வாழ்வின் அந்தரங்கம்

 

 வாழ்வின் அந்தரங்கம்

* இப்போதுள்ள பெண்கள், திருமணம் முடிந்த பிறகு, பிள்ளை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Husband-wife-dispute-problem-solution

* தற்போதைய காலத்தில் இதுபோன்ற மன நிலையில்தான் புதுமணத் தம்பதிகள் இருக்கிறார்கள். குழந்தை பேற்றை பல ஆண்டுகள் தள்ளிப்போடுவது, குடும்பத்தில் குழப்பத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தி விடும். எனவே காலாகாலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதே சிறந்தது.
* டாக்டரம்மா ! எனது நண்பன், சமீபத்தில் ஒரு இளம் விதவையை திருமணம் செய்து கொண்டான். அவளோ, அவனது முன்னாள் காதலி. அவளது கணவன் இறந்து விட்டதால், தனது காதலியை அவன் திருமணம்செய்து கொண்டான். ஆனால், இப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. இதனால் பிரிந்து விடலாம் என்று அவன் நினைகிறான். உங்கள் ஆலோசனை என்ன?

309044-divorce26-03-2006

* இளம் விதவையை திருமணம் செய்து கொள்வது, ஒரு உன்னத செயலாகும். மற்றவர்கள் பேசுவதை, ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இருவரும் மனம் விட்டு பேசி, பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள். பிரிவது நல்லது அல்ல.

* டாக்டர்! நான் ஒரு பிளஸ்-2 மாணவி. மாலையில் நான் டியூசன் சென்று வருகிறேன். திருமணமான டியூசன் ஆசிரியரின் குறும்பு தாங்க முடிய வில்லை. நான் என்ன செய்வது?

maxresdefault

* வாழ்க்கையில், நல்ல ஒழுக்கமும்தான், விலையேறப்பெற்ற பெரிய சொத்து. அதனால், தவறான செயல்களுக்கு உள்படுத்தும் டியூசன் ஆசிரியர் பற்றி பெற்றோரிடம் கூறுவதுடன், வேறு ஒரு டியூசன் சென்டரில் டியூசனுக்கு செல்வது நல்லது.

* டாக்டரம்மா ! எனது தோழிக்கு , அவரது தாயார் மட்டுமே உள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவருக்காகவே என் தோழி, திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வாழ்கிறார். இப்போது அவளுக்கு 30 வயது ஆகி விட்டது. உங்கள் ஆலோசனை என்ன?

2016-12-21-12-42-14-adultdaughterwithmom

* திருமணத்தை தள்ளிப்போடுவது நல்லதல்ல. நேர்த்தியான வரன் அமையும் போது, தனது தாயாரின் நிலையை எடுத்துக்கூறி, அதற்கு சம்மதிக்கும் மணமகனை திருமணம் முடித்துக் கொண்டு, இரண்டு பேருமாக , நோய்வாய்ப்பட்ட அந்த தாயாரை கவனத்துக்கொள்வதே சிறந்ததாகும்.

 
 
 
 

This post has been viewed 280 times