சொத்துக்குவிப்பு வழக்கை, மீண்டும் விசாரிக்க முடியாது

 

சொத்துக்குவிப்பு வழக்கை, மீண்டும் விசாரிக்க முடியாது

சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில், கூடுதல் மனுவை சசிகலா தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.

3D36AF1700000578-4224960-image-m-5_1487112046187

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதையடுத்து மூன்று பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் பிப்.15–ம் தேதி அடைக்கப்பட்டனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனுவை, மூன்று பேரும் கடந்த மே.3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மே.10–ம் தேதி வழக்கு எண் ஒதுக்கியது. சீராய்வு மனு விசாரணைக்கு வரும் முன்பாகவே, மூல வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பினாகி சந்திர கோஷ் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார்.

இதனால், மற்றொரு நீதிபதியான அமித்வராய் தலைமையிலான அமர்வு, சசிகலாவின் சீராய்வு மனுவை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 18–ம் தேதி, ”இந்த வழக்கை நீதிபதிகள் அமத்வராய், ரோஹிண்டன் நரிமன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கும்” என்று, உச்சநீதிமன்றம் அறிவித்தது.நீதிபதி ரோஹின்டன் நரிமனின் தந்தை குற்றவாளி தரப்பில் ஆஜராகி ஏற்கனவே வாதிட்டதால், இந்த வழக்கில் அவரது மகன் தீர்ப்பளிக்கும் ஸ்தானத்தில் இருக்கக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, நீதிபதி ரோஹின்டன் நரிமன், இந்த வழக்கில் இருந்து விலகினார். இந்த நிலையில், சசிகலா உள்ளிட்ட மூவரின் சீராய்வு மனுக்களும் ஆக.22–ம் தேதி. நீதிபதிகள் பாப்டே மற்றும் அமிரத்வராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது, சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகே ஜெயலலிதா காலமானார் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே விசாரிக்க வேண்டும் என்ற மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டு, ஏற்கனவே விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தனர்….!!!.

 
 
 

1 Comment

  1. madhavaraman says:

    திருமதி சசிகலா அவர்களை நினைத்து பாவம் என்பதா பரிதாபம் என்பதா புரியவில்லை.எதுவும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அவர் இப்போதாவது புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன்.

    ஆர்.மாதவராமன்
    31 / 14 சி,தெற்கு மாடத் தெரு
    கிருஷ்ணகிரி-635001 .

 

This post has been viewed 158 times