்டனை!

இப்போது வரும் படங்களில் சில இடங்களில் கவர்ச்சிகள் வந்தாலே போதும் ஆபாச படம் என்கிறார். ஆனால் பாலிவுட்டில் கூச்சப்படாமல் எல்லை மீறி படம் எடுப்பவர்களும் உண்டு.அப்படியாக ஒரு படம் ஹிந்தியில் உருவாகி வருகிறது.

625.0.560.320.100.600.053.800.720.160.90 (1)

 

பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி பாபுமோஷாய் ,”பந்தூக்பாஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். குஷன் நந்தி இயக்கியுள்ள இந்த படம் வரும் 25-ம் தேதி ரிலீஸாகிறது.

இதில் பல இடங்களில் செக்ஸ் காட்சிகளை இயக்குனர் வைத்திருக்கிறாராம். சென்சார் போர்டே பல காட்சிகளை கட் பண்ண சொல்லி உத்தரவு போட்டிருக்கிறார்கள்.இதில் நடித்த ஹீரோ சித்திக்கின் மனைவி ,தன் கணவ்ர் அப்படியான காட்சிகளில் நடிக்கிறார் என தெரிந்ததும் 2 நாட்களுக்கு மேலாக பேசாமலேயே இருந்துள்ளார். பின் எப்படியோ அவரை சமாதானப்படுத்தி சித்திக்கி பேச வைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்   ஒபன் டாக்

நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் மனதில் சீக்கிரம் இடம் பிடித்தவர். சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தற்போது சூர்யா, விக்ரமுடன் நடித்து வருகிறார்.

Keerthy Suresh Wallpaper

மிகவும் பிசியான இவர் ஐதராபாத் விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துள்ளார். “தமிழில் இவ்வளவு பெரிய இடம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. முன்னணி நடிகர்கள் தான் இந்த உயரத்தில் என்னை நிற்கவைத்து விட்டார்கள். அந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரி.

படத்தில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எனக்கு வரும் வாய்ப்பை நான் விட்டுவிடாமல் பிடித்து வருகிறேன். நேரம் கிடைக்கும் போது அப்பா, அம்மா, அக்கா என எல்லோரும் கோவிலுக்கு போவோம். என் தோழிகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டது “என கூறினார்.

எல்லோருடனும் நடித்து விட்டீர்கள் அடுத்து அஜித்துடன் தானா? என கேட்டபோது “தெரியவில்லை. நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

 
 
 
 

This post has been viewed 187 times