போலீஸ் கிரைம்

 

 போலீஸ் கிரைம்

12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி படுகொலை!
கொலையாளியின் வீட்டை மாணவனின் தாயார் அடித்து நொறுக்கினார் !!

திருச்சி பொன்மலைப்பட்டியை சேர்ந்த மாநகராட்சி துப்புரவு தொழிலாளியான சாந்தி என்பவரின் மகன் கார்த்திகேயன் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

TCY_12thstudntt_murder_13

இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் என்பவர், கார்த்திகேயனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் கார்த்திகேயன், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது மகன் கொல்லப்பட்டதை அறிந்த தாய் சாந்தி ஆத்திரத்தில் லட்சுமணன் வீட்டுக்கு சென்று, அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினார்.

தகவல் அறிந்து வந்த பொன்மலை போலீசார், அவளை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லட்சுமணனை தேடி வருகின்றனர்..

தாயின் கண் முன்னே கல்லூரி மாணவி கடத்தல்

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள், ராஜு-கோவிந்தமாள் தம்பதி. இவர்களது மகள் ஜோதி, நாமக்கலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

download (2)

 

இவர் கல்லூரிக்கு செல்ல நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனது தாயுடன் கல்லூரி பேருந்துக்கு காத்திருந்தபோது, கார் ஒன்று ஜோதியின் அருகே வந்து நின்றது. காரில் இருந்த நபர்கள் ஜோதியை வலுக் கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றினர். இதனைக் கண்ட கோவிந்தம்மாள் தனது மகள் கடத்தப்பட்டதை அறிந்து கூச்சலிட்டுக்கொண்டே மகளை காப்பாற்ற ஜோதியின் காலை பற்றி இழுத்துள்ளார். ஆனால் கார் அங்கிருந்து வேகமாக சென்றதால் கோவிந்தம்மாளின் கை நழுவி அவர் சாலையில் விழுந்தார்.

ஜோதியுடன், கார் பறந்து விட்டது. அன்னதானப்பட்டி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் இந்த கடத்தல் சம்பவத்தால்,அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது..

 
 
 
 

This post has been viewed 125 times