சத்தியம் பதில்கள்

 

சத்தியம் பதில்கள்

( தாமரைச்செல்வன், மதுரை):
இந்தியா–சீனா போர் மூண்டால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?

இந்தியா–சீனா இடையே போர் மூண்டால், தமிழகத்துக்கு உடனே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாலும், போர் மிகப்பெரிய அளவில் நடந்தால், சீன கப்பல்களாலும், நீர்மூழ்கி கப்பல்களாலும், தமிழகத்துக்கு ஆபத்து ஏற்படலாம். ஆனால் அந்த அளவுக்கு நிலைமை போகாது என்று உறுதியாக நம்பலாம்.

(சுரேஷ், சென்னை):
உத்தரபிரதேச அரசு மருத்துவ மனையில், ஆக்சிஜன் இல்லாததால் 67 குழந்தைகள் உயிர் இழந்துள்ளார்களே., இதற்கு யார் பொறுப்பு?

கண்டிப்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தான் பொறுப்பு. ஆனால் அதற்கு பொறுப்பு ஏற்று அவர் அறிவிப்பு எதையும் வெளியிட வில்லையா?

( சந்தோஷ், மதுரை):
தமிழக முதல்வர் பழனிச்சாமியை, பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்துகிறார் என்று எதிர்க்கட்சியினர் கூறுவது உண்மையா?

கண்ணை கட்டிக்கொண்டு காட்டுக்குள் வழி நடத்துவது போல்தான் இருக்கிறது. இப்போதைய நிலையில், எடப்பாடிக்கு, மோடியை விட்டால் வேறு வழியும் இல்லை என்பதே உண்மை.

(இப்ராகிம், திருநெல்வேலி):
தமிழகத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி அரசு, மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அரசுக்கு நெருக்கமாக இருக்கிறதே., இதனால் இஸ்லாமியர்களின் ஆதரவை அதிமுக அரசு இழந்து விடும் போல் இருக்கிறதே!!

மத்தியில் இருக்கும் பாஜக அரசுக்கு ஆதரவான குரலை, ஜெயலலிதா எழுப்ப வில்லை. ஆனால், இப்போது முதல்வர் எடப்பாடி அரசு மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டுகிறார். இதனால் இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.

(தமிழ்வாணன், சென்னை):
மத்திய அரசின் “பெட்ரோலிய மண்டலம்” திட்டம் காரணமாக டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களே? அவர்களது நிலை என்ன ஆகும்?
இப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெல்டா விவசாயிகளுக்கு இனி வரும் காலங்கள், போராட்டமே வாழ்க்கையாகி விடும்.

( பால்பாண்டியன், சென்னை) :
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாரதீய ஜனதா கட்சி, தனது ஆளுமையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறதே., இதற்கு பாஜக-வுக்கு பலன் கிடைக்குமா?
இதற்காகத்தான் அமித்ஷா திட்டமிட்டு செயல்படுகிறார். இன்னும் சில காலத்தில் தமிழகத்தில் பாஜக வின் பலம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

( ராஜேஷ், திருத்தணி):
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு தேவை இல்லை என்ற சில தமிழக அரசியல் கட்சிகளின் கருத்து ஏற்புடையதா?
தரமான மருத்துவர்கள் உருவாக வேண்டும் என்றால், நீட் தேர்வு தேவை. நீட் தேர்வுக்கான கேள்விகள், சி.பி,எஸ்.இ. பாடத்திட்டத்தின் படி எடுக்கப்படுவதால், தமிழக கிராமப்புற மாணவர்கள், தங்களை இந்த பாடத்திட்டத்துக்கு ஏற்றபடி தயார் படுத்திக் கொள்ள வேண்டும். காலத்துக்கு ஏற்க நாமும் நமது தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

( சுமதி, சென்னை):
அதிமுக-வில் தற்போது இரு அணிகளும் ஓரணியாக ஆகி விட்டதால், திமுக-வுக்கு ஆட்சி என்பது வரும் காலத்தில் கேள்விக்குறியாகி விடுமா?
எதையும் நிச்சயமாக சொல்ல முடியாது. தமிழக மக்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை இப்போதே நிர்ணயிக்க முடியாது அல்லவா?

 
 
 
 

This post has been viewed 134 times