எடப்பாடி பழனிச்சாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா?

 

எடப்பாடி பழனிச்சாமியால்
மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா?

அதிமுக  கட்சியில் ஒவ்வொரு நாளும் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. தமிழக அரசியல், பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது. இன்றைய காட்சி, நாளைய குப்பை காட்சியாகி விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமிஅணியும், ஓ. பன்னீர் செல்வம் அணியும் இணைந்து விட்டாலும், எடப்பாடி பழனிச்சாமியால், சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா? என்ற கேள்வியை அரசியலாளர்கள் எழுப்பியுள்ளனர்.

7d215f22eb7120ae723136a99f83d2a9

தமிழக சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை: 234. இதில் அ.தி.மு.க கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை:134. இந்த நிலையில், அதிமுக கட்சி தற்போது மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ளது. இதில் எடப்பாடி அணியும், பன்னீர் செல்வம் அணியும் இணைந்து விட்டன. எடப்பாடி அணியில் 122 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். பன்னீர் செல்வம் அணியில் 10 எம்.எல்.ஏ.க்கள் வரை இருந்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து ஏறத்தாழ 25 எம்.எல்.ஏ.க்களை, டி.டி.வி. தினகரன் தன் பக்கம் இழுத்து விட்டார். இதனைத்தவிர, “எடப்பாடி அணியில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலர் “சிலிப்பர் செல்”களாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் தினகரன் சமீபத்தில் கூறி,அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறார். இதனைத்தவிர, திவாகரனின் ஆதரவாளர்கள் ஏறத்தாழ 10 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

இது போன்ற நிலையில், ஆளுனரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், எடப்பாடிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள். அதே நேரத்தில், சட்டசபையில், இந்த அரசின் மீது, தினகரன் அணி அல்லது 98 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை கொண்ட தி.மு.க. அணி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை (திமுக:89., காங்கிரஸ்:8, இந்திய யூனியன் மு.லீக்: 1) கொண்டு வந்தால், எடப்பாடியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விரைவில் பதில் கிடைத்து விடும் என எதிர்பார்க்கலாம்…!!!.

 
 
 
 

This post has been viewed 161 times