சுதந்திரம்…!!!

 

சுதந்திரம்…!!!

இந்த வார “வாலிப முத்து” பகுதியில், “சுதந்திரம்” என்ற தலைப்பில் சில கருத்துக்களை பார்க்க இருக்கிறோம். சுதந்திரம் என்பது நாட்டுக்கு மட்டுமல்ல., தனி மனிதனுக்கும் மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால், சுதந்திரம் என்பது, ஒரு கட்டுப்கோப்புக்குள் இருக்க வேண்டும். “சுதந்திரம் என்பது பிணைக்கப்பட்டிருக்கும் விலங்குகளை உடைத்தெறிவது மட்டுமல்ல; பிறரின் சுதந்திரத்தை மதித்தும், மேம்படுத்தியும் வாழ்வது தான்…!” என்று நெல்சன் மண்டேலா கூறியுள்ளார்.

Man-Freedom

சுதந்திர இந்தியாவில் நாம் அனைவரும் சுதந்திர காற்றை 71–வது ஆண்டாக சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்று பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறோமே, உண்மையில் நாம் சுதந்திரக் காற்றைத் தான் சுவாசிக்கிறோமா? இல்லை என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக அமையும்…!

இந்த குழப்பப் போராட்டத்தில் பெரும் பங்கு வகிப்பது தனி மனித சுதந்திரம். தனி மனித சுதந்திரம் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கும் அனைத்து சுதந்திரமும் ஒரு தனி மனிதனால் அனுபவிக்க முடிகிறதா? என்ற கேள்விக்கும் பதில் “இல்லை” என்பதாகத்தான் அமையும்…!

இந்திய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது என்று தினம் தினம் மேடைப் பேச்சுக்கள் நம் செவிகளைத் துளைத்துக் கொண்டுதானே இருக்கிறது…! காரணம் என்ன? இந்திய மக்கள் தொகையில் 68% இளைஞர்கள் என்பதால் மட்டும் தானா? அவர்களின் ஆற்றலையும் வேகத்தையும் திறமையையும் நம்பித்தானே…!

அப்படியிருக்க, இளைஞர்களின் ஆற்றலையும் துடிப்பையும் பற்றி கூவிக் கொண்டிருந்தால் மட்டும், அவை விஸ்வரூபம் எடுத்து விண்ணை முட்டி விடுமா? கூண்டினுல் அடைபட்டு கிடக்கும் பறவையாய் தூங்கிக்கொண்டிருக்கும் இளைஞனின் சிந்தனையை சிறகடித்து பறக்கச் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் சமூகத்திற்குரியதுதானே?

சிறகடிக்கும் சிந்தனை தான் சிகரம் தொடும். இந்த சமூகத்தில் இதற்கான பொறுப்பை முதலில் பெற்றோர்கள் தான் ஏற்க வேண்டும். ஏனெனில் ஒரு இளைஞனை குழந்தையிலிருந்து அரவணைத்து பேணிக்காப்பது அவர்கள் தான். அவர்களின் அரவணைப்பில் அலட்டல் இல்லாமல், பாசத்தில் பகிர்வு இல்லாமல், கண்டிப்பில் கட்டாயம் இல்லாமல், வளர்ப்பில் அடுத்தவர் வாசனை இல்லாமல் அவர்களின் சுய சிந்தனைகளை மதித்து, பாராட்டி ஊக்குவித்து வளர்த்தால் நாளை எத்தனையோ அப்துல் கலாம்களை நாம் கண்கூடாகக் காண முடியும்…! ஆம், அன்று அப்துல் கலாமின் தந்தை, கலாமின் ஆர்வத்திற்கு தடை போடாமல் அனுமதித்ததால் தான், உலகம் போற்றும் விஞ்ஞானியாகவும், இந்தியாவின் முதல் குடிமகனாகவும் அவரால் உயர முடிந்தது. ஆனால் இன்றைய இளைஞர்களின் விருப்பங்கள் கல்வி முதல் காதல் வரை, நட்பு முதல் நலங்கு வரை, உணவு முதல் உறவுகள் வரை பெரும்பாலும் எல்லாமே மறுக்கத்தானேப் படுகிறது…!

உதாரணமாக உண்ண மறுக்கும் குழந்தையைக் கூட அதன் தாய், நீ நிலவைப் பார்த்துதான் சோறு உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்தித்தானே உண்ண வைக்கிறாள்…! ஒரு வேளை நிலாச்சோறு பிடிக்காமல்தான் அந்த குழந்தை அழுகிறதோ என்னவோ? ஏன் கல்லூரிக்கு செல்லும் போது கூட, நீ இந்த பிரிவில் தான் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பெற்றோர் எத்தனை எத்தனை?
இன்றைய இளைஞர்கள் நாளைய இந்தியாவின் தூண்கள் என்று சொல்லி சொல்லியே வளர்த்ததாலோ என்னவோ, மண்டபத்தின் தூண் போன்று தனித்தனியே சிதறித்தானே கிடக்கிறார்கள்…! அந்த தூண்களை இணைக்கும் கான்க்ரீட் முற்றமாக மாறுவதற்கும் அதன் மீது தாய் நாட்டைத் தூக்கி நிறுத்துவதற்கும் யாரும் தயாராக இல்லை.

ஒரு வேளை அவர்களை சுயமாக சிந்திக்கவும், செயல்படவும் அனுமதித்திருந்தால் நிச்சயமாக இந்தியா இளைஞர்கள் தாங்கும் முற்றத்தின் மேல், ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை…! சுதந்திரமான சிந்தனையும் செயலும் மட்டுமே இளைஞர்களை மட்டுமல்லாமல், அவர்கள் தாங்கப் போகும் தாயகத்தையும் வளமாக்கும். “இளைஞர்கள் கடந்து செல்லும் பாதையில் உள்ள முட்களைக் காட்டுங்கள்; ஆனால் அவர்கள் பாதையை மாற்றாதீர்கள்…!”

இளைஞ‌ர்க‌ள் படி‌த்தா‌ல் ம‌ட்டு‌‌ம் போதாது, இ‌ந்‌திய ம‌க்க‌ள் தொகை‌யி‌ல் மூ‌ன்‌றி‌ல் ஒரு பங்கு இரு‌க்கு‌ம் இளைஞ‌ர்க‌ள் நா‌ட்டை‌க் க‌ட்டியெழு‌ப்புவதி‌லு‌ம், நா‌ட்டி‌ன் வெ‌ற்‌றி‌க்கு‌ம் தங்களை அ‌ர்‌ப்ப‌ணி‌க்க வே‌ண்டு‌ம்.

உல‌கி‌ல் ‌சில நாடுகளு‌க்கு‌த்தா‌ன் இளைஞ‌ர் ம‌க்க‌ள் தொகை எ‌ன்ற வர‌ப்‌பிரசாத‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது. அ‌ந்த வகை‌யி‌ல் இ‌ந்‌திய ம‌க்க‌ள் தொகை‌யி‌ல் ஒ‌வ்வொரு மூ‌ன்றாவது குடிமகனு‌ம் 20 வயது‌க்கு உ‌ட்ப‌ட்ட இளைஞனாக இரு‌ப்பது ந‌ம் நாட்டை இளமையோடு இரு‌க்க‌ச் செ‌ய்து‌ள்ளது. இளைஞ‌ர்க‌ள் படி‌த்தா‌ல் ம‌ட்டு‌‌ம் போதாது, ஆளுமை‌த் த‌ன்மை‌யி‌ன் அனை‌த்து ‌நிலைக‌ளிலு‌ம் த‌ங்க‌ளி‌ன் ‌‌திறனை‌ப் சோ‌தி‌த்து‌ப் பா‌ர்‌ப்பதுட‌ன் நா‌ட்டி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌த் தேவையான கடினமான சவா‌ல்களை எ‌தி‌ர்கொ‌ள்ள மு‌ன்வரவே‌ண்டும்.

இளைஞ‌ர்க‌ளின் மன‌தி‌ல் நமது குடியர‌சி‌ன் ம‌தி‌ப்பு, ப‌ண்பாடு, ப‌ன்முக கலா‌ச்சார‌த்‌தினை ஆழமாக ப‌திந்துள்ளது. நா‌ட்டி‌ன் வள‌ர்‌ச்‌சி நடவடி‌க்கைக‌ளி‌ல் இளைஞ‌ர்க‌ள் ஈடுபடுவது நா‌ட்டி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ம், வெ‌ற்‌றி‌க்கு‌ம் மு‌க்‌கிய கார‌ணியாகு‌ம். எனவே இளைஞ‌ர் நல‌ன் சா‌ர்‌ந்த ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு அ‌திக மு‌ன்னு‌ரிமை‌க் கொடு‌த்து, ‌கிராம‌ப் புற‌ங்க‌ளி‌ல் க‌ல்‌வியை ‌வி‌ரிவு‌ப்படு‌த்தவு‌ம்,‌ கிராம‌ப்புற வள‌ர்‌ச்‌சியை‌ உருவா‌க்க வேண்டும்.

நா‌ட்டி‌ன் வள‌ர்‌ச்‌சி, சமுதாய‌த்‌தி‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ம், நா‌ட்டை‌க் க‌ட்டி எழு‌ப்புவத‌ற்கு‌ம் இளைஞ‌ர்க‌ள் எ‌ங்கெ‌ல்லா‌ம் ‌சிற‌ப்பான ப‌ணியை ஆ‌ற்ற முடியுமோ, அ‌ங்கெ‌ல்லா‌ம் இளைஞர்கள் அமை‌தியையு‌ம், அத‌ற்கான ப‌ணிகளையும் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம். பொருளாதார‌த்‌தி‌ல் வளமான வள‌ர்‌ச்‌சியை‌ப் பெ‌ற்று‌ள்ளதாகவு‌ம், தற்போதைய தேவை ஒழு‌‌க்க‌ம், வள‌ர்‌ச்‌சி‌க்கான கார‌ணிக‌ளி‌ல் அ‌திக கவன‌ம் மட்டு‌ம்தா‌ன். ந‌ம்முடைய பண்டைய கால ப‌ண்பாடு‌ம், ந‌வீன இ‌ந்‌தியாவு‌ம் எதிர்கொ‌ள்ளு‌ம் ‌பிர‌ச்சனைகளை எ‌தி‌ர்கொ‌ள்ளவு‌ம், அத‌ற்கான ‌தீ‌ர்வுகளை கண்ட‌றிவ‌திலு‌ம் ந‌ம்முடைய ‌பிரகாசமான மாணவ – மாண‌விக‌ள் த‌ங்களை வெளி‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.

இந்த கருத்துக்களின் படி இளைஞனே…! நீயும் உன் வாழ்க்கையை அமைத்துக்கொள். சுதந்திர இந்தியாவில் உன் வாழ்க்கையில் முத்திரையை பதிவு செய். உன் பணி உனக்கும், உன் குடும்பத்துக்கு மட்டும் நலம் அளிக்காமல், இந்த நாட்டுக்கும் நல்லதை செய்யும் வாழ்க்கையாக இருக்க வேண்டும், வாலிபனே…!!!.

 
 
 
 

This post has been viewed 254 times