கமர்கட்

 

கமர்கட்

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – ஒரு கப்,
வெல்லம் – முக்கால் கப்,
நல்லெண்ணெய் – அரை டீஸ்பூன்

செய்முறை:-

துருவிய தேங்காயை மிக்ஸியில் சேர்த்து நீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரையவிட்டு, அடுப்பில் ஏற்றி, கொதி வந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி நுரைக்கவிடவும்.

sl2219

அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கி எண் ணெய் சேர்க்கவும். கலவை நன்கு முற்றிய நிலையில் இறக்கி, சிறிய நெல்லி அளவு உருண்டைகள் பிடித்தால்… கிராமிய மணத்துடன் கலக் கல் கமர்கட் ரெடி…!

 
 
 
 

This post has been viewed 224 times